என் மலர்
நீங்கள் தேடியது "Women Dead"
- கடந்த சில நாட்களாக தியாகராஜன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தியாகராஜனை திட்டியுள்ளார்.
- மனமுடைந்து காணப்பட்ட தியாகராஜன் அத்திவாடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் எல்லப்பா. இவரது மனைவி மஞ்சுளா (வயது38). இவர் ஓசூரை அடுத்த கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மஞ்சுளா தென்பெண்ணையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியை அடுத்த தின்னூரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது31). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தியாகராஜனை திட்டியுள்ளார். இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் அத்திவாடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மின்சாரம் தாக்கிய பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
- போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை கே.கே. நகர் ராணி அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி (47). இவர் நேற்று மாலை வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொாண்டிருந்தார்.
அப்போது மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சுவிட்ச் ஆப் செய்ய சென்ற வசந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதை தொடர்ந்து கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாகிருஷ்ணன்-வசந்தி தம்பதிக்கு யுவஸ்ரீ(20) என்ற மகளும், விக்னேஷ் (18) என்ற மகனும் உள்ளனர்.
- மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஆத்துப்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மகள், குழந்தைகளை பார்த்து விட்டு இன்று வீடு திரும்பினார். லட்சுமியை மருமகன் தனசேகர், தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் செல்லாண்டி அம்மன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்ற போது சாலையில் இருந்த மண்ணில் இருசக்கர வாகனத்தின் சக்கரம் சரிந்து சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டி மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி லட்சுமி சாலையின் நடுவே விழுந்தார். அப்போது மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
- கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் சாலை ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது.
விபத்தில், இருவரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு அருகே கார் மோதி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமால்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (27.11.2024) பிற்பகல் 02.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆந்தாயி (71), லோகம்மாள் (வயது 56), யசோதா (54), விஜயா (53), கௌரி (52) ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த TN11 J 7270 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.