என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞர்.
    • தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்தநாள். கவிதைகள் மூலம் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞரான பாரதியாரை அவரது பிறந்தநாளில் போற்றுவோம். தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!
    • தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார்.

    மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!

    தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!

    மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய! என்று தெரிவித்துள்ளார்.

    • நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற இயலும்.

    எனவே மத்திய அரசு இதற்காக போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.


    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனித்தனியாக இருந்து படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
    • இருவரும் கல்லூரி மற்றும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை லட்சுமி நகா் பகுதியை சோ்ந்தவா் மருதாசலமூா்த்தி. இவரது மகள் அவந்திகா (வயது 19). அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்த ரமேஷ் மகள் மோனிகா (19). இவா்கள் இருவரும் திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தனா். மேலும் இருவரும் பகுதி நேரமாக அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை அவந்திகா வீட்டுக்கு மோனிகா சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது உள்ளே அவந்திகா, மோனிகா இருவரும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவந்திகா, மோனிகா இருவரும் கல்லூரி மற்றும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். படிக்கும் போதும் ஒன்றாகவே இருந்து படிப்பார்கள். ஆனால் அவர்களது பெற்றோர் ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்கமாட்டீர்கள். எனவே தனித்தனியாக இருந்து படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ? என்று பயந்த 2 பேரும் தற்கொலை செய்துள்ளது போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • ஜதி பல்லக்கு பாரதியாரின் நினைவு இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

    மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    இந்த ஜதி பல்லக்கு, மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
    • மழை, புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வு பல மடங்கு அதிகரித்து உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

    டங்ஸ்டன் நிறுவனம் தொடங்குவதற்கு மாநில அரசு அனுமதி அளிக்காத நிலையில், கடும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.

    மழை, புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. எக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    டெல்டா மாவட்டங்களில் அதிகம் உள்ள குடிசை வீடுகளை முற்றிலும் நீக்கி கான்கிரீட் வீடுகளாக மாற்றி, குடிசைகள் இல்லாத மாவட்டங்களாக டெல்டா மாவட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட புயல் நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 500 கோடி தேவை என மத்திய அரசின் உயர்மட்ட குழுவிடம் கடிதம் கொடுத்து உள்ளார். இதற்கு உரிய மதிப்பளித்து அந்த நிதியை அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தடப்பள்ளி, அரக்கன் கோட்டை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • இன்று திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 120 நாட்களுக்கு 8.5 டி.எம்.சி. அளவிற்கு வழங்கப்படும்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து ஆண்டு தோறும் தடப்பள்ளி, அரக்க ன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தடப்பள்ளி, அரக்கன் கோட்டை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அரசு அதை ஏற்று தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி. அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள், கொடிவேரி அணை பாசனதாரர் சங்க நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர்கள் குமார், ரத்தினகிரி உள்பட பலர் கலந்து கொண்டர். தண்ணீரானது சீறிப்பாய்ந்து வாய்க்காலில் சென்றது. கொடிவேரி அணை மூலம் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 120 நாட்களுக்கு 8.5 டி.எம்.சி. அளவிற்கு வழங்கப்படும்.

    உரிய காலத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பாசன சங்க நிர்வாகிகள் கூறும்போது, தமிழக அரசு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.

    • ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது.
    • பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையில் மோதின.

    மண்டபம்:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்டது. குறிப்பாக கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்ற அந்த புயல் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீண்டு வருவதற்குள் அடுத்ததாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல அறிவிப்பின்படி, இந்திய கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் பலத்த காற்று வீசும். அதன் வேகம் மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டராகவும், அதிகபட்சம் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும், இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

    அதைத்தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது. பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையில் மோதின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. அதன்படி இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

    கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீனவர்கள் முன்கூட்டியே எடுத்துள்ளனர்.

    மீன்பிடிக்க ஏற்பட்டுள்ள தடையால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே அடுத்தடுத்து மீனவர்கள் சிறைபிடிப்பு, இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீன்பிடி தொழில் சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. 

    • தனி நபர்களுக்கு அனுமதி அளித்திருப்பது மதுக்குடிக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வருங்கால சமுதாயம் சீரழியவும் வழி வகுக்கிறது.
    • தனியாருக்கு வழங்கப்பட்ட டாஸ்மாக் மது விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுவால் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் என பலதரப்பட்டவர்களும் உடல் அளவில், மனதளவில் பாதிக்கப்பட்டு சமூக விரோதச் செயல்கள் அதிகரிப்பதை ஊடகச் செய்திகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

    இச்சூழலில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் வட்டார பேரூராட்சி பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க தனி நபர்களுக்கு அனுமதி அளித்திருப்பது மதுக்குடிக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வருங்கால சமுதாயம் சீரழியவும், சட்டம் ஒழுங்கு சீர்கெடவும் வழி வகுக்கிறது.

    எனவே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாருக்கு வழங்கப்பட்ட டாஸ்மாக் மது விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுவிலக்குக்கு வழி வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
    • மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது

    கார், ஆட்டோவை தொடர்ந்து பைக் டாக்ஸி சேவையின் பயன்பாடு முக்கிய நகரங்களில் அதிகரித்து வருகிறது.

    மோட்டார் வாகன விதிகளின்படி இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.

    இந்நிலையில் விதிகள் மீறப்படுவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரிடம் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    அதன்படி, வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பைக் டாக்ஸிக்களை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • திட்டத்தின் வழி பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி "கலைஞர் கைவினைத்திட்டம்" என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கான அரசு ஆணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

    கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு. பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல். பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, நகைசெய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை போன்ற தொழில்கள்.

    துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை. பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள். பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இத்திட்டத்தின் வழி பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. www.msmeonline.in.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×