தமிழ் சமூகத்துக்கும் இந்தியாவின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய! - மு.க.ஸ்டாலின்

உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார்.
தமிழ் சமூகத்துக்கும் இந்தியாவின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய! - மு.க.ஸ்டாலின்
Published on

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!

தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!

மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய! என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com