என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.
இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.
பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.
மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று கோஷம் விண்ணதிர எழுப்பி வணங்கினர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
தீபம் ஏற்ற இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஊர்களில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் மகா ஜோதியை காண திருவண்ணாமலை திரண்டுள்ளனர்.
- ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஒட்டியவாறு பழைய கோட்டை ஏரி அமைந்துள்ளது.
- புயல் தாக்கத்தில் நிரம்பிய நிலையில் மதகுகள் திறக்க முயன்ற பொழுது மதகுகள் திறக்க முடியாத நிலை உள்ளது.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஒட்டியவாறு பழைய கோட்டை ஏரி அமைந்துள்ளது.
74 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரியில் 2 மதகுகள் உள்ள நிலையில் இந்த ஏரி கடந்த ஃபெஞ்சல் புயல் தாக்கத்திலே நிரம்பிய நிலையில் மதகுகள் திறக்க முயன்ற பொழுது மதகுகள் திறக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் நீர் சரியான முறையில் வெளியேறாமல் நீர் பிடிப்பு பகுதியாக உள்ள பகுதியை தாண்டி அருகில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வீடுகளில் நீர் சூழ்ந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியின் மதகு திறப்பதற்கான வழிவகைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
- திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும்.
நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.
தென்தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 16-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 17-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.
- உலக செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார்.
18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 மற்றும் கடைசி சுற்று போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்ட இந்திய வீரர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்தப் போட்டியில் 58வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இதன் மூலம் இறுதிப் போட்டியில் வென்றதோடு, உலகின் செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இதனை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
உலகின் இளம் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு பிரதமர் மோடி துவங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக செஸ் சாம்பியனாக வெற்றி பெற்ற இளம் தமிழக வீரர் குகேஷ்-க்கு ஒட்டுமொத்த இந்தியாவும் உங்கள் வெற்றியில் பெருமை கொள்கிறது என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
- தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பிற்பகல் 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிற்பகல் 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
- சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பை தடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
நாட்டில் பெருகி வரும் விரைவு வர்த்தகம் காரணமாக சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பு அடைவதை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
- வல்லக்கடவு சோதனை சாவடி, தேக்கடி படகு இறங்குதளம் வழியே கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் 2 லாரிகளில் தளவாடப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் வல்லக்கடவு வழியாக சென்றனர்.
அப்போது அங்குள்ள வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளதாக கூறிய போதிலும் அந்த கடிதம் தங்களுக்கு வரவில்லை எனவும், வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கூறினர்.
இதனால் வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.
இச்சம்பவத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் விரைவில் வாகனங்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணி கட்டுமான பொருளை எடுத்து செல்ல கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து வானங்களில் கட்டுமான பொருட்கள் எடுத்து செல்வதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
வல்லக்கடவு சோதனை சாவடி, தேக்கடி படகு இறங்குதளம் வழியே கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- வடபெரும்பாக்கம் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
- ஜி.என்.டி. சாலை வழியாக ஆந்திராவுக்கு செல்வது வழக்கம்.
சென்னை:
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் வடபெரும்பாக்கம் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாதவரத்தில் இருந்து ஜி.என்.டி. சாலை வழியாக ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் வடபெரும்பாக்கம் சாலை வழியாக செங்குன்றம் சென்று, பின்னர் ஜி.என்.டி. சாலை வழியாக ஆந்திராவுக்கு செல்வது வழக்கம்.
தற்போது வடபெரும்பாக்கம் சாலையில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால் வடகரை, விளாங்காடுபாக்கம், அழிஞ்சிவாக்கம், ஞாயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வடபெரும்பாக்கம் வழியாக சென்னைக்குள் வர முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.
அவர்கள் சுமார் 4 கி.மீ. தூரம் சுற்றி கொசப்பூர் சாலை வழியாக மீண்டும் ஜி.என்.டி. சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் வடகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் சென்னைக்கு வர இன்று காலையில் தங்கள் வாகனங்களில் வடபெரும் பாக்கம் சாலை வழியாக வந்தனர். அப்போது சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவர்கள் மீண்டும் புழல் சென்று ஜி.என்.டி. சாலை வழியாகவும், மற்றும் சிலர் கொசப்பூர் சாலை வழியாகவும் சென்றனர். இதனால் அவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
சென்னையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் வடபெரும்பாக்கம் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இந்த சாலையானது மாதவரம் தொகுதிக்குள் வருகிறது. இந்த பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் அதன் வழியாக மழைநீர் செல்லாமல் சாலையிலேயே தேங்கி கிடக்கிறது.
இதனால் ஒவ்வொரு முறையும் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி புழல் ஏரி கால்வாயில் விடுகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.
- உலக செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார்.
18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 மற்றும் கடைசி சுற்று போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்ட இந்திய வீரர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்தப் போட்டியில் 58வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இதன் மூலம் இறுதிப் போட்டியில் வென்றதோடு, உலகின் செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இதனை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. இதைத் தொடர்ந்து செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழக அரசு ரூ. 5 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
- நாடு மிகப்பெரிய ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளது.
- ஆரம்பத்திலேயே மக்கள் மற்றும் அரசியல் சக்திகள் எதிர்த்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மணிக்கூண்டில் கடந்த 22.2.2016-ம் தேதி மக்கள் நல கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் உள்பட ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 12 பேர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இதனை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் 4 மாதத்திற்குள் முடித்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் இன்று திண்டுக்கல் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் சவுமியா மேத்யூ முன்பு வைகோ உள்பட 12 பேர் ஆஜரானார்கள். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பின் கோர்ட்டுக்கு வெளியே வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தற்போது நாடு மிகப்பெரிய ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை பா.ஜ.க. கொண்டுவர திட்டம் தீட்டி வருவதால் அமெரிக்காவை போல அதிபர் ஆட்சிக்கு அடிகோலும் செயலை முன்னெடுத்துள்ளனர். வாரணாசியில் நடந்த இந்துத்துவா மாநாட்டடில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாட்டில் அமுல்படுத்த நினைக்கின்றனர்.
சிறுபான்மையின மக்களான கிறிஸ்தவர், முஸ்லீம், ஜெயினர்கள் ஆகியோரின் வாக்குரிமையை பறிக்கும் நிலையை கொண்டுவர துடிக்கின்றனர். இதனை ஆரம்பத்திலேயே மக்கள் மற்றும் அரசியல் சக்திகள் எதிர்த்து வருகின்றனர். இருந்தபோதும் இதுகுறித்து வலுவான போராட்டம் தேவை.
தற்போது கடுமையான மழை வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டதற்கு பா.ஜ.க. இன்னும் நிதி வழங்கவில்லை. அதற்குள் மற்றொரு மழை வெள்ளம் மக்களை மிரட்டி வருகிறது. குஜராத்தில் ஒரு மீனவர் இறந்தால் அதற்கு ராணுவமே செல்கிறது. ஆனால் தமிழகத்தில் மீனவர்களுக்கு தினந்தோறும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி ஒதுக்குவதிலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டிய நிதியை சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும்.
வாஜ்பாய் காலத்திலேயே பொது சிவில் சட்டம் குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் அதனை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசு அதனை நிறைவேற்ற துடித்து வருகிறது. ஜனநாயகத்திற்கு ஆபத்தாக விளங்கும் இதுபோன்ற சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விளக்கி வருகிறோம்.
உலக செஸ் சாம்பியன் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
ஃபெஞ்ஜல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பொழிவை சந்திக்க நேரிட்டது. விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு கொட்டி தீர்த்த அதிகன மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிதி கிடைக்காத பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களுக்கு நிவாரண வழங்க கோரியும் மேலும், நிவாரண வழங்காததை கண்டித்தும் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் உட்பட பொது மக்கள் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புதுச்சேரி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் பள்ளி பாழடைந்துள்ளதாகவும் பள்ளிகளில் பல இடங்களில் மின் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாழடைந்த பள்ளியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோவடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்ற தாசில்தாரை அருகே உள்ள மொளசூர் கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு அவரை முற்றுகையிட்டு தங்கள் ஊருக்கும் நிவாரணம் வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
- பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்கள் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனடியாக வடிந்தது. வெள்ளம் வடியாத பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது.
ஆனால் புறநகர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி பகுதிகளில் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி எம்.ஜி.ஆர். நகர், மேல்மா நகர், பிராட்டிஸ் சாலை, அம்மன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளை சுற்றி சாலையில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை திருவேற்காடு ராஜீவ் நகர், ராஜாங்குப்பம், எஸ்.பி.நகர் குடியிருப்பு, கோலடி, நூம்பல், ஏழுமலை நகர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
மாங்காடு சீனிவாசநகர், பத்மாவதி நகர், ஓம்சக்தி நகர், ஸ்ரீசக்ரா நகர் பகுதிகளில் தெருக்களில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், ஸ்டான்லி நகர், ராயபுரம் பனைமரத் தொட்டி, கல்மண்டபம் சாலை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் வைத்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். கோயம்பேடு ரெயில் நகரில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. சாலைக்கு மேலே ஒரு அடி அளவுக்கு தண்ணீர் செல்வதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து துண்டிக்கப்பட் டுள்ளது.

காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், அருந்ததி பாளையம் பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற் கொண்டனர். இதையடுத்து மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் முட்டளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒவ்வொரு பருவமழையின் போதும் இங்கு மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருப்பதாக கவலை தெரிவிக்கும் நோயாளிகள், இப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு அண்ணா நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும் இன்னும் சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கியுள்ள நீரில் இருந்து பாம்பு, விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் அச்சத்துடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்னர். அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு மழை வெள்ள நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை வரை செல்லும் சாலையில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நந்தி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி மழை வெள்ளம் காட்டாறு போல் சீறிப் பாய்கிறது. இதனால் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.






