என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இரா.நல்லக்கண்ணுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடை பெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இரா.நல்லக்கண்ணுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்ததுடன் கவிதை நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

    இந்தநிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டார்.

    பின்னர், விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:-

    விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும். காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன்; இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
    • வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

    பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்து அவர், "கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து செலவிட்டிருக்கிறோம். பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு தந்தது. மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ஐ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம்" என்றார்.

    • வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள்.
    • களம் 2026-இல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்.

    தூத்துக்குடியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதன்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் களம் 2026-இல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்!

    தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் கழகத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் கழக நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஞானசேகரன் அந்த மாணவியை பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்தது.
    • ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது.

    எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது.

    இந்நிலையில் சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு.
    • வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஃபெஞ்சல் புயல், அதிகனமழை உள்ளிட்டவற்றால், அனைத்து மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடமைகள் எல்லாம் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

    தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதன்மூலம் ஏற்பட்ட இழப்பினைச் சரி செய்வதற்கே அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இதனால் தமிழக மக்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

    இந்த நிலையில், தி.மு.க. அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பின்மூலம், பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாட முடியாத நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் 2025 பொங்கல் திருநாளை சிறப்புறக் கொண்டாடும் வகையில், எவ்வித பாகுபாடின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு.

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவர் சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி, டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மற்றும் டிசம்பர் 31ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் திறப்புக்கு தயாராகியுள்ளது.
    • கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவர் சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக குமரி மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்திலும், கடலின் நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைப் பகுதியிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது.

    திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.

    இந்நிலையில், கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளது.

    • முறையான அனுமதியின்றி, கல்வி நிறுவனங்களுக்குள் சம்பந்தமில்லாத நபர்களை அனுமதிக்கவே கூடாது.
    • பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்க முடியாது என எச்சரிக்கை.

    தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் அந்த கூட்டத்தில், "முறையான அனுமதியின்றி, கல்வி நிறுவனங்களுக்குள் சம்பந்தமில்லாத நபர்களை அனுமதிக்கவே கூடாது.

    கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து பதிவு செய்ய வேண்டும்.

    கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள், பணியாளர்கள் குறித்த பதிவு கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

    பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்க முடியாது.

    பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

    தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை பாதுகாப்பிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • மினி டைடல் பார்க் 63 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் அமைந்துள்ளது.
    • மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    மேலும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெல்வதை இலக்காக கொண்டு செயலாற்றுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.

    அந்த வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு, தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்த முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து சத்யா ரிசார்ட் சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார்.

    பிறகு, டைடல் பூங்காவில் புதிய நிறுவனங்களுக்கு இட ஒப்பந்த ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த மினி டைடல் பூங்கா தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இப்பூங்காவானது வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.

    சுமார் ரூ. 32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது.

    தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மேலும் ஒரு மைல்கல் திட்டமாக வடிவெடுத்துள்ளது.

    • 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளன.
    • நாம் அனைவரும் ஒன்று பட்டு பணியாற்றி அவருக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் பற்றி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அனைத்து கூட்டங்களிலும் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆரணி, போளூர், வந்தவாசி, கலசப்பாக்கம், கிழ்பெண்ணாத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை நிலையச் செயலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் உதயகுமார், சத்யா மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளன. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து இரவு பகல் பாராமல் அயராது உழைத்து கட்சித் தலைவர் விஜய்யை தமிழகத்தின் முதல்வராக ஆக்குவோம்.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் சுட்டிக்காட்டிய அனைத்து வேட்பாளர்களையும் நாம் அனைவரும் ஒன்று பட்டு பணியாற்றி அவருக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்து பணிகளிலும் கட்சி தோழர்கள் தீவிரமாக பணியாற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    கட்சித் தலைவர் விஜய் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதோடு மக்கள் பணிகளையும் எப்போதும் போல் சிறப்பான முறையில் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பேரறிவு சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது திராவிட மாடல் அரசு.
    • வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அந்த கடிதத்தில், " திருக்குறளை வங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் உலக அடையாளமாக திகழ்கிறார்.

    திருவள்ளுவர் சிலை, ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதுபோல தமிழ்நாடு தடைகளைத் தகர்த்து முன்னேறும்.

    உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும், தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும்.

    திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம்.

    வள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் அல்ல, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமூக நீதித் தத்துவத்தை வழங்கிய பேராசான்.

    குமரியில் காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

    பேரறிவு சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது திராவிட மாடல் அரசு.

    பேரறிவுச் சிலையின் வெள்ளி விழா கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.

    வெள்ளி விழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

    தமிழின் சிறப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.

    வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 3 ஆண்டுகளாக இந்த சுரங்கப்பாதை பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
    • போராட்டத்தின் போது ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் ரெயில்வே கேட் உள்ளது. இந்தபாதை அடிக்கடி மூடப்பட்டதால் அவசர தேவைக்கு அவ்வழியே செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதையடுத்து அண்ணாமலை நகரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சுரங்கப்பாதை பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டு இருப்பதை கண்டித்து அண்ணாமலை நகர் ரெயில்கே கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ×