என் மலர்
நீங்கள் தேடியது "பலாத்கார வழக்கு"
- பலாத்கார வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதால் நடவடிக்கை
- டி.ஐ.ஜி. உத்தரவு
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 4-ந் தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் ரெயில் முன்பு பாய்ந்தது தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாநிலம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
- கே.டி.சி. நகர், சமாதானபுரம் உள்பட மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே மாணவி பலாத்கார வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சார் என குறிப்பிட்டு ஒருவரிடம் போனில் பேசியதாகவும், அவரை மறைப்பதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் மாணவி பலாத்கார வழக்கில் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பாளையங்கோட்டை, டவுன், கே.டி.சி. நகர், சமாதானபுரம் உள்பட மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- ஞானசேகரன் அந்த மாணவியை பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்தது.
- ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது.
எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்நிலையில் சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது.
எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்நிலையில் நேற்று சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த அண்ணாசாலை போலீசார் முதற்கட்டமாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 7 வயது சிறுமி பலாத்கார வழக்கில் கோர்ட்டு உத்தரவு
- இழப்பீடு வழங்க பரிந்துரை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட் டம் ஆரணியை அடுத்த மேல் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன். இவரது நண்பர் கள் பாலாஜி, கார்த்திக்.இதில் பாலாஜி என்பவர் மேல்நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார்.
7 வயது சிறுமி பலாத்காரம்
கடந்த 2013-ம் ஆண்டு அக் டோபர் மாதம் இவர்கள் 3 பேரும் சேர்ந்து 7 வயது மதிக் கத்தக்க 3-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று கோழி இறைச்சி கடையில் வைத்து கூட்டு பலாத்காரத் தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப் பட்ட சிறுமி அவரது பெற் றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதைய டுத்து சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண் ணாமலை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத் தில் அமைந்துள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடை பெற்று வந்தது.
தலா 20 ஆண்டு சிறை
இந்த 3 பேர்களில் சமீபத் தில் மணிபாலன் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் வழக்கு விசா ரணை தொடர்பாக அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசா ரித்து வந்த நீதிபதி பார்த்தசா ரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி பலாத்கா ரம் செய்த பாலாஜி (வயது 36) மற்றும் கார்த்திக் (32) ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2ஆயி ரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதி பதி பரிந்துரை செய்தார்.






