என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.56,800-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.57,080-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமையான இன்று தங்கத்தின் விலையில் ரூ. 120 அதிகரித்துள்ளது. இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 7,150க்கு விற்பனையாகிறது.
இன்று 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 62, 392-க்கும், ஒரு கிராம் விலை ரூ. 7,799-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் விலை மாற்றமின்றி ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
29-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080
28-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080
27-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
26-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,000
25-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
- அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 331 கனஅடியாக குறைந்தது.
- அணையில் தற்போது 93.26 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.87 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 331 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் தற்போது 93.26 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
- போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைகழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்கின்றனர். பல்கலைகழக நிர்வாகம் மற்றும் மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை செய்கின்றனர்.
- பயணிகளின் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டது.
- பஸ் நிழற்குடைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பழுதுகள் சரி செய்யும் பணி நடைபெறும்.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக அனைத்து பஸ் நிலையங்களிலும் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிர தூய்மை பணிகள் நடந்தது.
அப்போது, குப்பைகள், கட்டிடக்கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டது. பயணிகளின் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2-வது கட்டமாக 1,363 பஸ் நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தீவிர தூய்மை பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்படும். பஸ் நிழற்குடைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பழுதுகள் சரி செய்யும் பணி நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது.
அன்படி, இன்று காலை முதல் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் 2-ம் கட்டமாகத் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இப்பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலைதளங்களில் வைரலானது.
- எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை :
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த நபர் சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரியவந்துள்ளது.
எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது.
இதையடுத்து, சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க. நடத்திய போராட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் எக்ஸ் தள பக்கத்தில் செய்தி தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஒரு சாமானியனைப் பாதிக்கும் பிரச்சனைகளில் தனிமனித அரசியல் ஒரு போதும் இருக்க முடியாது. அ.தி.மு.க.விற்கு பாராட்டுக்கள். இந்த பிரச்சனையை எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டதற்கு என கூறியுள்ளார்.
- நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
- கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் பிரசித்த பெற்ற முருகன் கோவில்களுள் ஒன்று வடபழனி முருகன் கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து கோவில் நடை திறந்த பின் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை மேற்கொள்கிறது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர்.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம்.
நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தமிழக பெண்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "கல்வி வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களும், சட்டஒழுங்கு சீர்கேடும் நடைபெறுகிறது"
"பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மனஅழுத்தத்திற்கும், சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன்"
"ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே!"
"அதற்காகவே இக்கடிதம்"
"எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணணாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்."
"பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம்! - அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் சேர்ந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- 3 ஏடிஜிபிக்களுக்கு, டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
- ஏடிஜிபி வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு, டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏடிஜிபி வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வான்கடேவுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் அரியலூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டேவுக்கு திண்டுக்கல் சரக டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் கிழக்கு இணை ஆணையர் சரோஜ் குமார் தலைமை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல் மாலை 4 வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
சென்னை:
நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்முறை, மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், துணை மின் நிலையங்களில் இந்தப் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நாளை (30-12-2024) ஈரோடு, புதுக்கோட்டை, திருவள்ளூர், தேனி, பட்டுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஈரோடு:
அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள்.
புதுக்கோட்டை:
மலையூர் பகுதி முழுவதும்.
திருவள்ளூர்:
டவுன் பொன்னேரி வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம்.
தேனி:
தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
பட்டுக்கோட்டை:
அதிராம்பட்டினம், ராஜமடம்.
சிவகங்கை:
கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.
- ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் கோவையில் இன்று நடைபெற்றன.
- ஐ.பி.எல்.லை விட பெரியது கிராமோத்சவம் என்றனர் சேவாக், வெங்கடேஷ் பிரசாத்
கோவை:
ஈஷா சார்பில் பாரதத்தின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் சத்குரு முன்னிலையில் இன்று கோவையில் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை ஆதியோகி முன் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவில் சத்குரு பேசியதாவது:
ஒரு காலத்தில் 100 சதவீத கல்வி பெற்றதாக இருந்த நாடு, விடுதலை பெறும்போது 93 சதவீதம் கல்வியறிவு இல்லாத நாடாக மாறி இருந்தது. இது வெறும் 300 ஆண்டுகளில் நடைபெற்றது.
ஆனால் கடந்த 75 வருடங்களில் நாம் மகத்தான பல விஷயங்களைச் செய்துள்ளோம். புத்திசாலித்தனம், உறுதி, திறமை போன்ற பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் நமக்காக செயல்பட வேண்டும் என்றால் நாம் புத்துணர்வாக, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்துணர்வாக இல்லை என்றால் எவ்வளவு பணம், சொத்து, திறமை இருந்தாலும் உங்களால் எதையும் உருவாக்க முடியாது. அந்த வகையில் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.
எளிமையாக துவங்கப்பட்ட இந்த கிராமோத்சவம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் பெரிய விழாவாக இன்று மாறி உள்ளது. ஆனால் இது போதாது. ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியதாவது:
மனித நல்வாழ்விற்காக சத்குரு செய்து வரும் மகத்தான பணிக்கு என் வணக்கங்கள். கிராமோத்சவம் திருவிழாவின் நோக்கம், தீவிரம் அனைத்தையும் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி மகத்தான விளையாட்டுத் திருவிழாவாக இது நடந்து இருக்கிறது. இதற்கு சத்குருவிற்கு என் நன்றிகள். நீங்கள் வாழ்வதற்காக எதை செய்தாலும், விளையாட்டிற்காக தினமும் 10 - 15 நிமிடங்கள் செலவிடுங்கள்.
விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியர், அது குழுவாக இணைந்து செயல்படுவதை, எதிர்த்துப் போராடுவதை, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை, தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது என கூறினார்.
பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து தினக்கூலிக்கு பிறந்த பெண்ணால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்க முடியும். பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க சத்குரு ஊன்றுகோலாகத் திகழ்கிறார். நான் ஏராளமான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு எழுந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சத்குருவின் உத்வேக வார்த்தைகள் எனக்கு உதவியாக இருந்தது என்றார்.
கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், ஐ.பி.எல். போட்டிகளை ஒருங்கிணைப்பது கூட எளிதானது. இது போன்ற கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதுதான் கடினமானது. இதனை செய்யும் ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

வாலிபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தைச் சேர்ந்த அலிப் ஸ்டார் அணி வென்று முதல் இடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை உடுப்பி மாவட்டம் பள்ளிகிராமத்தைச் சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி பிடித்தது.
அதேபோல் பெண்களுக்கான த்ரோபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்தைச் சேர்ந்த அணி வென்று முதல் இடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் இருந்து புள்ளாக்கவுண்டன் புதூர் கிராம அணி பிடித்தது
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் வென்றன.
16-வது ஈஷா கிராமோத்சவ இறுதிப்போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு 5 லட்சமும், 2-ம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு 3 லட்சமும், 3 மற்றும் 4-ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
முன்னதாக, ஈஷாவுடன் இணைந்து யுவா கபடி லீக் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
அதேபோல், ஈஷாவுடன் இணைந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய சூப்பர் ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் 150 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேவாக் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது. சிலம்பம் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோர் வயது அடிப்படையில் 6 பிரிவுகளில் கலந்துகொண்டனர்.
இதனுடன் தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் பறையாட்டம் மற்றும் தவில், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சிகளும், கர்நாடகா சார்பில் பிலி வேசா எனும் புலி நடனமும், தெலுங்கானா சார்பில் கோண்டு பழங்குடிகளின் குசாடி நடனமும், கேரளா சார்பில் செண்ட மேளம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பஞ்சரி மேளம், 1000 பேர் கலந்துகொண்ட வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம், 1,500 பேர் பங்கேற்ற கோலப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.






