என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள் குறித்த பதிவு கட்டாயம்- உயர் கல்வித்துறை செயலாளர்
    X

    கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள் குறித்த பதிவு கட்டாயம்- உயர் கல்வித்துறை செயலாளர்

    • முறையான அனுமதியின்றி, கல்வி நிறுவனங்களுக்குள் சம்பந்தமில்லாத நபர்களை அனுமதிக்கவே கூடாது.
    • பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்க முடியாது என எச்சரிக்கை.

    தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் அந்த கூட்டத்தில், "முறையான அனுமதியின்றி, கல்வி நிறுவனங்களுக்குள் சம்பந்தமில்லாத நபர்களை அனுமதிக்கவே கூடாது.

    கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து பதிவு செய்ய வேண்டும்.

    கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள், பணியாளர்கள் குறித்த பதிவு கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

    பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்க முடியாது.

    பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

    தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை பாதுகாப்பிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×