என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க சார்பில் சந்திரகுமார் அவர்கள் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
- திராவிட மாடல் அரசின் மக்கள் வரவேற்பை யாவரும் அறிவர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அன்பிற்கினிய முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் ஈரோடு மாவட்ட மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு (பிப்ரவரிஆம் தேதி) இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது.
தி.மு.க சார்பில் சந்திரகுமார் அவர்கள் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
திராவிட மாடல் அரசின் மக்கள் வரவேற்பை யாவரும் அறிவர். திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் வழியாக எடுத்துச் சென்றுள்ளோம்.
ஆகவே 5ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்குரிய வாக்குப் பதிவில் நாம் கூட்டணி கட்சியாக அங்கம் வலிக்கும் திழக வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு உதய குரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து மக்கள் முதல்வர், மு.க.ஸ்டாலின் அவர்களது கரத்தை வலுப்படுத்த
மறவாது வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசு.
- வருகிற பிப். 8-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழக முதலமைச்சரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் "கண்டன பொதுக்கூட்டம்" நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
- தமிழக பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய திட்டங்கள், அறிவிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்.10-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

2025-26-ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய திட்டங்கள், அறிவிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது.
- எதையும் பின்பற்றாமல் தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மதுரை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த ஆண்டு எனக்கு சொந்தமான வாகனம் மருத்துவ கழிவுகளை கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளு மூடு ஊராட்சிக்கு உட்பட்ட பாலுக்குழி என்ற கிராமத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டியதாக அந்த ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் எனது வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
எனவே பறிமுதல் செய்யப்பட்ட எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். விசாரணை செய்த கீழமை நீதிமன்றம் எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க மறுத்து என் மனுவை தள்ளுபடி செய்தது, இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி மனுதாரர் வாகனம் விதி முறைகளை மீறி கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டி உள்ளது, இதை அனுமதிக்க முடியாது.
இது போன்ற வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது. மேலும் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி இந்த வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் நடத்து முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி புகழேந்தி, மருத்துவ கழிவுகளை கையாள்வதற்கு பல்வேறு சட்ட விதிகள் உள்ளது. குறிப்பாக 75 கிலோ மீட்டர் தாண்டி மருத்துவக் கழிவுகள் கொண்டு போகக்கூடாது என்றும், மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு சட்டவிதிகள் உள்ளது. ஆனால் இதில் எதையும் பின்பற்றாமல் தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, இது தீவிரமான குற்ற செயலாகும்.
மேலும் உள்ளாட்சி சட்டவிதிகள்படி மருத்துவ கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி பண்ணுவதற்கான சட்ட விதிகள் உள்ளது. அதை செய்வதில்லை. எனவே இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளாட்சித் துறை செயலர், ஆகியோரை நீதி மன்றம் தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதி இதுபோன்று விதிமுறை மீறி மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்வது குறித்து உரிய செயல்முறை வழிகாட்டுதல்களை அந்தந்த துறையினருக்கு செயலாளர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து வழக்கை நீதிபதி புகழேந்தி முடித்து வைத்தார்.
- இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
- வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவுறுத்தினார்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்தநிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். இப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவும் காரணத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை இந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதி தனபால் முன்பு அவசர முறையீடு செய்தனர். அப்போது நீதிபதி, இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய முடியாது. வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவுறுத்தினார்.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
- சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து முதலில் வேங்கைவயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற மாற்றப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டதில், இந்த வழக்கு, பட்டியல் இனத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான விசாரணை நடந்து வந்தது.
இந்த 2 வழக்குகளில் இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வசந்தி, வழக்கு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து இன்று காலை கோர்ட்டில் 2 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை வழக்கு இல்லை என கூறி புதுக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி வசந்தி உத்தரவிட்டார்.
- வடசென்னை அனல்மின் நிலையம்-3 திறக்கப்பட்டு ஓராண்டாகும் நிலையில், இன்று வரை அதில் வணிகரீதியிலான மின்உற்பத்தி தொடங்கப்படவில்லை.
- மின் திட்டங்களை செயல்படுத்தி, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை குறைத்தால் மட்டும் தான் லாபத்தில் நடத்துவது சாத்தியமாகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் ரூ.10,158 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட வடசென்னை அனல்மின் நிலையம்-3 திறக்கப்பட்டு ஓராண்டாகும் நிலையில், இன்று வரை அதில் வணிகரீதியிலான மின்உற்பத்தி தொடங்கப்படவில்லை.
வடசென்னை அனல்மின் நிலையம் சரியான நேரத்தில் வணிகரீதியிலான மின்னுற்பத்தியைத் தொடங்கி இருந்தால், இதுவரை 1200 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கக்கூடும். அதன் மூலம் அதே அளவு மின்சாரம் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதை தவிர்த்திருக்கலாம். அதனால், ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மிச்சமாவதாக வைத்துக்கொண்டால் கூட, 11 மாதங்களில் ரூ.2400 கோடி, ஆண்டுக்கு ரூ.2618 கோடி மிச்சமாகியிருந்திருக்கும். ஆனால், அவ்வாறு பணம் மிச்சமாவதால் ஆட்சியாளர்களுக்கு எந்த லாபமும் இல்லை; தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் மட்டும் தான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் தான் மின்னுற்பத்தித் திட்டங்களைத் தாமதப்படுத்துகின்றனர் என்று புகார்கள் எழுகின்றன.
மின் திட்டங்களை செயல்படுத்தி, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை குறைத்தால் மட்டும் தான் லாபத்தில் நடத்துவது சாத்தியமாகும். இதை உணர்ந்து வட சென்னை அனல்மின் நிலையத்தில் வணிகரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கவும், நிலுவையில் உள்ள பிற மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்கவும் தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார்.
- சக பயணிகள் பரிதாபப்பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.
அரக்கோணம்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீராஜ்குமார். இவர் பெங்களூரு செல்வதற்காக பீகாரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
ரெயில் பெரம்பூர் வந்த போது அவருக்கு பல்வலி ஏற்பட்டது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை. பல்வலி என்றால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள். வயிறு வலி என கூறினால் உடனடி சிகிச்சை கிடைக்கும் என நினைத்தார்.
தனக்கு கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார். வலி தாங்க முடியாதவர் போல் நடித்து அட்டகாசம் செய்தார். சக பயணிகள் பரிதாப பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.
மேலும் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே நிலைய மேலாளர் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனை டாக்டர்கள், உதவியாளர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை என குழுக்களாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
ரெயிலில் பயணம் செய்பவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி நடைமேடை 1-ல் அனுமதித்து ரெயிலை நிறுத்தினர்.
தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் நீராஜ்குமாரை வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் நீராஜ் குமார் வயிற்றை காண்பிக்காமல் வாயை திறந்து பல்வலி என கூறினார்.
இதனை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயிற்று வலிக்கான மாத்திரை மருந்துகளை தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் பல் வலி என கூறியதால் ரெயில்வே டாக்டர்கள் கடிந்து கொண்டனர். பல் வலிக்கான மாத்திரையை வழங்கினர்.
மேலும் அந்த நபரை இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனக் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனால் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது.
- படுகொலை செய்ய நடந்த சதி குறித்து காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் கொடுத்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டில் காவல்துறை உதவியாளர்களை தேர்வு செய்வதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தமது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி தம்மை படுகொலை செய்ய சதி நடந்ததாக தமிழக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக பணியாற்றியவருமான கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறை ஏ.டி.ஜி.பி ஒருவரே முறைகேடு நடந்ததாக கூறியிருப்பது ஐயத்தை அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி பழைய பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. ஆனால், அதிலும் குளறுபடிகள் இருப்பதால், புதிய பட்டியலை நவம்பர் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 28-ஆம் நாள் ஆணையிட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தான், காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான அறிக்கையை தாம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தயாரித்து அளித்ததாகவும், அது கண்டுகொள்ளப்படவில்லை என்றும் காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் நடந்த தவறுகளை தாம் சுட்டிக்காட்டிய பிறகு தயாரிக்கப்பட்ட புதிய பட்டியலை கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் நாள் தாம் சரிபார்க்கவிருந்ததாகவும், அதற்காக தாம் அலுவலகம் செல்வதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமது அலுவலக அறை தீப்பிடித்து எரிந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ள கல்பனா நாயக், அது தம்மை படுகொலை செய்வதற்காக நடந்த சதி என்றும் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவாலிடம் அளித்துள்ள புகார் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தம்மை படுகொலை செய்யும் நோக்கத்துடன் தமது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதற்கு அடுத்த நாளே, திருத்தப்பட்ட பட்டியல் தமது ஒப்புதல் பெறாமல் வெளியிடப்பட்டதாகவும் அந்த புகாரில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தம்மை படுகொலை செய்ய நடந்த சதி குறித்து காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் கொடுத்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாததற்கும், சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த கல்பனா நாயக் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன? என்பது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டியதும், காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் சமூகநீதி நிலைநாட்டப்படுவதும் அவசியமாகும்.
அதேபோல், காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக கல்பனா நாயக்கை படுகொலை செய்யும் நோக்குடன் அவரது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது உடனடித் தேவையாகும். எனவே, உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- 2025-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தா வெற்றியானது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது.
- பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்துகள்.
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷ்-ஐ எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார்.
தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
டாடா ஸ்டீல்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
2025-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தா வெற்றியானது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது. இத்தகைய மதிப்புமிக்க நிகழ்வில் பெற்ற வெற்றி அவருடைய திறமை மற்றும் உறுதிப்பாட்டின் உண்மையான பிரதிபலிப்பாகும்.
பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்துகள்.
இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட வீரர்களாக இருப்பதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. அவர்களின் வெற்றியால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவர்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- 14 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுற்றுப்புறத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை யொட்டி சிப்காட் போலீஸ் நிலையம் உள்ளது.
நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் சிப்காட் போலீஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள வரவேற்பாளர். பொதுமக்கள் அமரும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.
கட்டிடப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதால் குபீரென தீ பிடித்து கரும்புகை ஏற்பட்டது.
பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றினர். தப்பியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். உடனடியாக குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக தேடுதல் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் பழைய குற்றவாளிகளை பிடித்து சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதேபோல் போலீஸ் நிலையம் எதிரே சிப்காட் மெயின் பஜார் தெரு பகுதியில் உள்ள அரிசி கடையின் இரும்பு கதவின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இந்த நிலையில் சிப்காட் போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அரிசி கடையின் மீதும் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாகவும் தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் கடைகளில் ரவுடி கும்பல் மாமூல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் குறித்து வியாபாரிகள் சிலர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் ரவுடி கும்பலை சேர்ந்த சிலரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடித்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் போலீஸ் நிலையம் மற்றும் அரிசி கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக இதுவரை 14 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் சிப்காட் போலீஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்!
- எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை!
உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்!
எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்!
ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர்!
தி.மு.கழகம் என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாள் இன்று!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.
அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்! என்று கூறி உள்ளார்.






