என் மலர்
அரியானா
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் நடிகர் மவுனம் காத்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
- கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் வீடியோவை நீக்கி மன்னிப்பு கேட்டார்.
இந்திய ராணுவம் ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டபோது, வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட பெண் இஸ்டா பிரபலத்தை கொல்கத்தா போலீசார், அரியானாவின் குருகிராமில் கைது செய்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் நடிகர்கள் மவுனம் காத்தனர் என ஷர்மிஷ்தா பனோலி என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டியிருந்தார்.
இந்த வீடியோவை பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பனோலியை டிரோல் செய்ததுடன், மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துகள் பதிவிட்டனர். வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, இன்ஸ்டாபக்கத்தில் இருநது நீக்கினார். வீடியோ வெளியிட்டதற்கான மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
புனே சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். இவருக்கு எதிராக கொல்கத்தாவில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஷர்மிஷ்தா பனோலிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
இதனால் தனது குடும்பத்துடன் தலைமறைவானார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்றிரவு குர்கிராமில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பஞ்சகுலாவில் நடைபெற்ற பாபகேஸ்வர் தாம் ஹனுமந்துனி கதா என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தனர்.
கடன் சுமையால் விஷம் குடித்து ஒரு குடும்பமே தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 உடல்கள் - பகீர் சம்பவம் அரியானாவில் ஒரு முழு குடும்பமும் நிதி காரணமாக தற்கொலை செய்து கொண்டது கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சகுலாவில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தங்கள் காரில் விஷம் குடித்தார் தற்கொலை செய்து கொண்டனர்.
பஞ்சகுலாவின் செக்டார் 27 இல் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் உடல்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.
இறந்தவர்கள் டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல் (42), அவரது பெற்றோர், மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என அடையாளம் காணப்பட்டனர்.
பஞ்சகுலாவில் நடைபெற்ற பாபகேஸ்வர் தாம் ஹனுமந்துனி கதா என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் அனைவரும் டேராடூனில் கலந்து கொண்டனர் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து டேராடூனுக்குத் திரும்பும் வழியில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தனர். இந்த தற்கொலைக்கு முதன்மையான காரணம் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- கைகூப்புவதற்கு பதிலாக கணவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களுடன் போராடியிருக்க வேண்டும்
- பாஜக தலைவரும் அமைச்சருமான குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்றார்.
பஹல்காம் தாக்குதல் அதைத்தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பின்னணியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து பாஜக எம்.பி. ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றனர்.
தங்கள் கணவர்களை விட்டுவிடுமாறு கெஞ்சிய பிறகும் பயங்கரவாதிகள் கருணை காட்டவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.யான ராம்சந்தர் ஜாங்கிரா, கூட்டம் ஒன்றில் பேசுகையில், "அங்கே எங்கள் சகோதரிகள் இருந்தனர். அவர்களின் மாங்கல்யம் பறிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஒரு வீராங்கனை போல எண்ணவில்லை, உற்சாகம் இல்லை, போராட்ட உணர்வு இல்லை.
அதனால்தான் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. பயங்கரவாதிகளிடம் மன்றாடுவதற்குப் பதிலாக, உங்கள் கணவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களுடன் போராடியிருக்க வேண்டும்" என்று ஜாங்கிரா தெரிவித்தார்.
பாஜக எம்.பி. ஜங்ராவின் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக தலைவர்கள் நமது வீரர்களையும் பெண்களையும் அவமதிப்பதைப் பழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்தனர்.
முன்னதாக மத்தியப் பிரதேச பாஜக தலைவரும் அமைச்சருமான குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பேசியது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
- இந்த தாக்குதலுக்கு ஆபரேசன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டது.
அரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அலிகான் முகமது மக்முதா பாத்.
இவர் இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டார்.
அவரது கருத்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி போலீசார் அவரை மே 18 அன்று கைது செய்தனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து அரியானா பல்கலைக்ககழக பேராசிரியர் அலிகான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலிகானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து சோனேபட் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 27 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டார்.
- கபில்சிபல் தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
அரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அலிகான் முகமது மக்முதா பாத்.
இவர் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டார்.
அவரது கருத்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப் பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி போலீசார் அவரை டெல்லியில் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து அரியானா பல்கலைக்ககழக பேராசிரியர் அலிகான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது சார்பில் கபில்சிபல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நாளை அல்லது புதன்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
- பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
- ஜோதி மல்ஹோத்ரா ஏஜெண்டு மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
இதற்கு கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.
பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
இதனையடுத்து, இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து இரு நாட்டின் எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை வழங்கியதாக பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, குசாலா, யமீன், தேவிந்தர், அர்மான் உள்பட 6 பேரை உளவுத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா (34). இவர் 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள் குறித்து இவரது யூடியூப் சேனலில் தகவல்களைப் பகிர்வதால் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றுள்ளார்.
கைதான இவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ரகசிய தகவல்களை உளவு பார்த்து சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023-ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்டு மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். இவருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களை, ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், ஜோதியும், டேனிஸும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், வாட்ஸ்-அப், டெலிகிராம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் பாகிஸ்தானியருடன் ஜோதி தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.
மேலும், பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்தே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவருடனும் ஜோதி நெருக்கமாக இருந்துள்ளார். அவருடன் சேர்ந்து இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று வந்துள்ளார்.
அங்கிருந்து பல்வேறு பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். பாகிஸ்தான் உளவாளிகளுடன் நெருங்கிப் பழகி பல்வேறு ராணுவத் தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். இதற்காக ஏராளமான பணத்தையும் அவர் பெற்றுள்ளார். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
ஜோதி இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அவரது சமூக வலை தளத்தில் பாகிஸ்தானை அடிக்கடி புகழ்ந்து பேசியுள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சாதகமாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் செய்துள்ள பதிவு ஒன்றில் லாகூரை பாகிஸ்தானின் கலாச்சார இதயம் என்று கூறியுள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு 4 முறைக்கு மேல் சென்று வந்துள்ள தாகவும் பதிவிட்டுள்ளார்.
இவரது யூடியூப்பிற்கு 3.2லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவரை 13.4 லட்சத் திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 152-ன் கீழ் 3, 4, 5 ரகசிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதி 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இப்போது இந்த வழக்கு ஹிசார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜோதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கூறுகிறார்.
- தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்தவர் 17 வயதான கஃபி (Kafi).2011 ஆம் ஆண்டு தனது மூன்று வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்தார்.
மூன்று வயதில் இருந்தே பல்வேறு சிரமங்களை சந்தித்த கஃபி தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்களுடன் தனது பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
சண்டிகரில் செக்டார் 26 இல் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் அவர் பயின்று வந்தார். ஆடியோ புக்குகள் மூலம் அங்கு கற்பிக்கப்பட்டது.
கடினமான பாதைகளை கடந்து சாதனை புரிந்துள்ள கஃபி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கூறுகிறார்.
ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதி முடித்த கஃபி சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
ஊடகத்துக்குப் பேட்டியளித்த கஃபி தன் மீதான ஆசிட் தாக்குதல் குறித்து பேசுகையில், மூன்று அண்டை வீட்டார் தன் மீது அமிலத்தை ஊற்றியதாகத் தெரிவித்தார்.
மேலும் "மருத்துவர்கள் என் உயிரைக் காப்பாற்றினர், ஆனால் அவர்கள் என் பார்வையைக் காப்பாற்றவில்லை. ஆசிட் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்" என்று கஃபி கூறினார்.
- முஸ்லீம்கள், காஷ்மீரிகள் மீது வெறுப்பு கொள்ள வேண்டாம் என்று ஹிமான்சி தெரிவித்ததால் அவர் மீது வெறுப்பு பிரச்சாரம் நடக்கிறது.
- தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
ஜம்மு-காஷ்மீரின் பகல்கா மில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உள்பட 26 பேர் உயிரிழந்தனா்.
கடற்படை அதிகாரியான வினய் நர்வாலும், அவரது மனைவி ஹிமான்ஷியும் திருமணம் முடிந்து சுற்றுலா சென்ற நிலையில் அவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, "யார் மீதும் வெறுப்பு இருக்கக் கூடாது. முஸ்லீம்கள், காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பை உமிழ்வதை நான் பார்க்கிறேன். நாங்கள் இதை விரும்ப வில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்" என்று ஹிமான்ஷி பேட்டி அளித்து இருந்தார்.
இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து ஹிமான்ஷிக்கு ஆதரவு தெரிவித்தும், அவருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கண்டித்தும் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் குடும்பத்தினரை பாராளுமன்ற மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.
இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து அரியானா மாநிலம் கர்னலுக்கு ராகுல் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஹிமான்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
- முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பைக் கக்குவதை நான் காண்கிறேன்.
- நர்வாலும் ஹிமான்ஷியும் தங்கள் தேனிலவை ஐரோப்பாவில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக மத ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வினய் நர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அரியானாவில் கர்னாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான முகாமில் செய்தியாளர்களிடம் ஹிமான்ஷி பேசினார்.
அவர் பேசியதாவது, "அவர் (வினய்) எங்கிருந்தாலும், அவர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் விரும்பும் ஒரே விஷயம் அதுதான். இன்னொரு விஷயத்தையும் நான் சொல்ல விரும்புகிறேன்.
யாரிடமும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பைக் கக்குவதை நான் காண்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம். அதேநேரம் நீதியையும் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தில் அதிகாரியாக இருந்த வினய் நர்வாலும், ஹிமான்ஷியும் ஏப்ரல் 16 அன்று திருமணம் செய்து கொண்டனர். நர்வாலும் ஹிமான்ஷியும் தங்கள் தேனிலவை ஐரோப்பாவில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், விசா பிரச்சினைகள் காரணமாக அது பின்னர் கைவிடப்பட்டது. திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு, புதுமணத் தம்பதிகள் விடுமுறை எடுத்துக்கொண்டு 19 ஆம் தேதி காஷ்மீருக்குப் புறப்பட்டனர்.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தேனிலவு கொண்டாட்டத்தின் போது, ஏப்ரல் 22 ஆம் தேதி, வினய், ஹிமான்ஷி கண் முன்னே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 25 பேர் கொல்லப்பட்டனர். பைசரன் புல்வெளியில் இறந்து கிடந்த தனது கணவரின் அருகில் உதவியற்ற நிலையில் அமர்ந்திருக்கும் ஹிமான்ஷியின் புகைப்படம் மனதை உடைப்பதாக இருந்தது.
- தபயா ராமின் குடும்பத்தில் 34 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக இந்தியக் குடியுரிமை பெற தபயா ராம் போராடுகிறார்.
- பாக்ஹர் மாவட்டத்தின் லோஹியா தொகுதியில் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுவரை 537 பாகிஸ்தானியர்கள் எல்லை வழியாக வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில் அரியானாவில் ஐஸ்கிரீம் விற்று பிழைப்பு நடத்தும் பாகிஸ்தான் முன்னாள் எம்.பியின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தபயா ராம் என்ற அந்த நபர் தற்போது அரியானாவின் ரத்தன்கார் பகுதியில் தனது குடும்பத்தினர் 34 பேரோடு வசித்து வருகிறார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபில் பிறந்தவர் தபயா ராம். அழுத்தம் காரணமாக அவரின் குடும்பம் அங்கேயே தங்கியது.
1988ஆம் ஆண்டு பாக்ஹர் மாவட்டத்தின் லோஹியா தொகுதியில் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் மிகவும் நெருக்கடி மிகுந்ததாகவே இருந்தது. மதமாற்றம் உள்ளிட்ட அழுத்தமும் தபயாவின் குடும்பத்துக்கு இருந்து வந்தது.
ஏமாற்றம் மற்றும் அச்சத்தின் காரணமாக தபாயாவின் குடும்பம் 2000 இல் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினர். உறவினர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஒரு மாத விசாவில் அரியானா வந்த தபயா ராம் குடும்பம் பின்னர் நிரந்தரமாகவே இங்கு வசிக்கத் தொடங்கினர்.
குடும்பமும் பெரிதாகிவிட்டதால், அதனை கவனித்துக்கொள்ள குல்ஃபி, ஐஸ்கிரீம் விற்கும் பணியில் தபயா ஈடுபட்டுள்ளார். இவரின் 7 வாரிசுகளும் உறவினர்களையே திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது தபயா ராமின் குடும்பத்தில் 34 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற தபயா ராம் போராடுகிறார். அவரின் இரு பெண்கள் உள்பட 6 பேருக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்துள்ளது. எஞ்சிய 28 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில் தபயா ராம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. உள்ளூர் காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு தபயா ராம் தனது குடும்பத்துடன் நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.
- இதில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் உயிரிழந்தார்.
சண்டிகர்:
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வினய் நர்வால் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
- 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கமான தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சம்பவத்தின் பின் தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியானா மாநிலம் நூஹ் மாவட்டம் இப்ராகிம் பஸ் கிராமத்தில், டெல்லி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி 7 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில் நெடுஞ்சாலையில் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கமான தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பணியாளர்கள் மீது மோதியது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தின் பின் தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






