என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர்: வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட பெண் இன்ஸ்டா பிரபலம் கைது
    X

    ஆபரேஷன் சிந்தூர்: வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட பெண் இன்ஸ்டா பிரபலம் கைது

    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் நடிகர் மவுனம் காத்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
    • கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் வீடியோவை நீக்கி மன்னிப்பு கேட்டார்.

    இந்திய ராணுவம் ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டபோது, வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட பெண் இஸ்டா பிரபலத்தை கொல்கத்தா போலீசார், அரியானாவின் குருகிராமில் கைது செய்தனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் நடிகர்கள் மவுனம் காத்தனர் என ஷர்மிஷ்தா பனோலி என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டியிருந்தார்.

    இந்த வீடியோவை பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பனோலியை டிரோல் செய்ததுடன், மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துகள் பதிவிட்டனர். வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, இன்ஸ்டாபக்கத்தில் இருநது நீக்கினார். வீடியோ வெளியிட்டதற்கான மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

    புனே சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். இவருக்கு எதிராக கொல்கத்தாவில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஷர்மிஷ்தா பனோலிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

    இதனால் தனது குடும்பத்துடன் தலைமறைவானார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்றிரவு குர்கிராமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×