என் மலர்tooltip icon

    குஜராத்

    • கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
    • கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.

    குஜராத் உயர்நீதிமன்ற வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    வைரலான அந்த வீடியோவில், அந்த நபர் காதில் புளூடூத் ஹெட்போன்களை அணிந்துகொண்டு கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.

    பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது. இது அனைவரையும் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

    கடந்த ஜூன் 20 ஆம் தேதி தன் மீதான எப்ஐஆர் ஒன்றை ரத்து செய்யக்கோரி அந்த நபர் அளித்த மனு மீது நீதிபதி நிர்சார் தேசாய் அமர்வில் நடந்த விசாரணையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய குஜராத் உயர்நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    • பாலம் இடிந்து விழுந்ததில் வாகனங்கள் பல ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன.
    • மாயமான 4 பேரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.

    பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மாஹி ஆற்றில் இருந்து மேலும்7 சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது. இதையடுத்து, பாலம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், மாயமான 4 பேரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்தனர்.
    • விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது.

    வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது.

    பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடம் சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், குஜராத் பாலம் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், காயம் அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என முதல் மந்திரி பூபேந்திர படேல் அறிவித்தார்.

    • பாலத்தில் சென்றுகொண்டிருந்த லாரி மற்றும் கார் கீழே உள்ள மாஹி நதியில் மூழ்கியது.
    • ஆற்றில் பலர் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா - முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் இந்த பாலம் இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அந்த பாலத்தின் ஒரு பகுதி யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. 2 தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் முழு பகுதியும் இடிந்து விழுந்தது.

    பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மஹி சாஹர் ஆற்றில் விழுந்தன. முதல் கட்ட தகவல்கள் அடிப்படை யில் 2 லாரிகள், ஒரு கார், ஒரு வேன் ஆகிய வாக னங்கள் ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆற்றில் பலர் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

    இந்த பாலம் 40 ஆண்டுகள் பழமையானது. இதனால் பாலத்தின் உறுதி தன்மை பலவீனமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் நிவார நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    • கம்பீரா பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
    • பாலத்தில் சென்றுகொண்டிருந்த லாரி மற்றும் கார் கீழே உள்ள மாஹி நதியில் மூழ்கியது.

    குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா - முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் இந்த பாலம் இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அந்த பாலத்தின் ஒரு பகுதி யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. 2 தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் முழு பகுதியும் இடிந்து விழுந்தது.

    பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மஹி சாஹர் ஆற்றில் விழுந்தன. முதல் கட்ட தகவல்கள் அடிப்படை யில் 2 லாரிகள், ஒரு கார், ஒரு வேன் ஆகிய வாக னங்கள் ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆற்றில் பலர் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

    வாகனங்கள் ஆற்றில் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த பாலம் 40 ஆண்டுகள் பழமையானது. இதனால் பாலத்தின் உறுதி தன்மை பலவீனமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறும் போது, "இந்த பாலம் 1985-ம் ஆண்டு கட்டப்பட்டது. அவ்வப்போது பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. பாலம் இடிந்ததற்கான சரியான காரணம் குறித்து விசாரிக்கப்படும். முதலமைச்சர் பூபேந்திர படேல் தொழில்நுட்ப நிபுணர்களை சம்பவ இடத்திற்கு சென்று இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

    • 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது.
    • ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர்.

    குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக நிகழ்ந்த பரிசோதனைகள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    91 சதவீத வழக்குகளில் சிகிச்சை தோல்வியடைந்ததாக CAG அறிக்கை கூறுகிறது. சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களில் 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக அறிக்கை கூறுகிறது.

    இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பார்த்திவ்சிங் கட்வாடியா பேசுகையில், அங்கீகரிக்கப்படாத பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

    அகமதாபாத் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் அங்கீகரிக்கப்படாத மருந்து பரிசோதனைகள் மூலம் மருத்துவர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சிறுநீரக நோயாளிகளின் இறப்புகள் வெளிச்சத்திற்கு தற்போது வந்துள்ளன.

    இதற்கிடையே அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதியின்றி நடத்தப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை சோதனைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநருக்கு உத்தரவிட்டது.

    கூடுதலாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் (DCGI) வெள்ளிக்கிழமை, அகமதாபாத் மாநகராட்சிக்குச் சொந்தமான VS மருத்துவமனை மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்குத் தடை விதித்தார். அவர்கள் 2021 மற்றும் 2025 க்கு இடையில் நெறிமுறைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    • விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
    • மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதியில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்த நிலையில், கல்லூரி விடுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 29 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 270 உயிரிழந்ததாக கூறப்பட்டது.

    உயிரிழந்தவர்கள் தீயில் உரிந்து கரிக்கட்டையாகியதால் உடலை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டு அதன்மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது.

    கடந்த 23ஆம் தேதி வரை 259 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு, உறவினர்களிடம் வழங்கப்பட்டு வந்தது. ஒருவருடைய உடல் மட்டும் உறவினர்களின் டிஎன்ஏ பரிசோதனையுடன் ஒத்துப்போகாமல் இருந்தது.

    இந்த நிலையில் இன்று அந்த உடலும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டதாக அகமதாபாத் பொது மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக 270 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மொத்த உயிரிழப்பு 260 ஆகும் என அதிகாரிப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்த 260 பேர்களில் 181 இந்திய பயணிகள் ஆவார்கள். 19 பேர் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் அடங்குவார்கள். 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள். 52 பேர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர்.

    • பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது.
    • நீதிமன்றத்தில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்து தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    குஜராத் உயர்நீதிமன்ற வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

    வைரலாகி வரும் வீடியோவில், அந்த நபர் காதில் புளூடூத் ஹெட்போன்களை அணிந்துகொண்டு கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.

    பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது. இது அனைவரையும் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

    கடந்த ஜூன் 20 ஆம் தேதி தன் மீதான எப்ஐஆர் ஒன்றை ரத்து செய்யக்கோரி அந்த நபர் அளித்த மனு மீது நீதிபதி நிர்சார் தேசாய் அமர்வில் நடந்த விசாரணையின்போது இந்த சம்பவம் நடந்ததாக தெரிய வருகிறது.

    இதுதொடர்பாக கமென்ட் செய்து வரும் நெட்டிசன்கள், நீதிமன்ற அவமதிப்பு செய்த அவரை நீதிமன்றத்தில் உள்ள கழிப்பறைகளை  சுத்தம் செய்ய வைத்து தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.  

    • 2022 தேர்தலில் 5 எம்எல்ஏ வெற்றி பெற்றனர்.
    • விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.

    குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.-வான உமேஷ் மக்வானா, தனது கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

    உமேஷ் மக்வானா காந்தி நகரில் உள்ள போடாட் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கோலி (Koli) என்ற இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், குஜராத் சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சியின் கொறடாகவும் இருந்தார்.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினைகளை எழுப்ப ஆம் ஆத்மி தோல்வியடைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார். மற்ற ஆம் ஆத்மி தொண்டர் போல் தொடர்ந்து பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    2022ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 5 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் உமேஷ் மக்வானா ஆவார்.

    இடைத்தேர்தலில் கோபால் இட்டாலியா வெற்றி பெற்ற 3 நாட்களுக்குள், உமேஷ் மக்வானா திடீரென கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.

    • 60 இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா நாட்டவர்கள் அடங்குவர்.
    • 240 பேர் விமானத்தில் பயணித்தவர்கள், 13 பேர் விமான விபத்தால் தரையில் பலியான பயணிகள் அல்லாதவர்கள் ஆவர்.

    கடந்த ஜூன் 12 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சசிறிது நிமிடத்திலேயே அருகிலிருந்த மருத்துவ மாணவர்கள் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில் விபத்து நடந்து பதினொரு நாட்களுக்குப் பிறகு, 259 பேரின் உடல்கள் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 199 இந்தியர்கள், 60 இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா நாட்டவர்கள் அடங்குவர். 256 உடல்கள் ஏற்கனவே அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மூன்று பிரிட்டிஷ் நாட்டவர்களின் உடல்களை விமானம் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருந்ததாலும், சேதமடைந்ததாலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டது.

    259 உடல்களில் , 253 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலமும், மீதமுள்ள ஆறு பேரின் உடல் அடையாளம் முக அம்சங்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 253 பேரில், 240 பேர் விமானத்தில் பயணித்தவர்கள், 13 பேர் விமான விபத்தால் தரையில் பலியான பயணிகள் அல்லாதவர்கள் ஆவர்.

    இதுவரை விபத்தில் உயிரிழந்த 19 பயணிகள் அல்லாதவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் டிஎன்ஏ சோதனை மூலமாகவும், ஆறு பேர் முக அடையாளம் மூலமாகவும் அடையாளம் காணப்பட்டனர்.  

    • குஜராத் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.
    • குஜராத்தின் விஸ்வதார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் இத்தாலியா கோபால் வெற்றி பெற்றார்.

    குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்றது.

    குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலாம்பூர், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு என மொத்தம் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    குஜராத்தின் காடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 39452 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜக வேட்பாளர் ராஜேந்திர குமார் வெற்றி பெற்றார்.

    அதே சமயம் குஜராத்தின் விஸ்வதார் தொகுதியில் பாஜக வேட்பாளரை 17554 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆம் ஆத்மி வேட்பாளர் இத்தாலியா கோபால் வெற்றி பெற்றார்.

    குஜராத் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.

    • குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • முன்னெச்சரிக்கையாக குஜராத்தின் பவ் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஜுனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பவநகர், கட்ச், காந்தி நகர், சூரத் மற்றும் படான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு மீட்புப்படையினர் உதவி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் பவ் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ×