என் மலர்
இந்தியா

கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்த குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ..!
- 2022 தேர்தலில் 5 எம்எல்ஏ வெற்றி பெற்றனர்.
- விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.-வான உமேஷ் மக்வானா, தனது கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
உமேஷ் மக்வானா காந்தி நகரில் உள்ள போடாட் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கோலி (Koli) என்ற இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், குஜராத் சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சியின் கொறடாகவும் இருந்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினைகளை எழுப்ப ஆம் ஆத்மி தோல்வியடைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார். மற்ற ஆம் ஆத்மி தொண்டர் போல் தொடர்ந்து பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 5 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் உமேஷ் மக்வானா ஆவார்.
இடைத்தேர்தலில் கோபால் இட்டாலியா வெற்றி பெற்ற 3 நாட்களுக்குள், உமேஷ் மக்வானா திடீரென கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.






