என் மலர்
டெல்லி
- பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே இன்று இந்தியா வந்தடைந்தார்.
- பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.தனது பயணத்தில் டோப்கே மும்பைக்கும் செல்கிறார்.
பூடான் பிரதமராக பதவியேற்ற ஷேரிங் டோப்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே இன்று இரவு சந்தித்தார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு அதிகாரிகளும் உடனிருந்தனர்.
#WATCH | Delhi | Prime Minister of Bhutan, Dasho Tshering Tobgay calls on Prime Minister Narendra Modi at 7, Lok Kalyan Marg (LKM). pic.twitter.com/Zj6QFVFNms
— ANI (@ANI) March 14, 2024
- மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் இந்தியா ஒரு இடம் முன்னேறியுள்ளது.
- இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி:
மனித வளர்ச்சி குறியீட்டு எண் என்பது உலகளாவிய நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அளவீடு ஆகும். இது நல்வாழ்வை அளவிடும் ஒரு மேம்பட்ட நிலையான வழிமுறையாகும்.
இந்நிலையில், ஐ.நா. வெளியிட்டுள்ள 2022-2023-ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் 193 நாடுகளில் இந்தியா 134-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா ஒரு இடம் முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. நார்வே 2வது இடமும், ஐஸ்லாந்து 3வது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஐந்து நாள் பயணமாக பூடான் பிரதமர் இன்று இந்தியா வந்துள்ளார்.
- ஷேரிங் டோப்கே ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.
புதுடெல்லி:
பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார்.
இந்நிலையில், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கே இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது பயணத்தில் டோப்கே மும்பைக்கும் செல்கிறார்.
பூடான் பிரதமராக பதவியேற்ற ஷேரிங் டோப்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது பெற்றார்.
- ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 2 இரட்டை சதம் உள்பட மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.
புதுடெல்லி:
இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த தொடரில் 2 இரட்டை சதம் அடித்தார். 5 டெஸ்டில் மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்து அணி கடைபிடித்து வருகிறது. நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மெக்கலம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது பேஸ்பால் யுக்தி என அழைக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடியதற்காக எங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த மட்டமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான நாசர் உசேன், ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடுவதை கற்றுக் கொண்டார் என தக்க பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருக்கிறார். அவரது அதிரடியான ஆட்டத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாடுவதை பென் டக்கெட் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.
இந்நிலையில், இதுதொடர்பாக ஜெய்ஸ்வால் முதல் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:
நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்தேன். கடந்த 9 மாதத்தில் என்னுடைய பேட்டிங் முன்னேற்றத்துக்கு கேப்டன ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் காரணம்.
வீரர்களின் அறையில் ரோகித் சர்மா இருப்பது மிகவும் நன்மையாகும். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன். நான் இந்த இருவரிடமும் நிறைய பேசி இருக்கிறேன். அவர்களது ஆலோசனை பெரிதும் உதவியது என தெரிவித்தார்.
- மத்திய அரசு மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- ஒரு டாக்டரை அணுகுவதற்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி:
டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு தடைவிதிக்கும் வகையில் மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான சீரான விதிமுறையை தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. இனி மருந்து நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய விவரங்கள் வருமாறு:
டாக்டர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்கள் பரிசுகள் வழங்கக் கூடாது.
ஒரு டாக்டரை அணுகுவதற்கு அவர்களுக்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக் கூடாது.

மருந்துகளைப் பரிந்துரைக்க தகுதி இல்லாதவர்களுக்கு இலவச மாதிரிகள் வழங்கக் கூடாது.
தங்கும் விடுதி, ஓய்வு விடுதி, விலை உயர்ந்த உணவு போன்ற எந்தவொரு விருந்தோம்பலையும் வழங்கக் கூடாது.
கருத்தரங்கம், மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்கு உள்நாட்டு அல்லது வெளிநாடுகளுக்கான பயண வசதிகளை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது.
- வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியது.
- கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
டெல்லி:
டெல்லி ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு கட்டிடத்தில் பலர் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்துள்ளது.
- பெரும்பான்மை அடிப்படையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையத்திலும் பல்வேறு புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று புகழேந்தி தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி தற்போது என்ன நிவாரணம் வேண்டும் என தெரிவியுங்கள் என்றார்.

தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ளதால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க. கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனித்தனி புகார்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கி உள்ளோம். ஆனால் அதன் மீது தேர்தல் ஆணையம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே அந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து தற்போது அ.தி.மு.க கட்சி இரண்டு அணிகளாக உள்ளதா?
அதனால் தான் இரு தரப்பும் அ.தி.மு.க.வை உரிமை கோருகிறீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதை தொடர்ந்து அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞரான பாலாஜி சீனிவாசன் வாதிடும் போது கூறியதாவது:-
அ.தி.மு.க என்பது ஒரே அணிதான், எந்த அணிகளும் அ.தி.மு.க.வுக்கு இல்லை.
இதை பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. குறிப்பாக என்.சி.பி. கட்சி வழக்கை எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளலாம், ஏனெனில் யாருக்கு 'மெஜாரிட்டி' உள்ளதோ அவர்களுக்கே கட்சியும், சின்னமும். அதன் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும்.
அந்த வகையில் அ.தி.மு.க. கட்சிக்கோ, சின்னத்துக்கோ எந்த பிரச்சனையும் இல்லை.
இந்த நபருக்கு ஏதேனும் கோரிக்கை உள்ளதென்றால் அதனை தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம். அதில் நியாயம் இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
மேலும் புகழேந்தி ஒரு அடிப்படை உறுப்பினர் கிடையாது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எனவே அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்துள்ளது. அதேபோல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பக்கம் உள்ளனர்.
எனவே பெரும்பான்மை அடிப்படையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. எனவே இந்த விவகாரத்தில் புகழேந்தி வருவதற்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதனை கேட்ட நீதிபதி இந்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
- கடந்த மாதம் சந்திரா பாண்டே ஓய்வு பெற்றார்.
- கடந்த 9-ந்தேதி அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது. இரண்டு ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிலையியில் பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகலாம் எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த தகவலை தெரிவித்தள்ளார்.
தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.
சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.
- மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மோசமான, ஆபாசமான உள்ளடங்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள கணக்குகளும் முடக்கம்.
இந்த தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Ministry of I&B blocks 18 OTT platforms for obscene and vulgar content after multiple warnings; 19 websites, 10 apps, 57 social media handles of OTT platforms blocked nationwide, says the government. pic.twitter.com/03ojj3YEiF
— ANI (@ANI) March 14, 2024
- பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.
காஜியாபாத்:
கிழக்கு டெல்லி காஜிப்பூரில் புத் பஜார் என்ற மார்க்கெட் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். நேற்று இரவு 9.30 மணியளவில் பொதுமக்கள் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென ஒரு கார் கூட்டத்தில் வேகமாக புகுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காஜியாபாத்தை சேர்ந்த சீதா தேவி என்ற 22 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் காரை சிறிது தூரம் விரட்டி பிடித்து டிரைவரை மடக்கி பிடித்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெல்லியில் மட்டும் தற்போது எம்.பி.யாக இருக்கும் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- கர்நாடகா மாநிலத்தில் 20 பேரில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் பா.ஜனதா இந்த முறை 370 பிடித்தாக வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து தேர்தல் களப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது கடந்த 2019 தேர்தலில் பெற்ற எண்ணிக்கையை விட 67 அதிகமாகும்.
இலக்கு மிகப்பெரியது என்பதால் ஒவ்வொரு வேட்பாளர்களையும் மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறது. களத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, ஏற்கனவே எம்.பி.யாக இருந்தால் தொகுதியில் அவருக்கு எதிரான அலை குறித்து கவனமாக ஆராய்ந்து அதன்பின் இடம் வழங்குகிறது.
பா.ஜனதா இதுவரை இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தற்போது வரை 270 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் ஏற்கனவே போட்டியிட்ட 33 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நேற்று 72 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏறக்குறைய பாதி அளவிற்கு, அதாவது 30 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இரண்டு பட்டியல்களை சேர்த்து 21 சதவீதம் பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் பிரக்யா தாகூர், ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
140 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவுதம் கம்பீர் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார். ஹர்ஷ் மல்ஹோத்ரா தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.
டெல்லியில் மட்டும் தற்போது எம்.பி.யாக இருக்கும் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனோஜ் திவாரிக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 20 பேரில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 எம்.பி.களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குஜராத் மாநிலத்தில் ஏழு எம்.பி.க்களில் மூன்று பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மத்திய மந்திரி தர்ஷனா ஜர்தோஷ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- இந்திய அரசமைப்பின் 11-வது சட்டப்பிரிவு பாராளுமன்றத்திற்குத்தான் முழு அதிகாரம் வழங்குகிறது.
- இது மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசை சார்ந்தது அல்ல.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநில அரசுகள் அமல்படுத்தமாட்டோம் என தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேட்டி அளித்தார். அப்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அரசமைப்பின் 11-வது சட்டப்பிரிவு குடியுரிமை தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்கான அனைத்து அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. இது மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசை சார்ந்தது அல்ல. தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பாளர்கள் என்று நினைக்கிறேன். திருப்பதிப்படுத்தும் அரசியலுக்கான அவர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அமித் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் இந்த சட்டம் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு அமித் ஷா கூறியதாவது:-
இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வர முடியாது என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். சிஏஏ பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. சிஏஏ-வை திரும்பப் பெறுவது நடக்காத விசயம். இது முழுக்க முழுக்க அரசமைப்பு ரீதியாக செல்லும்படியாகும் சட்டம்.
இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. சிஏஏ-வை அமல்படுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என உத்தவ் தாக்கரேயிடம் கேட்க விரும்புகிறேன். சிறுபான்மையினர் வாக்குகளுக்கான அவர் திருப்பதிப்படுத்தும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.






