என் மலர்
டெல்லி
- சிஏஏ எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- சிஏஏ குறித்த அமெரிக்காவின் அறிக்கை தேவையற்றது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிஏஏ அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை, அது தவறானது, தவறான தகவல் மற்றும் தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம்.
சிஏஏ 2019 இந்தியாவின் உள்ளடக்கிய மரபுகள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப உள்ளது.
டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது என தெரிவித்தார்.
#WATCH | On CAA, MEA Spokesperson Randhir Jaiswal says, "As you are well aware, the Citizenship Amendment Act 2019 is an internal matter of India and is in keeping with India's inclusive traditions and a long-standing commitment to human rights. The act grants a safe haven to… pic.twitter.com/cJBiDvI7JU
— ANI (@ANI) March 15, 2024
- 2 தேர்தல் ஆணையர்கள் நேற்று நியமிக்கப்பட்டார்கள்.
- தேர்தல் ஆணைய நியமன புதிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு டிசம்பரில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், மூத்த மந்திரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு பரிந்துரையின்படி தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்படுகிறார்கள். காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையர்கள் நேற்று நியமிக்கப்பட்டார்கள்.
தேர்தல் ஆணைய நியமன புதிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு புதிய தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. இந்த வழக்கின் விசாரணை வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது.
- குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
- குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை கோரிய மனுக்களை வருகிற 19-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
புதுடெல்லி:
குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், இன்று தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மனுதாக்கல் செய்தவர்களுக்கு தார்மீக பொறுப்பு கிடையாது என்றும் இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை கோரிய மனுக்களை வருகிற 19-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
- தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
- 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி:
புதிய தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சந்து ஆகியோர் இன்று காலை பதவியேற்று கொண்டனர்.
இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மற்றும் புதிய தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, தெலுங்கானா, புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் 6 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்ற தேர்தலை ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மே மாத இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தேர்தல் ஆணையர்கள் இருவரும் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
- தலைமை தேர்தல் ஆணையர் இருவருடன் இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.
பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார்.
இதையடுத்து இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி தேர்வு செய்தது.
இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சந்து இன்று காலை பதவியேற்று கொண்டனர். முன்னதாக அவர்களை தலைமை தேர் தல் கமிஷனர் ராஜீவ்குமார் வரவேற்றார்.

இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து முடிவு எடுத்து விட்ட நிலையில் அது தொடர்பாக புதிய இரு தேர்தல் கமிஷனர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார்.
அவர்கள் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணைய இணைய தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- நன்கொடையாளர்கள் அளித்த தொகை எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற தொகை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள்தான் இருந்தது.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.
தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், திங்கிட்கிழமை இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தரவுகளை சீலிட்ட கவரில் வழங்கிய தேர்தல் ஆணையம், இணைய தளத்தில் பதிவேற்ற நகல் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
- தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் புகார்.
- புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது:-
சில தினங்களுக்கு முன்னதாக பெண் ஒருவர் எனது வீட்டிற்கு வந்தார். அவர் அழுது கொண்டே சில பிரச்சனைகளை கூறினார். என்ன பிரச்சனை என்று அவரிடம் நான் கேட்டேன். அத்துடன் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனருக்கு போன் செய்து, இது தொடர்பாக பேசினேன். மேலும் அந்த பெண்ணிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன்.
பின்னர், அந்த பெண் எனக்கு எதிராக பேசத் தொடங்கிவிட்டார். இந்த விவகாரத்தை நான் போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். நேற்று எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இதற்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக என்னால் கூற முடியாது.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தனது மகள் உடன் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பெண் ஒருவர் எடியூரப்பா மீது புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக விலை மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
- இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கடந்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், வாக்கு வங்கியை குறிவைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் தற்போது விலையை குறைத்துள்ளது. தேர்தலுக்குப் பின் மீண்டும் உயர்த்தமாட்டோம் என சொல்வார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில்தான் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் (நடைபயணம்) தாக்கம் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் "பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைப்பு நல்ல விசயம். பாரத் ஜோடோ நியாய யாத்ரா சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என ராகுல் காந்தி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்" என்றார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக விலை மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தலுக்குப் பிறகு இதன் விலை உயர்த்தப்படமாட்டாது என்று இந்த அரசு சொல்லுமா?
- சமையல் சிலிண்டர் விலை 700 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தேர்தலுக்கு முன்னதாக 100 ரூபாய் குறைத்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக மாறாமல் இருந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய மந்திரி அறிவித்தார்.
அதன்படி இன்று காலை முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் சமையல் சிலிண்டர் விவகாரத்தில் பா.ஜனதா என்ன செய்ததோ? அதே சாதுரியத்தை இதிலும் கடைபிடித்துள்ளனர் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பியும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
கடந்த வாரம் நான் ஊடக சந்திப்பின்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் எனக் கூறியிருந்தேன். அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தலுக்குப் பிறகு இதன் விலை உயர்த்தப்படமாட்டாது என்று இந்த அரசு சொல்லுமா?
பா.ஜனதா அரசால் சமையல் சிலிண்டர் விலை 700 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தேர்தலுக்கு முன்னதாக 100 ரூபாய் குறைத்துள்ளது.
அதே சாதுரியத்தை பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் கையாண்டுள்ளது.
இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- பா.ஜனதா கட்சி அதிகபட்சமாக 6060 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.
- காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.
தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அது தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.
அதன் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி நன்கொடையாளர்கள் பெயர் மற்றும் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற தொகை ஆகிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது.
தேர்தல் ஆணையம் அந்த தரவுகளை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள டாப் 10 நிறுவனங்கள் பெயர் பின்வருமாறு:-
1. பியூட்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் (Future Gaming and Hotel Services PR)- ரூ. 1368 கோடி
2. மேகா இன்ஜினீயரிங் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரச்சர்ஸ் லிட் (Megha Engineering & Infrastructures Ltd)- ரூ. 966 கோடி
3. குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிட் (Qwik Supply Chain Pvt Ltd)- ரூ. 410 கோடி
4. வேதாந்தா லிட் (Vedanta Ltd)- ரூ. 400 கோடி
5. ஹல்தியா எனர்ஜி லிட் (Haldia Energy Ltd)- ரூ. 377 கோடி
6. பாரதி குரூப் (Bharti Group)- ரூ. 247 கோடி
7. எஸ்சல் மைனிங் அண்டு இன்ஸ்ட்ரீஸ் லிட் (Essel Mining & Industries Ltd)- ரூ. 224 கோடி
8. வெஸ்டர்ன் யூபி பவர் டிரான்ஸ்மிசன் கம்பேனி லிட் (Western UP Power Transmission Company Ltd)- ரூ. 220 கோடி
9. கேவேந்தர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா லிட் (Keventer Foodpark Infra Ltd) - ரூ. 195 கோடி
10. மதன்லால் லிட் (Madanlal Ltd)- ரூ. 185 கோடி
பா.ஜனதா கட்சி அதிகபட்சமாக 6060 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது எனவும், காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. திமுக 639 கோடி ரூபாயும், அதிமுக 6 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன.
பியூட்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம் ஆகும்.
- 663 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
- பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதற்கிடையே, தொடர்ந்து 663-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என பெட்ரோலியத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.
- 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு.
- 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு.
எஸ்.பி.ஐ வழங்கிய தேர்தல் பத்திரத் தரவுகள், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
337 பக்க ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கியுள்ளன.
இதில், 22,030 தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.






