என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையர்கள்"

    • தமிழகத்தில் நடக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி தேர்தல் கமிஷனிடம் அவர்கள் தெரிவிப்பார்கள்.
    • தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தேர்தல் கமிஷன் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.

    இம்மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டி வரும் 12-ந் தேதி தேர்தல் துணை கமிஷனர்கள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்வார்கள்.

    பின்னர் தமிழகத்தில் நடக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி தேர்தல் கமிஷனிடம் அவர்கள் தெரிவிப்பார்கள். அதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தேர்தல் கமிஷன் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

    அவர்கள் வருகையின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை, வங்கிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துவார்.

    • 2 தேர்தல் ஆணையர்கள் நேற்று நியமிக்கப்பட்டார்கள்.
    • தேர்தல் ஆணைய நியமன புதிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு டிசம்பரில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், மூத்த மந்திரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு பரிந்துரையின்படி தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்படுகிறார்கள். காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையர்கள் நேற்று நியமிக்கப்பட்டார்கள்.

    தேர்தல் ஆணைய நியமன புதிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு புதிய தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. இந்த வழக்கின் விசாரணை வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது.

    • 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம்.
    • 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்த பிறகும், தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை.

    பத்திரிகையாளர் அமைப்பான பிரஸ் கிளப் ஆப் இந்தியா பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

    அக்கடிதத்தில், "கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம்.

    இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் என்ன நடந்தது என்பதை பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும்.

    பத்திரிகையாளர் சந்திப்புகளில், பத்திரிகையாளர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றைத் தீர்த்து வைப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    பத்திரிகையாளர்கள் நடந்துகொண்டிருக்கும் தேர்தல்களைப் பற்றி மக்களுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் ஆணையர்கள் மின்னணு ஊடகங்கள் மூலம் வாக்காளர்களிடம் நேரடியாக பேசலாம்.

    நாடு முழுவதும் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்த பிறகும், தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தாதது குறித்து பத்திரிகையாளர் அமைப்புகளான நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். கடந்த தேர்தல்களில் இவ்வாறு நடந்ததில்லை. இந்த புதிய மாற்றங்கள் தேர்தல் நேர்மையாக நடக்கிறதா என்ற அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

    இந்தச் சூழலில், ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். மேலும், வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நாளுக்குள் பதிவான வாக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை மற்றும் இறுதியான வாக்குப்பதிவு சதவீதம் உள்ளிட்ட முழு வாக்குப்பதிவு தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று கோருகிறோம்.

    தேர்தல் முறையில் வாக்காளர்களின் நம்பிக்கையை உறுதிசெய்ய இத்தகைய வெளிப்படைத்தன்மை அவசியம். இந்தக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மோடி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதியிடம் கடிதத்தை ஒப்படைத்தார்.
    • வரும் 8-ந்தேதி புதிய ஆட்சி பொறுப்பேற்கும் என்று கூறப்படுகிறது.

    நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.

    இதையடுத்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆட்சி அமைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ஏதுவாக மோடி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதியிடம் கடிதத்தை ஒப்படைத்தார். ஜனாதிபதியும் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரை காபந்து பிரதமராக நீடிக்கும் படி ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இதையடுத்து வரும் 8-ந்தேதி புதிய ஆட்சி பொறுப்பேற்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜனாபதிபதி திரெளபதி முர்முவை இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நேரில் சந்திக்க உள்ளனர். அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் விரிவான பட்டியலை வழங்க உள்ளனர். அதன் பிறகு ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார்.

    ×