search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிப்பு

    • தேர்தல் ஆணையர்கள் இருவரும் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
    • தலைமை தேர்தல் ஆணையர் இருவருடன் இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார்.

    இதையடுத்து இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி தேர்வு செய்தது.

    இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சந்து இன்று காலை பதவியேற்று கொண்டனர். முன்னதாக அவர்களை தலைமை தேர் தல் கமிஷனர் ராஜீவ்குமார் வரவேற்றார்.

    இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து முடிவு எடுத்து விட்ட நிலையில் அது தொடர்பாக புதிய இரு தேர்தல் கமிஷனர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    அவர்கள் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணைய இணைய தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×