search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல்: ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த திட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தல்: ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த திட்டம்

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
    • 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    புதிய தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சந்து ஆகியோர் இன்று காலை பதவியேற்று கொண்டனர்.

    இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மற்றும் புதிய தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, தெலுங்கானா, புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் 6 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    மே மாத இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×