search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தியின் நடை பயணத்தின் தாக்கம் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: ஜெய்ராம் ரமேஷ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ராகுல் காந்தியின் நடை பயணத்தின் தாக்கம் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: ஜெய்ராம் ரமேஷ்

    • பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக விலை மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மத்திய அரசு கடந்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், வாக்கு வங்கியை குறிவைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் தற்போது விலையை குறைத்துள்ளது. தேர்தலுக்குப் பின் மீண்டும் உயர்த்தமாட்டோம் என சொல்வார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில்தான் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் (நடைபயணம்) தாக்கம் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும் "பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைப்பு நல்ல விசயம். பாரத் ஜோடோ நியாய யாத்ரா சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என ராகுல் காந்தி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்" என்றார்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக விலை மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×