டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து- 4 பேர் உடல் கருகி பலி

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியது.கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து- 4 பேர் உடல் கருகி பலி
Published on

டெல்லி:

டெல்லி ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு கட்டிடத்தில் பலர் வசித்து வருகின்றனர்.

இந்த குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com