என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி தீவிபத்து"

    • நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியின் பிதாம்பூரா பகுதியில் உள்ள ஸ்ரீ குரு கோபிந்த் சிங் (ஜிஜிஎஸ்) வணிகக் கல்லூரியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. முதல் மாடியில் உள்ள கல்லூரி நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது.

    பல்கலைக்கழகத்தின் ஜன்னல்களில் இருந்து பெரும் புகை வெளியேறியதுடன் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் இருந்த மக்கள் பீதி அடைந்தனர்.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் யாருக்காவது காயங்கள் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியது.
    • கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    டெல்லி:

    டெல்லி ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு கட்டிடத்தில் பலர் வசித்து வருகின்றனர்.

    இந்த குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலானது.
    • தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லியின் வடக்கு பகுதியில் சாந்தினிசவுக் அருகே பதேபுரி மஸ்ஜித் என்ற இடத்தில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. இன்று அதிகாலை 3 மணிக்கு அங்குள்ள கடைகளில் திடீரென தீப்பிடித்தது.

    5 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலானது. கிழக்கு டெல்லியில் மதுவிகார் என்ற இடத்தில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தில் மாநகராட்சி கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 17 கார்கள் முழுமையாக எரிந்து சாம்பலானது.

    தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர்.

    ×