search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NMC"

    • மத்திய அரசு மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    • ஒரு டாக்டரை அணுகுவதற்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு தடைவிதிக்கும் வகையில் மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான சீரான விதிமுறையை தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. இனி மருந்து நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய விவரங்கள் வருமாறு:

    டாக்டர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்கள் பரிசுகள் வழங்கக் கூடாது.

    ஒரு டாக்டரை அணுகுவதற்கு அவர்களுக்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக் கூடாது.


    மருந்துகளைப் பரிந்துரைக்க தகுதி இல்லாதவர்களுக்கு இலவச மாதிரிகள் வழங்கக் கூடாது.

    தங்கும் விடுதி, ஓய்வு விடுதி, விலை உயர்ந்த உணவு போன்ற எந்தவொரு விருந்தோம்பலையும் வழங்கக் கூடாது.

    கருத்தரங்கம், மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்கு உள்நாட்டு அல்லது வெளிநாடுகளுக்கான பயண வசதிகளை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.
    • சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா? எனத் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இருவேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) தடை விதித்து உள்ளது. நடப்பாண்டில் 400 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப முடியாத நிலை எழுந்து உள்ளது.

    இரு கல்லூரிகளுமே நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ளதால் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் ஏதும் அதில் இல்லை. அதே வேளையில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் 100 இடங்களுக்கு மட்டுமே என்.எம்.சி. அனுமதி அளித்தது. ஆனால் 150 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடை பெற்றதாகவும் அதனால் நடப்பாண்டில் அங்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் என்.எம்.சி. இணையப்பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதே போல் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கும் நடப்பாண்டில் தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. அந்த கல்லூரியில் 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. தற்போது அங்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்றும் அகில இந்திய கலந்தாய்வில் மாணவர்கள் அந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம் என்றும் மத்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

    ஏற்கனவே அங்கு இடங்களை தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு மாற்று தேர்வு இடங்கள் வழங்கப்படும் என்றும் கூறி இருந்தது. இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டின் முதல் சுற்று கலந்தாய்வில் மீனாட்சி மருத்துவ கல்லூரியின் எம்.பி.பி.எஸ். இடங்கள் எந்த மாணவருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    அதே வேளையில் என்.எம்.சி.யின் அறிக்கை வெளியாவதற்கு முன்பே கலந்தாய்வில் வேல்ஸ் கல்லூரியில் சில மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் அங்கு சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா? எனத் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு மாணவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
    • இதில் தமிழகத்துக்கு புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இளங்கலை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 94 சதவீதம் அதிகரித்து, தற்போது 99,763 ஆக அதிகரித்துள்ளது. இந்த 50 புதிய மருத்துவ கல்லூரிகளில் (30 அரசு மற்றும் 20 தனியார்) கல்லூரிகளாகும்.

    அதன்படி, தெலுங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஒடிசா, நாகாலாந்து, மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதில், தெலுங்கானாவுக்கு மட்டும் 12 புதிய மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்.எம்.சி) இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் ஆய்வுகளின் போது, பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனக் கூறி நாடு முழுவதும் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் கடந்த இரண்டரை மாதங்களில் திரும்பப் பெறப்பட்டது.

    கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், சிசிடிவி கேமராக்கள், ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பட்டியல்கள் தொடர்பான பல குறைபாடுகள், கமிஷனின் யுஜி போர்டு நடத்திய ஆய்வுகளின்போது கவனிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

    நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்து தற்போது 654 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    ×