என் மலர்tooltip icon

    சத்தீஸ்கர்

    • விரதம் இருப்பதால் முட்டைக் குழம்பு சமைக்க மனைவி மறுப்பு.
    • விரக்தியில் கணவன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.

    சத்தீஸ்கர் மாநிலத்தில், கணவன் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக விரதம் இருக்க, கணவன் வாங்கி வந்த முட்டையை சமைக்க மறுப்பு தெரிவித்ததால், அந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டம் சங்கரா கிராமத்தில் திகுரான் என்பவர் விசித்து வந்தார். இவர் நேற்று மாலை முட்டைகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அவற்றை மனைவிடம் கொடுத்து, முட்டைக் குழம்பு தயார் செய்ய கூறியுள்ளார். ஆனால், அன்றைய தினம் (திங்கட்கிழமை) கரு பாத் (Karu Bhaat) விழா. அடுத்த நாள் விரதம் கடைபிடிக்க இருக்கிறேன். இதனால் முட்டைக் குழம்பு சமைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதனால் கணவன் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் உடலை பரிசோதனைக்கு அனுப்பி தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகற்காய் சேர்த்து கசப்பாக சமைக்கப்படும் சாப்பாடு கரு பாத் என அழைக்கப்படும். தீஜ் விழாவுக்கு முந்தைய தினம் இதை சாப்பிடுவார்கள். அதற்கு ஆடத்த நாள் நர்ஜாலா விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் விரதம் கடைபிடிப்பதற்கு முந்தைய நாள் கடைசியாக கரு பாத் சாப்பிடுவார்கள். கணவன் நீண்ட ஆயுளுடன் செழிப்புடன் வாழ்வதற்காக சத்தீஸ்கர் மாநில பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

    தன்னுடைய கணவன் நீண்ட ஆயுளுடன் விரதம் இருப்பதற்காக, மனைவி முட்டைக் குழம்பு சமைக்க மறுப்பு தெரிவித்ததால், அந்த கணவனே உயிரை மாய்த்துக் கொண்டார்.

    • 2 கன்னியாஸ்திரிகளை சத்தீஷ்கர் மாநில போலீசார் கைது செய்தனர்.
    • நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.

    கேரள மாநிலம் அங்கமாலி எழுவூர் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர் மேரி. கண்ணூர் தலச்சேரி உதயகிரி திருச்சபையை சேர்ந்தவர் வந்தனா பிரான்சிஸ். இவர்கள் இருவரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்.

    சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரெயில் நிலையத்தில் வைத்து இந்த 2 கன்னியாஸ்திரிகளையும், சத்தீஷ்கர் மாநில நாராயண்பூர் பகுதியை சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் போலீசார் கைது செய்தனர்.

    சுக்மான் மண்டாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 18 மற்றும் 19 வயதுள்ள 3 இளம் பெண்களை கட்டாய மதம் மாற்றம் செய்யும் வகையில் கடத்தி 2 கேரள கன்னியாஸ்திரிகளிடம் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

    நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது நியாயமானது அல்ல. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் உள்பட பலர் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

    • சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது
    • அரசு அதிகாரிகள், மருந்து சப்ளையர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு மருந்து பொருட்கள் வாங்கியதில் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது. இது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் இந்த மோசடி தொடர்பாக சத்தீஸ்கரில் இன்று பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். சத்தீஸ்கர் முழுவதும் 18 இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்ப்பூர், துர்க் பகுதிகளில் உள்ள இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள், மருந்து சப்ளையர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    • இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
    • போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.

    "ஐ லவ் யூ" என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் "ஐ லவ் யூ" என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

    அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

    இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ் அகர்வால், "ஐ லவ் யூ" என்று ஒருமுறை மட்டும் சொல்வது, தொடர்ந்து அல்லது பாலியல் ரீதியாகத் தூண்டும் நடத்தை இல்லாமல், போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.

    அட்டர்னி ஜெனரல் ஃபார் இந்தியா வெர்சஸ் சதீஷ் (2021) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பாலியல் ரீதியான சைகை பாலியல் தொல்லையின் வரம்பிற்குள் வர வேண்டுமானால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இதையடுத்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, இளைஞரின் விடுதலையை நீதிபதி உறுதி செய்தார். 

    • 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் மாவோயிஸ்ட் இல்லாத நாடாக இந்தியா மாறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    • கடந்த 18 மாதங்களில் 421 மாவோயிஸ்ட்டுகள் என்கவுண்டர்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து தென்பகுதியில் 400 கி.மீ. தூரத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    கடந்த 18 மாதங்களில் 421 மாவோயிஸ்ட்டுகள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.

    மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்புப்படை வீரர்களுடன் இணைந்து போலீசார் கூட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடைபெற்ற சண்டையில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏ.கே. 47 துப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    2026 மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்தியா மாவோயிஸ்ட்டுகள் இல்லாத நாடாக மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய மாவட்டங்களில் நாராயண்பூர் மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க இந்த உத்தி பின்பற்றப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாஹலின் மகன் சைதன்யா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹலும் அவரது மகனும் ஒரே இல்லத்தில் வசிக்கும் நிலையில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் முடிவில் பூபேஷ் பாஹலின் மகனை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

     

    அமலாக்கத்துறையால் தனது மகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹல் கூறுகையில்,

    காங்கிரஸ் அதானிக்கு எதிராகப் போராடுகிறது. எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க இந்த உத்தி பின்பற்றப்பட்டுள்ளது.

    அதானிக்கு எதிராக யாரும் குரல் எழுப்பக்கூடாது என்பதற்காக அவர்கள் இப்போது என் மகனைக் குறிவைக்கிறார்கள். நாங்கள் இதற்கு பயப்படவோ அடிபணியவோ மாட்டோம்.

    என் மகன் அவரது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் எனது பிறந்தநாளில் எனது ஆலோசகர் குறிவைக்கப்பட்டார் என்று கூறினார்.

    • 20 வருடங்களாக கோவாவில் கிராந்தி யோகா வகுப்புகளை கற்பித்து வந்தார்.
    • ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு புதிய ஆசிரமத்தைக் கட்டும் பணியைத் தொடங்கினார்.

    தனது ஆசிரமம் மூலம் கஞ்சா விற்பனை செய்ததற்காக பிரபல யோகா குரு கைது தருண் கிராந்தி அகர்வால் செய்யப்பட்டார்.

    தருண் கிராந்தி அகர்வால் கடந்த 20 வருடங்களாக கோவாவில் யோகா வகுப்புகளை கற்பித்து வந்தார். வெளிநாட்டினருக்கும் அவரை தேடி வந்து யோகா கற்றனர்.

    இறுதியாக அவர் கோவாவில் உள்ள ஆசிரமத்தின் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு சத்தீஸ்கருக்கு வந்தார். அங்கு ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் ஒரு புதிய ஆசிரமத்தை கட்டும் பணியை தருண் கிராந்தி அகர்வால் மேற்கொண்டு வந்தார்.

    ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு புதிய ஆசிரமத்தைக் கட்டும் பணியைத் தொடங்கினார். அதற்கு முன் அங்கு அவர் ஒரு தற்காலிக ஆசிரமத்தையும் அமைத்திருந்தார். இங்கு அண்மையில் வெளிநாட்டிலிருந்து சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

    இறுதியாக, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. NDPS பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு யோகா குரு தருண் கிராந்தி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

    • சராசரியாக 4 நாட்களுக்கு ஒரு பெண் தனது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
    • 30 கொலைகளில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடத்தை சந்தேகத்தாலும், 6 கொலைகள் போதையிலும் நடந்துள்ளது.

    மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராஜாரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் பரப்பப்படுகிறது.

    ஆனால் சத்தீஸ்கரில் கடந்த 115 நாட்களில் மட்டும் 30 மனைவிகள் கணவன்மார்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, சராசரியாக 4 நாட்களுக்கு ஒரு பெண் தனது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இந்த 30 கொலைகளில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடத்தை சந்தேகத்தாலும், 6 கொலைகள் போதையிலும் நடந்துள்ளது. மற்ற கொலைகள் குடும்ப வன்முறை, வரதட்சணை பிரச்சனை, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் நடந்துள்ளது.

    • ஒரு அரசியல் கட்சியின் சொத்துக்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவது இதுவே முதல் முறை.
    • ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கு விசாரணையில் உள்ளது.

    சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை (ED) விசாரித்து வருகிறது.

    இந்நிலையில் முக்கிய நடவடிக்கையாக, சுக்மா மாவட்டத்திலுள்ள காங்கிரஸ் பவன் அலுவலகம், முன்னாள் அமைச்சர் கவாசி லக்மாவின் ராய்ப்பூர் இல்லம், மற்றும் அவரது மகன் ஹரீஷ் கவாசியின் சுக்மா இல்லம் என மொத்தம் ரூ.6.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

    ஒரு அரசியல் கட்சியின் சொத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவது இதுவே முதல் முறை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கை பா.ஜ.க-வின் அரசியல் சதி என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சுக்மா அலுவலகம் கட்டப்பட்டதற்கான ஒவ்வொரு பைசாவின் கணக்கையும் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

    • கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை.
    • நேற்றிரவு மற்றும் இன்று காலை நடைபெற்ற சண்டையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர்கள் சுதாகர், பாஸ்கர் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டு வீ்ழ்த்தப்பட்டனர்.

    பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் நடைபெற்ற நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஏழு நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்திப்பட்டனர். அவர்களின் உடல்களை பாதுகாப்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்றிரவு நடைபெற்ற சண்டைக்குப்பிறகு 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படை (Special Task Force), மாவட்ட ரிசர்வ் கார்டு (District Reserve Guard), மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) சிறப்புக் குழுவான CoBRA ஆகியவை இணைந்து கடந்த 4ஆம் தேதி ரகசிய தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நேற்று பாஸ்கர் சுட்டு வீழ்த்தப்பட்டார். நேற்று முன்தினம் சுதாகர் சுட்டு வீழ்த்தப்பட்டார். இவர்களது தலைக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுட்டுக்கொலை செய்யப்பட்ட மற்ற 5 பேர்களில் இருவர் பெண்கள் ஆவார்கள். இந்த சண்டையின்போது பாம்பு, தேனீக்கள் காரணமாக சில வீரர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இளைஞர்கள் அவர்களை வழியில் தடுத்து நிறுத்தி அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினர்
    • தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் இளம் பெண்ணின் விரலைக் கடித்தார்.

    சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு வீடு திரும்பும் இளம்பெண்களை இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை இரவு ராய்ப்பூரில் விழா முடிந்து திரும்பியபோது சில இளைஞர்கள் அவர்களை வழியில் தடுத்து நிறுத்தி அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் இளம் பெண்ணின் விரலைக் கடித்தார்.

    வைரலாகி வரும் வீடியோவின் அடிப்படையில், இந்த சம்பவத்தை காவல்துறையினர் தானாக முன்வந்து எடுத்துள்ளதாக ராய்ப்பூர் காவல் கண்காணிப்பாளர் (SP) உமேத் சிங் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.  

    • சேறு நிறைந்த குழியில் குட்டி யானை விழுந்துள்ளது.
    • இது தொடர்பான வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தில் சேறு நிறைந்த குழியில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினரும் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்டனர்.

    குழியில் விழுந்த குட்டி யானையில் அலறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் ஜேசிபி உதவியுடன் குழிக்கு பக்கத்தில் ஒரு பாதையை உருவாக்கி யானை மீட்டனர்.

    சேற்றில் விழுந்த தன்னை காப்பாற்றியதற்காக ஜேசிபி மீது தும்பிக்கையை வைத்து குட்டி யானை நன்றி கூறியது.

    இது தொடர்பான வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ×