என் மலர்
ஆந்திர பிரதேசம்
- இன்று காலையில் கூட்டம் மேலும் அதிகரித்தது.
- சில மணி நேரங்களில் நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் தீர்ந்தன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவில் பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.
நேர ஒதுக்கீடு இலவச டோக்கன் வழங்கும் இடங்களில் அதிக அளவில் பக்தர்கள் இருந்தனர். இதனால் சில மணி நேரங்களில் நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் தீர்ந்தன.
நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வெளியே வரிசையில் பக்தர்கள் காத்து நின்றனர். இன்று காலையில் கூட்டம் மேலும் அதிகரித்தது. இதனால் 24 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கூடுதலாக தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.
இதற்காக திருப்பதி மாநகராட்சிக்கு ரூ. 5 கோடி திருப்பதி கோவில் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதியதாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 79 ஆயிரத்து 521 பேர் சாமி தரிசனம் செய்தனர். 40 ஆயிரத்து 152 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.87 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- விஷ வாயுவை சுவாசித்த 25 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
- 23 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், சூர்யா லங்கா என்ற இடத்தில் விமானப்படை மையத்தின் சார்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது.
நேற்று காலை பள்ளிக்கு வந்த 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி வகுப்பு நடந்தது. அப்போது அறிவியல் ஆசிரியர் குளோரோபில் மற்றும் எலுமிச்சை, உப்பு கரைசல் மூலம் பரிசோதனை செய்து மாணவர்களுக்கு காண்பித்தார்.
சில குறும்பு பிடித்த மாணவர்கள் ஆசிரியர் செய்து காண்பித்த கரைசலுடன் காப்பித்தூள், சர்க்கரை, உப்பு, சானிடைசரை கலந்தனர்.
அப்போது மாணவர்கள் செய்த கலவையில் இருந்து திடீரென விஷ வாயு உருவாகி ஆய்வகம் முழுவதும் புகைப்பரவி அருகில் இருந்த 7-ம் வகுப்பறைக்குள் சென்றது. விஷ வாயுவை சுவாசித்த 25 மாணவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக விமானப்படைத்தள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் வெங்கட் முரளி சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். ஆஸ்பத்திரியில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 23 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
2 மாணவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
- திருப்பதி தேவாஸ்தன மருத்துவமனையில் பெண் மருத்துவர் தாக்கப்பட்டார்.
- மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணையில் பெண் மருத்துவரை தாக்கிய நபர் மன நோயாளி என்று தெரியவந்தது. மன நல சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மருத்துவரை தாக்கியுள்ளார். பெண் மருத்துவர் தாக்கப்பட்டது, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மேலும், மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- தொழில் அதிபர் குடும்பம் 25 கிலோ தங்கத்தை அணிந்து செல்லும் வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- பெரியவர்களுடன் ஒரு குழந்தை நிற்பதை காணலாம்.
ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு நேற்று மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் குடும்பம் 25 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்தனர்.
இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தொழில் அதிபர் குடும்பம் 25 கிலோ தங்கத்தை அணிந்து செல்லும் வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவில் நான்கு பேர் கொண்ட குடும்பம் நிற்பதை காணலாம். வெள்ளை வேட்டி அணிந்தபடி இரண்டு ஆண்கள் கழுத்தில் தடிமனான தங்க நகைகளுடன் காணப்படுகிறார்கள்.
மேலும் தங்க நிற சேலையில் நகைகள் அணிந்தபடி ஒரு பெண்ணை காணலாம். பெரியவர்களுடன் ஒரு குழந்தை நிற்பதையும் காணலாம்.
வீடியோவில் தொழில் அதிபர் குடும்பம் குடும்பம் போலீஸ்காரருடன் கோவில் வளாகத்திற்குள் நடந்து செல்வதை காண முடிகிறது.
- அக்டோபர் 3 முதல் 12-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
- அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3 முதல் 12-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின் போது சாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் வருவார்கள். அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 3-ந்தேதி (அங்குரார் ப்பணம் ) முதல் 12-ந் தேதி (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) வரை தினமும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வி.ஐ.பி. தரிசனம் அதிகாரி பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
- விபத்துகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயங்களுமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-
அச்சுதாபுரம் மருந்து நிறுவன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாகா மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டேன்.
அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தைரியம் கொடுத்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ. தலா 25 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.
எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்போம். விபத்துகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாட்டை பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது.
- தற்போது மாடு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிகானூரில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதி அடைந்து சாலையோரம் படுத்து கிடந்தது. இதனைக் கண்ட வக்கீல் திம்மப்பா என்பவர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
கால்நடை மருத்துவர்கள் மாட்டை மீட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். மாட்டை பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் மாட்டின் வயிற்றில் இருந்து 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே எடுத்தனர். தற்போது மாடு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- 2019 முதல் 2024 வரை முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது,
- முட்டையின் ஓடு உடைந்து குஞ்சு பொரிவது போல ஜெகன் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருவதாகத் தெலுங்கு தேசம் விமர்சித்துள்ளது.
தற்போதைய ஆந்திர மாநில அரசியலில் முட்டை பப்ஸ் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த சமயத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டு வந்துள்ளது என்று தெலுங்கு தேசம் குற்றம் சாட்டியுள்ளது.
ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 2019 முதல் 2024 வரை ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடந்த நிலையில் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார் ஜெகன்.
சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனது முதல் தன்னை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக ஜெகன் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் தான், ஜெகன் மோகன் ஆட்சிக்காலத்தில் 2019 முதல் 2024 வரை முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது, வருடத்துக்கு ரூ.72 லட்சதுக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்று தெலுங்குதேசம் கட்சி கூறியுள்ளது.
மக்கள் பணத்தை ஜெகன் மோகன் அனைத்து வகையிலும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் முட்டையின் ஓடு உடைந்து குஞ்சு பொரிவது போல ஜெகன் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருவதாகத் தெலுங்கு தேசம் விமர்சித்துள்ளது.
- நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிரஞ்சீவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. அவரது இயற்பெயர் கோனிடெலா சிவசங்கரா வரபிரசாத். தீவிர அனுமான் பக்தரான இருந்து வந்த இவர் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க, சினிமாவில் நடிக்கும்போது தனது பெயரை சிரஞ்சீவி என மாற்றிக்கொண்டார்.
1978இல் வெளியான பிராணம் கரீது என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் இந்திய ஹீரோ என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிரஞ்சீவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோல் லீக் ஆகியுள்ளது.
- தீ மளமளவென அருகில் உள்ள சாலையோர கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வேகமாக பரவியது.
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் பீடி பிடித்தவரின் அலட்சியத்தால் ஒரு சில நிமிடங்களில் ஆந்திராவில் கடை ஒன்று சாம்பலாகியுள்ளது.
அனந்தபூர் மாவட்டத்தில், பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து நபர் ஒருவர் ஐந்து லிட்டர் பெட்ரோலை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
ஆனால், பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோல் லீக் ஆகியுள்ளது. இதனால், பெட்ரோல் பங்க் சாலையில் இருந்து பெட்ரோல் கசிந்துள்ளது.
அப்போது, சாலையின் கடையோரம் நின்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் பீடி பிடித்துள்ளார். அப்போது, தீ பீடியில் பற்ற வைத்து தீக்குச்சியை சாலையில் எறிந்த நொடி, தீ பற்றிக்கொண்டது.
இதனால், தீ மளமளவென அருகில் உள்ள சாலையோர கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வேகமாக பரவியது. அதற்குள், கடையில் தீ பரவி பலத்த சேதமடைந்துள்ளது. அருகில் நின்றுக் கொண்டிருந்த இரு சக்கர வாகனமும் சேதமடைந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆந்திரா மருந்து நிறுவனத்தில் மதிய உணவு நேரத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன.
ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதிய உணவு நேரத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அணு உலை வெடித்ததால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது.
வெடி விபத்து குறித்து தகவல் தெரியவந்ததை தொடர்ந்த, போலீசார் மற்றும் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ஆம்புலன்ஸ்கள் வளாகத்திற்கு நுழைந்தது தெரிந்தது.
இந்த விபத்தில், முதற்கட்ட தகவலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த வெடி விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கு பிறகு ஆலையின் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. மீட்புப்பணி தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
படுகாயமடைந்தவர்கள் அனகாபள்ளி என்டிஆர் மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
- குழந்தைகள் ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ஜெகநாத சாமி கோவில் அருகே உள்ள ஹார்பர் பூங்காவில் 5 மாத பெண் குழந்தையை விற்க உள்ளதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் இருந்து 15 மாத குழந்தையை விசாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அனக்கா பள்ளி, அச்யுதா புரம், பெத்தாநாவா,ஒரிசாவில் ஜெய்பூர் ஆகிய இடங்களில் இருந்து 17 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 6 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி வரும் கும்பல் டெல்லி மும்பை ஐதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய மாநகரங்களை குழந்தை விற்பனை சந்தையாக கொண்டு செயல்பட்டது தெரியவந்தது.
கடத்தி வரப்படும் குழந்தைகள் ரூ 5 முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ஆந்திராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் முழுவதும் கேமராக்களை பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.






