திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீது தாக்குதல்

திருப்பதி தேவாஸ்தன மருத்துவமனையில் பெண் மருத்துவர் தாக்கப்பட்டார். மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
Tirupati Doctors Protest
Published on

திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணையில் பெண் மருத்துவரை தாக்கிய நபர் மன நோயாளி என்று தெரியவந்தது. மன நல சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மருத்துவரை தாக்கியுள்ளார். பெண் மருத்துவர் தாக்கப்பட்டது, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மேலும், மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com