என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உணவில் மணத்தக்காளி கீரையை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும். இன்று மணத்தக்காளி கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மணத்தக்காளி கீரை - அரை கட்டு,
    சின்ன வெங்காயம் - 10,
    பூண்டு - 3 பல்,
    தேங்காய்ப்பால் - அரை கப்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    மிளகுத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.  

    குக்கர் விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

    மணத்தக்காளி கீரை - தேங்காய் பால் சூப் ரெடி.

    வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நம் சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். வீட்டிலேயே எளிய முறையில் சருமப் பராமரிப்யை மேற்கொள்ளலாம்.
    நம் சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். நமது தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பார்லருக்கும் செல்லலாம். ஆனால் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும்.

    அந்த விஷயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காகப் பார்த்தால் நம் சருமத்தின் அழகு பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் வாங்கும் காஸ்மெட்டிக்ஸ் தரமானதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். வீட்டிலும் சருமப் பராமரிப்பு மேற்கொள்ளலாம்.

    கிளன்சிங்

    காய்ச்சாத பால் எடுத்து அதனுடன் கிளிசரின் பத்து சொட்டு, எலுமிச்சைச் சாறு ஐந்து சொட்டு கலந்து அதில் பஞ்சை நனைத்து முகம், கழுத்து மற்றும் கைகள் என அழுந்தித் துடைக்க வேண்டும். இது ஓர் எளிமையான சிறந்த கிளன்சிங் முறை.

    ஸ்க்ரப்


    நன்கு பழுத்த பப்பாளிப்பழம் அல்லது அன்னாசிப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை மிக்ஸியில் விட்டு தண்ணீர் விடாமல் அரைத்து அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைப் பொடி, கால் ஸ்பூன் சர்க்கரை கலந்து அந்தக் கலவையை முகம், கழுத்து, கை போன்ற இடங்களில் வட்டவட்டமாகத் தேய்க்க வேண்டும். இதனால் நம் உடம்பில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. இதனை குளிப்பதற்கு முன்னால் நன்கு தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டுப் பின்னர் குளிக்கலாம். பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் உள்ள என்ஸைம்கள் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டவை. வாரம் இரண்டு முறை இந்த ஸ்க்ரப்பை செய்து கொள்ளலாம்.

    ஃபேஸ் பேக்

    முகப்பொலிவைக் கூட்டுவதற்காக முகம் மற்றும் கழுத்திற்கு வாரம் ஒரு முறை ஃபேஸ் பேக் போடலாம். வீட்டிலேயே எளிமையாக ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். அதற்கு முதலில் மேரிகோல்டு வாட்டர் தயாரிக்க வேண்டும்.

    மேரி கோல்டு வாட்டர் தயாரிக்கும் முறை

    மினரல் வாட்டர் - 1 லிட்டர்
    கிளிசரின் - 30 மில்லி
    சாமந்திப் பூ - இரண்டு கை கொள்ளும் அளவு.

    மினரல் வாட்டரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி அதில் சாமந்திப் பூவையும் கிளிசரினையும் போட்டு 24 மணி நேரத்திற்கு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் அந்த நீரை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால் 15 நாட்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இரவில் படுக்கும்போது அந்த நீரை பஞ்சில் தொட்டு முகம், கழுத்துபோன்ற பகுதிகளை அழுந்தி துடைக்கலாம். இந்த வாட்டர் சிறந்த டோனராக செயல்படும். அடைப்பட்டிருக்கும் முகத்துவாரங்கள் திறந்து எண்ணெய் பசை மற்றும் அழுக்கு ஆகியவற்றை நீக்கும்.

    ஃபேஸ்பேக் தயாரிக்கும் முறை

    அதி மதுரப்பொடி - அரை தேக்கரண்டி,
    அரிசி மாவு - அரை தேக்கரண்டி, (ஜப்பானீஸ் டெக்னிக்),
    சர்க்கரை - ஒரு சிட்டிகை,
    லைம் ஆயில் (அரோமா ஆயில்) (Lime oil)  - 3 சொட்டுக்கள்,
    ஜெர்ரேனியம் ஆயில் (அரோமா ஆயில்) ( Geranium oil) - 3 சொட்டுக்கள்.

    இவை அனைத்தையும் மேரிகோல்டு வாட்டர் போட்டு கலந்து முகம், கழுத்துப் போன்ற பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு கழுவ வேண்டும். இந் தஃபேஸ்பேக்கை பயன்படுத்த முகச்சுருக்கங்கள் குறையும். இப்படி எளிமையான முறையில் நம் அழகை பாதுகாக்கலாம். 
    மாணவர்கள் தங்களது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்துகொண்டால் முன்னேற்றங்களும் விரைவில் வரும், சாதனைகளையும் நிகழ்த்தலாம்.
    முன்னேற்றங்கள் எப்போதுமே உடனே சாத்தியப்படுவதில்லை. வழக்கமான செயல்பாடுகள் வெற்றியைத் தர தாமதமாகலாம். நமது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்துகொண்டால் முன்னேற்றங்களும் விரைவில் வரும், சாதனைகளையும் நிகழ்த்தலாம். மாணவர்கள் எதிர்கால சாதனையாளராக உயர இந்த உத்திகள் ரொம்பவே பயன் தரும். மாற்றங்களை காண்போமா...

    வழக்கத்தை கணித்தல்

    மாணவர்கள் முதலில் தங்கள் கல்வித் திட்டத்தை நன்கு வகுக்க வேண்டும். நாம் எந்த இலக்கை நோக்கி படிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இடைப் பருவ தேர்வுகளில் நாம் திட்டமிட்டபடி மதிப்பெண் பெறுகிறோமா? ஆசிரியர்களின் பாராட்டை பெறுகிறோமா? என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

    அதற்காக தங்களது அன்றாட செயல்களை முதலில் பட்டியலிட வேண்டும். எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறோம். பள்ளி புறப்பாடு மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், எவ்வளவு நேரத்தை ஓய்வாக கழிக்கிறோம் என்பதையெல்லாம் பட்டியலிட வேண்டும். முடிந்தால் நான்கைந்து நண்பர்களாக கூட்டு சேர்ந்து கொண்டு கல்வித்திட்டம் வகுத்து செயல்படுத்தினால் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம்.

    மாற்றத்தின் முதல் விதி

    இப்போது அன்றாட வழக்கத்தில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அதாவது சிறப்பாக படிக்க என்ன தேவை? என்ன குறைபாடு இருக்கிறது, அதை தீர்க்கும் வழிகள் என்ன? என்பது பற்றி யோசிப்பதுதான் மாற்றத்திற்கான அடிப்படை.

    எனவே நமக்கு எந்தப்பாடம் நன்றாக வருகிறது, எந்தப் பாடத்தில் மதிப்பெண் குறைவாக பெறுகிறோம்? அதற்கு காரணம் என்ன? மதிப்பெண்களை அதிகமாக்க வழிகள் என்ன? கூடுதல் நேரம் படிக்க வேண்டுமா? விளையாட்டை குறைக்க வேண்டுமா? வேடிக்கை அரட்டையை கட்டுப்படுத்த வேண்டுமா? என்பது பற்றி யோசியுங்கள். குழுவாக செயல்பட்டால் தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்து கொண்டு திட்டம் தீட்ட வேண்டும். பின்னர் மாற்றத்தின் அடுத்த விதியை செயல்படுத்தலாம்.

    தீர்வை பரிசோதித்தல்

    இப்போது பிரச்சினைகள், தீர்வுகள் அடங்கிய பட்டியல் உங்களிடம் தயாராக இருக்கும். அடுத்தகட்டமாக திட்டமிட்டபடி அதை செயல்படுத்த வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர், தனக்குத் தெரிந்த பாடத்தை மற்றவர்க்கு கற்றுத் தரலாம். மதிப்பெண் குறைவாக உள்ள பாடத்திற்கு முன்னுரிமை தந்து அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படலாம்.



    காலையில் தாமதமாக எழுவதும், மாலையில் நீண்ட நேரம் பொழுதுபோக்குவதும் படிப்புக்கு இடையூறாக இருந்தால் அதை சரி செய்யலாம். பள்ளியில் சக மாணவர்கள் படிப்பதற்கு இடையூறாக செயல்பட்டால், வீட்டின் பொருளாதார வசதி மற்றும் தேவையான உபகரணங்கள் இன்மை கல்விக்கு தடையாக இருந்தால் அதை சீர் செய்வதற்காக பெற்றோர், ஆசிரியர் உதவியை நாடலாம்.

    புரியாத பாடங்களை புரிந்து கொள்ளவும், குறிப்பிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண் பெறவும் பல வழிகள் உள்ளன. பாடங்களை மனதில் பதிய வைக்க திரும்பத் திரும்ப படித்தல், எழுதிப் பார்த்தல், வீடியோ நிகழ்வாக பாடத்தை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தல், அல்லது வீடியோ வழியாகவே பாடம் படித்தல், நண்பனிடம் ஒப்பித்தல் என வெற்றிக்கான திட்டத்தை செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.

    முடிவை ஆராய்தல்

    அடுத்த கட்ட மாற்றமாக முயற்சிகளின் பலன்களை ஆராய வேண்டும். அதாவது நமது திட்டம் பலன் தந்திருக்கிறதா? என பார்க்க வேண்டும். அடுத்த பருவத் தேர்வில் உங்கள் திட்டம் பலன் தந்திருக்கிறதா? கூடுதல் மதிப்பெண் பெற்றிருக் கிறோமா? என சோதித்துப் பார்க்க வேண்டும். இப்படியாக கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வேண்டும். தேவையற்ற பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும். உங்கள் குழுவில் அனைவருக்கும் மதிப்பெண்களில் முன்னேற்றம் கிடைத்தால் நீங்கள் ஒரு வெற்றிக் கூட்டணி.

    அடுத்த செயல்திட்டத்திற்கு தயாராதல்


    நன்றாகப் படிக்கவும், மதிப்பெண் உயரவும் பாடுபட்ட உங்கள் கூட்டணி, அடுத்து மற்றொரு செயல்திட்டத்தைத் தீட்டலாம். அது பள்ளியில் முதலிடம் பெறுவது, மாவட்டத்தில் முதலிடம் பெறுவது, மாநில அளவில் சிறப்பிடம் பெறுவது என உயர்ந்த லட்சியமாக இருக்கலாம். அதை அடைவதற்கான திட்டத்தில் ஆசிரியர் மற்றும் பெற்றோரையும் தங்களுடன் கூட்டுசேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், வழிநடத்தவும் பெரிதும் துணை நிற்பார்கள். இத்தகைய திட்டமும், தொடர்முயற்சியும் பெருவெற்றிகளைத் தரும்.

    பள்ளிப் பாடத்திட்டம் என்றில்லை, பள்ளியின் தரத்தை உயர்த்துதல், ஒரு கிராமத்தின் தரத்தை உயர்த்துதல், பொதுத் தொண்டு செய்தல் என எல்லா திட்டங்களிலும் இதுபோல கூட்டு முயற்சியும், சின்னச்சின்ன மாற்றங்களால் ஆன தொடர் முயற்சியும் வெற்றியை சாத்தியமாக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் நீங்களும் நாளைய தலைவர்களாகலாம், எதிலும் வெற்றியை குவிக்கலாம்! 
    உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
    உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். சில நேரங்கள் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் சிறுநீரகம் வரை கூட சென்றிருக்கலாம்.

    * சிறுநீர் செல்லும் பொழுது அதில் ரத்தம் கலந்தார் போல் இருந்தால் கிருமிகளோடு உடல் நடத்திய போராட்டத்தில் ரத்த சிவப்பு அணுக்கள் சிறுநீரில் கலந்திருக்கலாம். அப்படி இருந்தால் சிறுநீரக உறுப்புகளில் இருக்கும் கிருமிகளை சரி செய்ய உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

    * அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டும் போல் தோன்றுகின்றதா? சிறுநீரக பையில் கிருமிகள் தாக்குதல் இருந்தால் அந்த பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரக பை தன்னை சுருக்கிக் கொள்ளும். இதன் காரணமாகவே அடிக்கடி சிறுநீர் செல்லத் தோன்றும். பொதுவில் சிறுநீரக உறுப்பு கிருமி தாக்குதல் ஆண்களை விட பெண்களுக்கே சற்று அதிகமாக ஏற்படும். இது உடல் கூறு அமைப்பு காரணமாக ஏற்படுவது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் சிறுநீரக பை இறங்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படலாம்.

    * கீழ்முதுகு வலி:- கிருமியால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் வீங்கும். இதனால் கீழ் முதுகுவலி ஏற்படும்.

    * சிறுநீர் செல்லும் பொழுது தாங்க முடியாத வலி இருக்கும். ஏனெனில் கிருமிகளால் சிறுநீரக உறுப்புகள், பாதை உள்ளிட்டவை வீங்கி இருக்கும்.

    * சிறுநீர் ஒரு கலங்கிய திரவம் போல இருக்கலாம். உடல் வெள்ளை ரத்த அணுக்களை கிருமிகளோடு போராட அனுப்புவதால் அவை போராடி சிறுநீரில் கலப்பதால் கலங்கிய தோற்றம் இருக்கலாம்.

    * சிறுநீர் அதிக துர்நாற்றத்துடன் இருக்கலாம்.

    * சிறுநீரில் சீழ் இருக்கலாம்.

    * மயக்கம் இருக்கலாம். கிருமி பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படாத பொழுது கிருமிகள் ரத்த குழாய்களை பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படலாம்.

    * ஜுரம் இருக்கலாம்.

    மேலும் உங்கள் சிறுநீரகம் பாதித்து இருந்தால் அதன் அறிகுறிகளாக

    * திடீரென உடலில் மிக அதிக அரிப்பு, தடிப்பு ஏற்படலாம். நன்கு வேலை செய்யும் சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளை வெளியேற்றி விடும். சிறுநீரக பாதிப்பு நிகழும் பொழுது இக்கழிவுகள் ரத்தத்தில் கூடி பாதிப்பினை ஏற்படுத்தும். இதன் வெளிப்பாட்டில் ஒன்றாக சருமத்தில் அதிக அரிப்பு, தடிப்பு ஆகியவை ஏற்படும். அதிக உப்பு சாப்பிடும் பழக்கம் சிலரிடம் இருக்கும். அதிக தாகம், உப்பிச உணர்வு, வீக்கம், இவை இருந்தால் நீங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்கின்றீர்களா என்பதனை ‘செக்’ செய்யுங்கள்.

    * உட்கார, நிற்க முடியாத வயிற்றுவலி இருந்தால் சிறுநீரக கற்கள் பாதிப்பு இருக்கின்றதா என்பதனை மருத்துவரிடம் சென்று அறியுங்கள். கூடவே வாந்தி, அதிக வியர்வை வயிற்றுப்பிரட்டல் இவையும் இருக்கலாம். இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதனை அறிய வேண்டும்.

    * உயர் ரத்த அழுத்தம் உடலுக்கு மிக தீங்கு விளைவிக்கும். சிறுநீரகத்தின் ரத்த குழாய்கள் சிறுநீரை பிரித்து எடுக்கின்றன. உயர் ரத்த அழுத்தம் பெரிய குழாய்களில் இருந்தால் மிகச் சிறிய ரத்த குழாய்களிலும் இருக்கும். இதனால் சிறுநீரக மெல்லிய ரத்த குழாய்கள் பாதிப்படையும். எனவே உங்கள் ரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். 
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெத்திலி மீன் - 1/2 கிலோ,
    நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
    கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
    காய்ந்தமிளகாய் - 5,
    சாம்பார் வெங்காயம் - 6,
    பச்சைமிளகாய் - 2,
    இடிச்ச பூண்டு - 5 பல்,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    தனியாத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
    மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,
    உப்பு -  தேவைக்கு.



    செய்முறை :

    நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், ப.மிளகாய், இடிச்ச பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய்த்துருவல், நெத்திலி மீன், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான நெத்திலி மீன் பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது.
    உணவைப் பதப்படுத்துதல் நாகரிக வளர்ச்சி என்று நினைக்கலாம். ஆனால், போர்கள் நிறைந்த 18-ம் நூற்றாண்டில் பதப்படுத்தப்பட்ட உணவை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியதற்கு காரணம் இருக்கிறது. எதிரிகளைவிட, உணவே பல தோல்விகளை வரவழைத்திருக்கிறது. இன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது. மனித பேரழிவுகளின்போது மனிதர்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ பதப்படுத்துதல் உதவுகிறது.

    18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தகரக்குவளையில் உணவை அடைத்துப்பதப்படுத்தும் முறை கண்டறியப்பட்டது. மாவீரன் நெப்போலியனின் ராணுவத்தினர் போரில் சண்டையிட்டு இறந்ததைவிட, பசி, ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக அளவில் இறந்தனர். வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்கர்வி நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டனர். புண்கள் ஏற்படுதல், மஞ்சள்காமாலை, காய்ச்சல், நரம்புக் கோளாறு, இறப்பு போன்றவற்றை அது ஏற்படுத்தக்கூடும்.

    அப்போது பிரெஞ்சு அரசாங்கம், ராணுவ வீரர்களுக்காக உணவைப் பதப்படுத்தும் முறையை கண்டறிபவர்களுக்கு பெரும் பரிசு அளிப்பதாக அறிவித்தது. நிகோலஸ் அப்பெர்ட் என்பவர், பாதி சமைக்கப்பட்ட உணவை இதற்குத் தீர்வாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். மிட்டாய் செய்பவர், சமையல் கலை வல்லுனர், பீர் தயாரிப்பவர் என பல்வேறு அனுபவங்களை பெற்றிருந்தார்.

    உணவை பாட்டில்களில் சேமித்து, அவற்றின் உள்ளே உள்ள காற்றை வெளியேற்ற கொதிக்கும் தண்ணீரில் போட்டார். ஏனென்றால், காற்றுதான் உணவைக் கெட்டுப் போகச் செய்கிறது என்று அவர் நம்பினார். பிரெஞ்சு ராணுவ வீரர்கள் வெளிநாட்டுக்குப் போனபோது, அப்பெர்ட் பதப்படுத்திய கோழி, காய்கறி, குழம்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பிறகும் அவை சாப்பிடக்கூடியதாக இருந்தன என்று தெரிவித்தனர். இப்படியாக உணவைப் பதப்படுத்தும் செயல்பாடு, ராணுவ தேவைகளுக்காகவே முதலில் கண்டறியப்பட்டது.

    ஆனால், கொதிக்கும் தண்ணீரில் உள்ள வெப்பம் காற்றை நீக்குவதற்கு பதிலாக, நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது என்பதை அரை நூற்றாண்டுக்கு பிறகே லூயி பாஸ்சர் என்பவர் கண்டுபிடித்தார். நுண்ணுயிரிகளே உணவை கெட்டுப் போக வைத்தன, நோய்களை உருவாக்குகின்றன என்று அவர் கண்டுபிடித்தார். அது மட்டுமல்லாமல் நம் நாட்டு பதப்படுத்தும் முறையான வற்றல், ஊறுகாய் போன்றவை சுற்றுச்சூழலை சீர்கெடுக்காமல், சூரிய சக்தியின் மூலமே பொருட்கள் பதப்படுத்தப்பட்டன. இதுவும் ஒரு சிறந்த பதப்படுத்தும் முறை என்பதே உண்மை. 
    தற்போது உரையாடுவதற்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான் மனஅழுத்தம் ஏற்படுவதாகக் சுட்டிக்காட்டுகின்றனர்.
    `உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான் மனஅழுத்தம் ஏற்படுவதாகக் சுட்டிக்காட்டுகின்றனர்.

    கடிதம் மட்டுமே உரையாடுவதற்கான கருவியாக முன்னர் இருந்தது. அதன் பிறகு தொலைபேசியின் வருகை ப்ரியமானவர்களின் குரலை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கேட்டு ஆசுவாசம் கொள்ளச்செய்தது. ஆனால், தற்போது உரையாடுவதற்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இருந்தும் உறவுகளின் ஆயுள்காலம் குறுகியகால அளவிலேயே முடிவடைகிறது. முன்பைவிட ஆண்-பெண் நட்பு குறித்த புரிதல்கள் அதிகரித்திருந்தும் இந்தச் சிக்கல் உலவுகிறது.  

    வேலைபார்க்கும் இடங்களில், பேருந்துகளில், ரயில்களில் என எல்லா இடங்களிலும் இணையம் நம்முடனேயே பயணிக்கிறது. சக மனிதர்களுடன் பேசுவதைத் தவிர்த்து இணையத்திலேயே மூழ்கிக்கிடக்கிறோம் என்பதே இந்தத் தலைமுறை மீதான குற்றச்சாட்டு. உண்மையில் இணையமும் அலைபேசியும் மனிதர்களை இணைப்பதைத்தான் முழுநேரப் பணியாகச் செய்துகொண்டிருக்கின்றன. தினம் தினம் புதுப்புது அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்டு நமக்குத் தருவித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றில் பல ஆப்-கள் புதிய மனிதர்களைத் தேடிக் கண்டடைவதற்கும் உரையாடுவதற்கும் பயன்படுகின்றன. இருப்பினும் நம் உறவுநிலைகளில் விரிசல் ஏற்படுவதும், அதைச் சரிசெய்ய இயலாமல் தவிப்பதும் தொடர்கின்றன.

    பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் இந்த உறவுச்சிக்கல்களை இரண்டுவிதமாகக் கையாள்கிறார்கள்.



    1) முரண்பாடான கருத்துகள் ஏற்படும்போதும் சுமுகமாகப் பேசிப் பிரிவது.

    2) பேசினால் சச்சரவு அதிகமாகும் என எண்ணி, பேசாமலேயே கடந்து போதல்.

    முதல் பாயின்ட்டில் உரையாடல் ஏற்படுவதால், அதில் சிக்கல் தீர வாய்ப்புள்ளது. உதாரணமாக, சின்ன விஷயத்துக்காக ஏற்படும் சண்டை, உடனே பேசித் தீர்த்துக்கொள்ளப்படும். அந்த உரையாடல் உடனே நிகழ்வதன் மூலம் உறவின் ஆழம் இருதரப்பினருக்கும் உணர வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் இயல்பாகவே உறவுகளில் ஏற்படும் வெற்றிடத்தைத் தவிர்க்க இயலும். மேலும், ஒருவருக்கு மட்டும் அந்த உறவில் மனக்கசப்பும், மற்றவருக்கு உறவைத் தொடர வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்பட்சத்தில் சரியான புரிதலைக் கொடுக்கும்.

    இரண்டாவதாக, பேசாமலேயே கடந்து போவதில் ஏற்படும் சிக்கல் மோசமானது. `இனிமேல் பேசி என்ன இருக்கு!' என நினைத்துப் பேசாமலேயே உறவைத் துண்டித்தல். இது மனதில் நாம் அறியாமலேயே ஒருவித வெறுமையை மெள்ள ஏற்படுத்தும். அந்த வெறுமையைப் போக்குவதற்காகவே புதிய செயல்களில் ஈடுபடத் தொடங்குவோம்.

    புதிதாக வேறு ஏதாவது ஒரு நபருடன் பேசத் தொடங்குவோம். அதன் பிறகான எல்லா உறவுகளிலும் நாம் பேசாமல் போனவர்களின் சாயலை நாம் அறியாமலேயே தேட ஆரம்பிப்போம். தங்கள் நண்பர்களுடன் சண்டைபோட்டுவிட்டு `ஒரு வருஷமா பேசலை' எனச் சொல்லிக்கொள்ளும் நிறையபேரைச் சந்தித்திருப்போம். அவர்கள் உண்மையில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஒரு வருடமாகப் பேசாத அந்த உறவை நினைத்தபடியே இருப்பர்.

    எல்லா உறவுகளுக்கும் தினசரி உரையாடல் அவசியம். அன்றைய பொழுதின் அத்தனை சுக, துக்கங்களையும் பகிர்ந்துகொள்ள இந்த உரையாடல் இன்றியமையாத ஒன்று. மழைநாளின் தேநீரைப்போல பிடித்தமானவர்களின் உரையாடலும் ஏகாந்தமானது.

    கேரளாவில் மத்தி மீன் சமையல் மிகவும் பிரபலம். இன்று மத்தி மீனை வைத்து சூப்பரான மத்தி மீன் சாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 4,
    தக்காளி - 4,
    பச்சைமிளகாய் - 6,
    தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
    மத்தி மீன் - 1/2 கிலோ,
    தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
    உப்பு, மிளகுத்தூள், பெருங்காயம் - சிறிதளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிது.

    தாளிக்க...

    கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 50 மி.லி.



    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்கவிடவும்.  

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மத்தி மீன், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து மீன் குழம்பில் கொட்டி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கும் பொழுது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான கேரளா மத்தி மீன் சாறு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆரோக்கியமாக பராமரிக்கப்படும் முகம் அனைவரையும் கவரும். நமது அழகைப் பாதுகாப்பதில் உணவுப் பழக்கம், ஃலைப் ஸ்டைல் ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.
    அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர் கார்போஹைட்ரேட் உணவுகளையே முழுவதுமாக தவிர்த்து விடுகின்றனர். உணவை தவிர்க்கும்போதோ, இவ்வாறு உணவு முறையில் மாற்றம் கொள்ளும்போதோ வயதான தோற்றம் உண்டாகலாம்.

    இவர்கள் இந்த மாதிரியான உணவுப்பழக்கத்தை இரண்டு வருடங்கள் பின்பற்றினால் தலைமுடி கொட்டிப்போதல், கண்களில் குழி விழுதல், கண்களைச் சுற்றிக் கருவளையம், இளநரை போன்ற காரணங்களால் இருபது, இருபத்தி ஐந்து வயதிலேயே நாற்பது வயதைப் போல தோற்றம் அளிப்பார்கள். உடல் சுருக்கம் மற்றும் மார்பகம் தளர்ந்து போதல் போன்றவையும் ஏற்படலாம். அதனால் உணவைத் தவிர்ப்பதை விட்டு முறையான உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

    அழகை பராமரிப்பதில் உணவை அடுத்து சுத்தம் பெரும் பங்கு வகிக்கிறது. நம் உடம்பில் 4 வாரங்களுக்கு ஒரு முறை பழைய செல்கள் இறந்து புது செல்கள் உற்பத்தியாகும். தலையில் நாள்தோறும் புது செல்கள் உருவாகும். உதிர்ந்த செல்களை நீக்கினால்தான் புது செல்கள் நன்கு வளர்ச்சி அடையும். அதற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது அவசியம். மண்டையோடு சுத்தமாக இல்லாமல் போனால் தலையில் பொடுகு அதிகரிக்கும்.

    அதனால் முடி கொட்டும். பொடுகை சொறியும்போது முகத்தில் உதிர்ந்தால் சிலருக்கு முகத்தில் பொரி பொரியாக ஏற்படும். பொடுகினால் ஏற்படும் அந்த மாற்றம் முக அழகைக்கெடுக்கும். தலை சுத்தமாக இல்லாவிட்டால் முக அழகு பாதிக்கப்படும். தலைமுடி சுத்தத்தைப் பேணுவது போல் சருமத்தையும் பராமரிப்பதும் அவசியம். அதற்கு நம் சருமம் எப்படிப்பட்டது என்று நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

    அதாவது எண்ணெய்ப் பசை கொண்ட சருமமா? உலர்ந்த சருமமா அல்லது சென்ஸிடிவ்வான சருமமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரும் அழகு சாதனப்பொருட்களோ, நம் தோழிகள் பயன்படுத்தும் அழகுப்பொருட்களோ நமக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சருமம் மாறுபடும். நம் சருமத்துக்குத் தகுந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதனால் நமது குடும்ப மருத்துவரிடமோ, ப்யூட்டிஷியன்களிடமோ சென்று நம் சருமம் எப்படிப்பட்டது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    நம் சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். நமது தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பார்லருக்கும் செல்லலாம். ஆனால் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். அந்த விஷயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

    பணத்துக்காகப் பார்த்தால் நம் சருமத்தின் அழகு பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் வாங்கும் காஸ்மெட்டிக்ஸ் தரமானதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். வீட்டிலும் சருமப் பராமரிப்பு மேற்கொள்ளலாம்.
    மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு உடல் எடையில் திடீர் ஏற்றம் இருப்பது உண்மைதான். அதற்கான காரணங்கள், தீர்வுகளை அறிந்து கொள்ளலாம்.
    மெனோபாஸ் பருவத்தில் பெண்களின் உடலில் மிக முக்கியமான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு கிடுகிடுவெனக் குறையும். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்களைப் பல விதங்களிலும் பாதுகாக்கும் அரண். ஈஸ்ட்ரேஜென் குறைவதன் முதல் அறிகுறியாக அவர்களது உடலின் வளர்சிதை மாற்றம் மாறும். அதனால் உடல் எடையில் தாறுமாறான மாற்றங்கள் தெரியும்.

    வயதாவதன் காரணத்தால் தசைகளின் அடர்த்தி குறைந்து கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உடல் கலோரிகளை எரிக்கும் ஆற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். மெனோபாஸ் பருவத்தில் உள்ளவர்கள், வழக்கமான உணவுகளை உண்டுகொண்டு, உடற்பயிற்சிகளின் அளவை அதிகரிக்காமலிருந்தால் எடை அதிகரிப்பைத் தவிர்க்க முடியாது. வழக்கமாக உடற்பயிற்சிகள் செய்கிறவர்கள்கூட மெனோபாஸை நெருங்கும்போது அதை நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு.

    மெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு ஏன் கவனத்துக்குரியது?

    உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் அளவுக்கதிகமாக கூடும்போது அது எந்த வயதிலுமே ஆபத்தானதுதான். குறிப்பாக மெனோபாசுக்குப் பிறகு அப்படி எடை அதிகரிப்பதன் விளைவாக இதய நோய்கள், சர்க்கரை நோய், சுவாசப்பிரச்னைகள், புற்றுநோய் போன்றவற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
    தடுக்க என்ன செய்யலாம்?

    முடிந்த அளவுக்கு உடலுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வது மிகுந்த பலனளிக்கும். எடை தூக்கும் பயிற்சிகள் உடலை உறுதியாக்கி, கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். நடைப்பயிற்சி மிக நல்லது. வாரத்துக்கு 150 நிமிடங்கள் நடக்கலாம். 75 நிமிடங்கள் ஜாகிங் செய்யலாம்.

    30 வயதில் நீங்கள் சாப்பிட்ட மாதிரியே 50 வயதிலும் சாப்பிட்டு, எடை ஏறாமலிருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. மெனோபாஸை நெருங்கும்போது உணவுத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழுதானியங்களின் அளவைக்கூட்டி, கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்க வேண்டும்.



    காபி, டீ உட்பட எதிலும் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். மறைமுகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

    சிலருக்கு நள்ளிரவில் பசிக்கும். அந்த நேரத்தில் என்ன சாப்பிடுவது எனத் தெரியாமல் சிப்ஸ், பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் எனக் கண்டதையும் சாப்பிடுவார்கள். அது தவறு. இரவு உணவு முடித்து 2 மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் பால் மற்றும் ஏதேனும் பழம் சாப்பிடுவது சிறந்தது.

    மெனோபாசின் முக்கிய தொந்தரவுகளில் ஒன்று தூக்கமின்மை. தூக்கம் பாதிக்கப்படும்போது பலரும் எதையாவது கொறிக்கத் தொடங்குகிறார்கள் என்கிறது ஆய்வொன்று. பகல் தூக்கம் தவிர்ப்பதன் மூலம் இரவில் முழுமையான தூக்கம் பெறலாம். தூங்கும் அறையும் சூழலும் இதமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

    மன அமைதியும் உதவும் எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு எடை அதிகரிக்கும். மன அழுத்தத்தின்போது கார்டிசால் ஹார்மோன் அதிகரிக்கும். வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர அது காரணமாகிவிடும். லேசான மன அழுத்தம் எட்டிப் பார்க்கும்போதே புத்தகம் வாசிப்பது, தோட்ட வேலை, வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றில் கவனத்தைத் திருப்பினால் அது அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

    மெனோபாஸ் பாதிப்புகளுடன் எடை அதிகரிப்பும் கட்டுக்கடங்காமல் போவதாக நினைத்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். ஹெச்.ஆர்.டி எனப்படுகிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி தேவையா என்பதை மருத்துவர் முடிவு செய்து உங்களுக்குப் பரிந்துரைப்பார்.
    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, காய்கறிகள் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    தோசை மாவு - கால் கப்,
    உப்பு - தேவைக்கு,
    தயிர் - அரை கப்,
    துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் கலந்தது - 1 கப்,
    வெங்காயம் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 4,
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
    நெய் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கேழ்வரகு மாவை வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தோசை மாவு, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் கேரட் துருவல், பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கேழ்வரகு மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு வெஜிடபிள் இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முதியவர்களின் உடல் தள்ளாடுவதைக் குறைக்க Balance training programme என்ற முறையில் பயிற்சிகள் இருக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    முதியவர்களின் உடல் தள்ளாடுவதைக் குறைக்க Balance training programme என்ற முறையில் பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு வகை உண்டு. நின்றுகொண்டே செய்யும் பயிற்சிகள், நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள்.

    நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள். குதிகாலில் நிற்பது, முன்னங்கால் அல்லது விரல்களில் நிற்பது, முன்னங்காலை வைத்து அதன் பின்பகுதியைத் தொடுமாறு நேர்க்கோட்டில் மற்றொரு காலின் விரலை வைத்து நின்றுகொள்ளுதல், நின்ற இடத்திலேயே காலை மாற்றி மாற்றி தூக்குதல், நின்ற இடத்திலேயே தன்னைத்தானே சுற்றிக்கொள்வது போன்ற பயிற்சிகள் இவற்றில் அடங்கும்.

    நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள் நேராக நடப்பது, பக்கவாட்டில் நடப்பது, பின்புறமாக நடப்பது ஒரு கோடு கிழித்து அதன் மேல் நடப்பது, நடந்துகொண்டே கழுத்தை மேலேயும் கீழேயும் அசைத்தல், கைகளை ஆட்டிக்கொண்டே நடப்பது, முன்னங்காலில் நடப்பது, குதிகாலில் நடப்பது போன்ற பயிற்சிகள் இந்த வகையில் அடங்கும்.

    இந்த பயிற்சிகளை டிரெயினர் ஒருவரின் ஆலோசனையின்படி ஒருமுறை கற்றுக் கொண்டுவிட்டு, பிறகு வீட்டிலேயே தொடர்ந்து செய்யலாம். சிறப்புப் பயிற்சிகள் தேவைப்பட்டால் அதற்குரிய இயன்முறை மருத்துவ மையங்களில் சென்று சில சிறப்பு சாதனங்கள் / உபகரணங்களின் உதவியுடன் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம்.

    ×