என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளை கண்டிக்காமல், அவர்களின் போக்கில்விட்டு, மெதுவாக படிப்பின் பக்கமாக கவனத்தை திருப்ப வைப்பது அவர்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
    தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்காக வழிநடத்துவதில்தான் பெரும்பாலான பெற்றோர் கோட்டைவிட்டுவிடுகிறார்கள். ‘படி...படியென்று பாடாய் படுத்துவது’, ‘சின்னச்சின்ன தவறுகளை பெரிதுபடுத்துவது’, ‘குழந்தையின் செயல்களுக்கு தடைபோடுவது’ என பெற்றோர் செய்யும் தவறுகள் ஏராளம். குழந்தைகளை கண்டிக்காமல், அவர்களின் போக்கில்விட்டு, மெதுவாக படிப்பின் பக்கமாக கவனத்தை திருப்ப வைப்பது அவர்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அதற்கான சில வழிகள்...

    முன்மாதிரியாக இருங்கள் : குழந்தைகள் பெற்றோரிடம் இருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளை படிக்கச் சொல்லிவிட்டு பெற்றோர் டி.வி. பார்ப்பதும், தாங்கள் அதிகமாக செல்போனை பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளை போனை தொடக்கூடாது என்பதும் முரண்பட்ட முன்னுதாரணமாகும். குழந்தைகள் படிக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களுடன் படியுங்கள், குழந்தைகள் கண்டதையும் விளையாடக்கூடாது என்றால் நீங்கள் அவர்களுடன் விளையாடுங்கள். அவர்கள் தவறாகப் பேசக்கூடாது என்றால், நீங்கள் அவர்களுக்கு முன்பு அப்படி பேசாதீர்கள்.

    தடை செய்யாதீர்கள் : குழந்தைகளின் செயல்களை தடை செய்யாதீர்கள். டம்ளரை தரையில்தட்டி விளையாடுவதை, பொம்மைகளை பிரித்துப் பார்க்கும் குழந்தைகளை, கோபம் கொந்தளிக்க கண்டிக்கக் கூடாது. டம்ளரின் ஓசையை ரசிக்கும் குழந்தை இசைப்பிரியராகவும், இசை மேதையாகவும் வளரலாம். பொம்மைகளைப் பிய்த்துப் போடுவது அவர்களின் பொறியாளர் எண்ணத்தை காண்பிப்பதாக இருக்கலாம். குழந்தைகள் பிரித்து, உடைத்து, எறிந்து விளையாடுவார்கள் என்பதை அறிந்த நீங்கள், பிரித்துப் பொருத்தும் விளையாட்டுப் பொருட்களையோ, உடையாத தரமான விளையாட்டுப் பொருட்களையோ வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் தவறும், குறைந்து போகும், அறிவும் விருத்தியாகும்.



    பாராட்டுதான் விமர்சனம் :
    உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். ‘அவனைப்பாரு, அவளைப்பாரு எப்படி படிச்சிருக்காங்க, நீயும் இருக்கியே...’ என்பதுபோல பேச வேண்டாம். மற்றவர்கள் மட்டம் தட்டினாலும், பெற்றோர்தான் தங்கள் குழந்தைகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டும். பாடத்தில் ஏதாவது கோட்டைவிட்டால், ‘நீங்க சமர்த்து அடுத்த முறை நிறைய மார்க் வாங்க வேண்டும், உங்களால முடியுமில்ல’ என்று இதமாகச் சொல்லிவிட்டு வேறுவிஷயத்திற்கு சென்றுவிட வேண்டும். அதையே மீண்டும் மீண்டும் காயப்படுத்தும்விதமாக பலமுறை நினைவூட்டி பேசி குழந்தைகளை மட்டம் தட்டக் கூடாது.

    படிக்க வேண்டுமா? :
    குழந்தைகளுக்கு படிப்பின் மீது விருப்பம் வர வேண்டுமானால், அவர்களுக்கு புத்தகத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். புத்தகத்தை கிழிக்கிறாயா, இதை தொடக்கூடாது என்று பிடுங்கி வைக்க வேண்டாம். சிறுவயது முதலே, கிழித்தாலும் பரவாயில்லை என்று பழைய புத்தகங்களை கொடுத்துப் பழக்குங்கள், அவர்கள் புத்தகத்தை புரட்டட்டும், கிழிக்கட்டும். இப்போதெல்லாம் குழந்தை களால் கிழிக்க முடியாத புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது என்பது நல்லவிஷயம். சிறிதுகாலம் புத்தகத்துடன் அப்படி உறவு வளர்க்கும் குழந்தைகள் வளர வளர பெரிய புத்தக ரசிகனாகவும், புத்திசாலி குழந்தையாகவும் வளர்ந்துவிடும் கவலை வேண்டாம்.

    கதைகளால் வழிநடத்துங்கள் : குழந்தைகளின் தவறுகளை திருத்தவும், அவர்களை மேதைகளாக்கவும், கண்டிப்பதும், அடித்து உதைப்பதும் சிறந்த வழியல்ல. கதை சொல்வதுதான் அதற்கு சரியானது. “ஒரு ஊர்ல ஒரு கெட்ட பையன் இருந்தானாம். அவன் நிறைய சாக்லெட் சாப்பிட்டானாம், பல் எல்லாம் சொத்தையா போச்சாம்...” என்று சொல்லும் கதைகள், நீங்கள் அடித்து திருத்துவதைவிட ஆயிரம் மடங்கு குழந்தைகளின் மனதில் படிப்பினையை ஏற்படுத்தும். ஆனால் கதையை அவர்கள் தவறு செய்யும்போது கூறாமல், அவர்கள் விருப்பமாக உங்களுடன் பேசும்போது கூறுங்கள். இது உங்கள் உறவையும் வளர்க்கும், குழந்தையின் அறிவையும் பெருக்கும். 
    நம் நாட்டில் கிட்டத்தட்ட 12 சதவீதம் பேர் சிறுநீரக கல் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிறுநீரக கல் பாதிப்பை தடுக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.
    சிறுநீரக கற்கள் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 12 சதவீதம் பேர் சிறுநீரக கல் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.

    சிறுநீரகத்தில் கற்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெளியில் இருந்து வருவது. இது, உணவுப்பழக்கம், குடிதண்ணீர், வாழ்க்கை முறை போன்ற காரணிகளை உள்ளடக்கியது. இன்னொன்று உடம்புக்குள்ளேயே ஏற்படும் பாதிப்பு. இந்த முறையில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, பரம்பரை பரம்பரையாக சிறுநீரக கல் பாதிப்பு கடத்தப்படுவது ஆகும்.

    போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. குறிப்பாக கோடை காலங்களில் வெளியில் செல்லும்போதும், அதிகபடியான வியர்வை ஏற்படும். அந்த சமயத்தில் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது மிக முக்கியம்.

    வெயிலில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயிகள், ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், திறந்தவெளியில் நடந்து செல்பவர்கள், வெயில் காலங்களில் தாகம் தீரும் வரை தண்ணீர் அருந்துவதும் மிக மிக முக்கியம். இருதயம் பலவீனமானவர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது.

    ஏன் தண்ணீர் குடிப்பது முக்கியம் என்றால், சரியான அளவு குடிக்காவிட்டால் போதுமான சிறுநீர் வெளிவராது. அப்படியே வந்தாலும், சிறுநீர் மிகவும் இறுகிய திரவமாக வரும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    சிறுநீரில் அளவுக்கதிகமாக கால்சியம், யூரிக் அமிலம், ஆக்சலேட், பாஸ்பேட் சத்துகள் வெளியேறும். அவற்றை திரவ வடிவில் கரைத்து சிறுநீரில் வெளியேற்ற தேவையான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். இல்லையென்றால், சிறுநீரில் வெளியேறும் கால்சியம், யூரிக் அமிலம், ஆக்சலேட் உப்புக்கள் திரவ தண்ணீரில் முழுமையாக கரைய முடியாமல் சிறுநீர் பாதையில் தங்கி படிந்துவிடும். பிறகு சிறுநீரக கல்லாக வளரும்.

    பொதுவாக, சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தினுள், சிறுநீர் சேகரமாகும் பையில், சிறுநீர் வரும் பாதையில் என 3 இடங்களில் வரலாம். ஒரு சிறுநீரகத்திலும் இந்த பாதிப்பு வரலாம் அல்லது ஒரே நேரத்தில் இரண்டு சிறுநீரகத்திலும் வரலாம். இவை பல்வேறு அளவுகளில், பல்வேறு வடிவங்களில் வரலாம்.



    சிறுநீரக கற்கள் மொத்தம் 5 வகைபடும். முதல் வகை கால்சியம் பாஸ்பேட் ஆக்சலேட் வகை கற்கள்.

    இந்த வகை கற்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவர்களுக்கு அதிகமாக உருவாகிறது. சிறுநீரக கல் நோயாளிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்த வகை கற்களால் தான் பாதிக்கப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமான கால்சியம் சத்துகள் சிறுநீரில் வெளியாவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

    அதாவது, அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து மாத்திரைகள், அதிகமான வைட்டமின் டி மாத்திரைகள், ஸ்டாய்டு மருந்துகள் உண்பவர்கள், அதிகமாக அசைவ உணவு சாப்பிடுவோர், லிட்டர் கணக்கில் பால் அருந்துபவர்கள், கால்சியம் சத்து நிறைந்த தண்ணீரை கொதிக்க வைக்காமல் குடிப்பவர்கள் இந்த வகை கற்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த கற்கள் ஒருமுறை வந்தால் மீண்டும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மறுபடியும், மறுபடியும் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சுமார் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பேருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கிறது. நாளடைவில் அவர்களுக்கு சிறுநீரக பாதையில் கற்களால் அடைப்பும், கிருமித் தொற்றும் ஏற்பட்டு நிரந்தர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது.

    இத்தகைய கற்கள் உண்டாவதை தடுக்கும் சக்தி சிட்ரிக் அமிலத்துக்கு உண்டு. எலுமிச்சை, ஆரஞ்சு சாறு சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும்.

    இதற்கு அடுத்தபடியாக பாதிப்பை தரும் வரிசையில் யூரிக் ஆசிட் கற்களை சொல்லலாம். இந்த பாதிப்பை எக்சரே படம் மூலம் கண்டுபிடிக்க முடியாது. அல்ட்ரா ஸ்கேன் அல்லது சி.டி. ஸ்கேன் மூலம் தான் கண்டுபிடிக்க முடியும்.

    அசைவ பிரியர்களுக்கு இந்த பாதிப்பு எளிதில் வரும். குறிப்பாக கல்லீரல், மூளைக்கறி எனக் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவோருக்கு யூரிக் ஆசிட் கற்கள் பாதிப்பு அபாயம் எந்த நேரமும் உண்டு. சில மருந்து, மாத்திரைகளாலும் யூரிக் ஆசிட் கற்கள் வரும். பரம்பரை நோயாக கூட சிலருக்கு இந்த பாதிப்பு வருகிறது.

    3-வது வகை ஆக்சலேட் கற்கள். உணவில் அதிகமாக தக்காளி, பசலைக் கீரை போன்ற சில வகை கீரைகளை அதிகம் சேர்ப்பது, சாக்லெட் சாப்பிடுவது, தேநீர் பருகுவது, முந்திரி, பாதாம், பிஸ்தா சாப்பிடுவது இந்த பாதிப்புக்கு வித்திடும்.



    4-வது வகை சிஸ்டீன் கற்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்பு இது. அல்லது பரம்பரையாகவும் வரலாம். பெரியவர்களுக்கு அரிதாக ஏற்படும்.

    5-வது வகை கற்கள் சிறுநீர் நோய் கிருமித் தாக்குதலால் வரும் இன்பெக்‌ஷன் ஸ்டோன். இது மிகவும் அபாயகரமான பாதிப்பு. ஏனெனில் இந்த பாதிப்பால் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. திரும்ப திரும்ப சிறுநீர் தொற்று வருபவர்களுக்கும் இந்த கற்கள் வரலாம். எனவே, சிறுநீர் தொற்று தானே என அலட்சியப்படுத்தக் கூடாது.

    சிறுநீரக கல் பாதிப்பு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். கடுமையான வயிற்று வலி, இடுப்பு வலி, முதுகுத்தண்டின் இரண்டு புறமும் வலி அல்லது ஒருபுறம் வலி, அடி வயிறு வலி, குறிப்பாக சிறுநீர் கழிக்க செல்லும்போது வலி ஏற்படுதல் போன்றவற்றை சொல்லலாம். சில நேரங்களில் சிறுநீர் ரத்தமாகவும் போகலாம்.

    சிறிய அளவிலான கற்கள் தானாகவே வெளியேறிவிடும். ஆனால், 8 மி.மீ. அளவுக்கு அதிகமான கற்கள் இருந்தால், தானாக வெளிவரும் வாய்ப்பு குறைவு. இதற்கு நிச்சயம் மருத்துவ சிகிச்சை தேவை.

    மேலும், ஒரு முறை சிறுநீரக கல் ஏற்பட்டு வெளியேற்றப்பட்டாலும், அவர்களுக்கு மீண்டும் கல் வராமல் பார்த்துக்கொள்ள முறையான கண்காணிப்பு சிகிச்சை, தொடர்ந்து சில மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி வரும்.

    கல் வராமல் இருக்க அல்லது கல் வந்த பிறகும் மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம். அசைவ உணவுப் பிரியர்கள் அளவோடு இறைச்சிகளை உண்ண வேண்டும். மீன், முட்டை சாப்பிடலாம். லிட்டர் கணக்கில் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக உப்பு சேர்க்கக்கூடாது.

    சிறுநீர் கல் வராமல் இருக்க காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது, வெறும் தண்ணீராக மட்டுமின்றி, இளநீர், எலுமிச்சை சாறு, பழ ரசங்களாகவும் இருக்கலாம்.

    டாக்டர் சவுந்தரராஜன்,

    சிறுநீரக நிபுணர்
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. அதுவே காயத்தின் வீரியத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் முதல்கட்ட சிகிச்சையாகும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

    * விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.

    * தீப்புண்ணில் கிருமிகள் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். எனவே பிறர் கைகளில் உள்ள அசுத்தம் மற்றும் கிருமிகள் தாக்குதல் புண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூடி பாதுகாக்க வேண்டும். இது வலியை குறைக்கும்.

    * தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக்கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக்கூடாது.

    * தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    * மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக்கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெய்யை மேலும் பரவச் செய்து விடும்.


    * ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனானத் துணியைக்கொண்டு பாதிக்கப்பட்டவர் மீது போர்தி தரையில் உருளச்செய்தாலும் தீ அணைந்துவிடும்.

    * வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைத்தவறி உடம்பில் பட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் பாகம் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில், பாதிக்கப்பட்ட இடத்தில் ரசாயனக் கலவையான பேனா மை, காபி பொடி போன்றவைகளை பூசக்கூடாது. இது மேலும் புண்களில் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

    * தீக்காயத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல் தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல்நிலைப் பாதிப்பு, தோலின் மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை, மேல் தோல், கீழ் தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீயால் கருகிவிடுவதை மூன்றாம்நிலை என்கிறார்கள்.

    * தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால் தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே, பதற்றப்படாமல் கவனமாக அவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

    * பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்றுபடுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. ஒருபோதும் தீக்காயத்தின் மீது சோப் உபயோகித்து கழுவது கூடாது.

    * அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீ விபத்துகளை நீருற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள். 
    நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வீட்டில் கிருஷ்ணருக்கு படைக்க 7 வகையான நிவேதனங்கள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    1. அவல் பாயசம்

    தேவையான பொருட்கள் :

    அவல் - ஒரு கப்,
    காய்ச்சிய பால் - ஒரு கப்,
    வெல்லத்தூள் - தேவையான அளவு,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    முந்திரி, திராட்சை - தலா 10.

    செய்முறை:

    பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் அவலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு விட்டு கொதிக்க விடவும். இதனுடன் அவலை சேர்த்து வேக விடவும்.

    பிறகு பால் ,ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

    2. இனிப்பு அவல் பிசறல்



    தேவையான பொருட்கள் :


    கெட்டி அவல் - 100 கிராம்,
    ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்,
    சர்க்கரை - கால் கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்.

    செய்முறை:


    அவலுடன் தண்ணீர் விட்டு அலசி 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும்.

    பாத்திரத்தில் ஊற வைத்த அவலுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.

    3. வெல்ல சீடை:



    தேவையான பொருட்கள் :


    பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
    வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
    வெல்லத்தூள் - அரை கப்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.

    வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

    அதனுடன் ஏலக்காய்த்தூள், எள், அரிசி மாவு, உளுத்த மாவு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

    ஆறிய பின் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

    வாணலியில் எண்ணெய் காய வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    4. உப்பு சீடை:



    தேவையான பொருட்கள் :

    பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
    வெண்ணெய், வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - 2 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
    பெருங்காயத்தூள் - சிட்டிகை.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.

    அரிசி மாவுடன் உளுத்த மாவு, உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து பிசறவும்.

    இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும்.

    பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு உருட்டிய சீடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    5. கோகனட் ரவா லட்டு



    தேவையான பொருட்கள் :

    ரவை, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப்,
    சர்க்கரை - ஒன்றரை கப்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    நெய் - அரை கப்,
    உடைத்த முந்திரி, திராட்சை - தலா 10.

    செய்முறை:


    அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் ரவை, தேங்காய்த் துருவலை தனித்தனியாக சேர்த்து வறுத்தெடுக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் ரவையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.

    பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    அகலமான பாத்திரத்தில் அரைத்த பொருட்களுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கவும்.

     வாணலியில் நெய் விட்டு சூடாக்கி சிறிது சிறிதாக அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாக்கவும்.  

    6. தட்டை



    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்,
    உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
    ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:


    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்த மாவு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், வெண்ணெய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

    பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டவும்.

    வாணலியில் எண்ணெய் காய வைத்து தட்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  

    7. வெல்ல திரட்டுப்பால்



    தேவையான பொருட்கள் :

    காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்,
    வெல்லத்தூள் - கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    பிறகு சிறு தீயில் வைத்து கை விடாமல் கிளறி நன்கு சுண்டக் காய்ச்சவும். (ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து கிளறி காய்ச்சவும்).

    அதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
    உப்பு - 1/2 டீஸ்பூன்
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 150 கிராம்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

    இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

    காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு :

    உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

    மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விவாகரத்து செய்ய விரும்புகிறவர்களும், விவாகரத்து செய்து கொண்டவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
    விவாகரத்து செய்யவிரும்புகிறவர்களும், விவாகரத்து செய்து கொண்டவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

    * விவாகரத்து செய்துதான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தாலும், சக மனிதர்களிடம் நடப்பதுபோல் உங்கள் துணை யிடமும் மதிப்பாக நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். கோபம், குரோதத்தால் கண்டபடி பேசிவிட வேண்டாம். அவதூறுகளையும் பரப்பவேண்டாம். உங்கள் கண்முன்னே துணை அழிந்துபோய்விட வேண்டும் என்று கருதாமல், பெருந்தன்மையையுடன் நடந்து கொள்வதற்கு முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்.

    * துணையை பிடிக்காவிட்டால், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இகழ்ந்து பேசாதீர்கள். உங்களுக்கு பிடிக்காத இணையாக இருந்தாலும் அவரது குடும்பத்தோடு இருக்கும் தொடர்புகளை எல்லாம் அறுத்தெறிந்துவிட வேண்டாம்.

    * விவாகரத்து செய்வதற்கு முன்பு கோப தாபங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒருசில முறை தனியாக அமர்ந்து இருவரும் மனம்விட்டு பேச முயற்சி செய்யுங்கள். அப்படி பேசினாலும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்று கருதினாலும், மென்மையாக உங்கள் தரப்பு கருத்துகளை அழுத்தம் திருத்தமாக எடுத்துவைக்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது நிச்சயம் என்றாவது ஒருநாள் பலன் தரும்.

    * சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்ன தவறு நடந்திருந்தாலும் ‘நடத்தை கெட்டவள்’ என்று பெண்ணையோ, ‘நம்பிக்கைத் துரோகி’ என்று ஆணையோ பேசவேண்டாம். திட்டமிட்டு கேவலமான தகவலை பரப்பிக்கொண்டிருக்கவும் வேண்டாம்.



    * மூன்றாம் நபர்களிடம் பேசும்போது, ‘ஏதோ எங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் பிரிந்து வாழலாம் என்று நினைக்கிறோம்’ என்று மட்டும் சொல்லுங்கள். துணையை பற்றி குறை சொல்லி உங்களை நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள்.

    * விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும், உடனே அதை நிறைவேற்றாமல் 6 மாதங்கள் தனித்தனியாக பிரிந்து வாழுங்கள். ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் தனியாக வாழ்ந்து பாருங்கள். அந்த தனிமை வாழ்க்கை கூட உங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுத் தரலாம். மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.

    * விவாகரத்து செய்த தம்பதிகள் ‘காலம் முழுக்க இனி நீதான் எனக்கு முதல் எதிரி’, என்பதுபோல் கங்கணம்கட்டிக்கொண்டு, விரோதத்தையும், வன்மத்தையும் வளர்க்காதீர்கள். ‘பிரிந்துவிட்டோம். அதோடு நமக்குள் இருந்த பிரச்சினை முடிந்துவிட்டது’ என்று அமைதி காத்திடுங்கள். அவரவர் வேலையில் கவனத்தை செலுத்துங்கள்.

    * குழந்தைகள் இருந்தால், தந்தையை பற்றி தாயோ- தாயை பற்றி தந்தையோ குந்தைகளிடம் தரக்குறைவாக பேசவேண்டாம். நல்ல விஷயங்கள் இருந்தால் மட்டும் பேசுங்கள் அல்லது அமைதி காத்திடுங்கள். மன அமைதிக்கு தியானம், மியூசிக் தெரபி போன்றவைகளில் ஈடுபடுங்கள்.

    * மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படலாம். மீண்டும் கணவன்-மனைவி என்ற உறவை புதுப்பிக்கும் கட்டாயத்தை காலம் உருவாக்கும் என்பதை உணர்ந்து, மிக மோசமான தருணங்களில்கூட நிதானமாக நடந்துகொள்ளுங்கள். அவரவர் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    - விஜயலட்சுமி பந்தையன் 
    கிருமிகள் நிறைந்திருக்கும் கம்ப்யூட்டர் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுவலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
    நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, குப்பைகளை சுத்தம் செய்த பிறகு என தேர்ந்தெடுத்த சில வேலைகளை செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம். அதே நேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட 6 மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரி பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

    அழுக்குப்படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில்தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாக கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

    லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.



    அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவறையிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுவலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக்கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

    தனி நபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தை பொறுத்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப்பும் அமைகிறது. பலர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சரியாக சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவதும் சகஜம். இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரப்பை குடல் அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் மிக எளிதாக தொற்றிவிடும் என்கின்றன ஆய்வுகள். 
    கீரையில் செய்த பல்வேறு உணவுகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கீரையை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    அரைக்கீரை  - ஒரு கைப்பிடி அளவு,
    பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    இட்லி அரிசி - 250 கிராம்,
    உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
    வெங்காயம் - ஒரு கப்,
    இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று
    எண்ணெய் - 100 மில்லி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கீரைகளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கிய பின்னர் முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பங்களாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த கீரை ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மூக்கின் மேல் கருப்பு, வெள்ளை நிறங்களில் முள்ளு முள்ளாக இருக்கும் கரும்புள்ளிகளை போக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
    முகத்தின் அழகை குறைத்துக்காட்டுவதில் கரும்புள்ளிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த கரும்புள்ளிகள் முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு வரும். இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் முள்ளு முள்ளாக இருக்கும். இதனை போக்க சில வீட்டு வைத்தியங்களை இந்த பகுதியில் காணலாம்.

    * கரும்புள்ளிகளை போக்குவதில் பட்டை மற்றும் தேன் மிகச்சிறந்த தீர்வாகும். 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.

    * ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    * கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

    * 1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    * முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.
    இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும்.
    பெயர் விளக்கம்: உஷ்டிர என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் ஒட்டகம் போன்ற வடிவில் இருப்பதால் உஷ்டிராசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: வஜ்ராசனத்தில் உட்காரவும், பிருஷ்டத்தை தூக்கி முழங்கால்களில் நிற்கவும். கால்கள் இரண்டையும் சிறிதளவு அகற்றி வைக்கவும், முழங்காலிலிருந்து கால்களின் விரல்கள் வரைக்கும் உள்ள உடல் பகுதி தரைவிரிப்பில் நன்றாக படிந்திருக்கட்டும். முழங்காலுக்கு மேலிருந்து தலைவரைக்கும் உள்ள உடல் பகுதி நேராக இருக்கட்டும். இந்த நிலையில் மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.

    மூச்சை வெளியேவிட்டு உடலை பின்னோக்கி வளைத்து வலது உள்ளங்கையை வலது கால் பாதத்தின் மீதும், இடது உள்ளங்கையை இடது கால் பாதத்தின் மீதும் ஊன்றி வைத்து தலையையும் கழுத்தையும் முடிந்த அளவு பின்புறமாக வளைக்கவும். இடுப்பை முன்னோக்கி சிறிது தள்ளவும். தொடைகள் இரண்டும் நேராக இருக்கட்டும். இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 1 முதல் 2 நிமிடம் நிலைத்திருக்கவும்.

    பிறகு மூச்சை வெளியே விட்டு கைகளை ஒவ்வொன்றாக உள்ளங்காலில் இருந்து எடுத்து அதிலிருந்து வஜ்ராசனத்திற்கு வரவும். கடைசியில் கால்கள் இரண்டையும் நீட்டி வைத்து ஓய்வு பெறவும். இந்த ஆசனத்தை 23 முறை மேற்கண்ட முறைப்படி பயிற்சி செய்யலாம்.



    கவனம் செலுத்த வேண்டிய இடம்: வயிறு, தொண்டை, கழுத்து, முதுகு அல்லது மூச்சின் மீதும் சுவாதிஷ்டானம் அல்லது விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு: இந்த ஆசனப் பயிற்சியில் உள்ளங்கைகளை, உள்ளங்கால்களின் மேல் வைக்க முடியவில்லை என்றால் கைவிரல்களினால் கணுக்கால் பகுதியை பிடித்துக் கொண்டு செய்யலாம். சிலருக்கு இந்த ஆசனத்தை செய்யும்போது முழங்கால் முட்டியில் வலி ஏற்படுவதுண்டு. அத்தகையவர்கள் முழங்காலின் கீழ் ஒரு துண்டை நன்றாக மடித்து வைத்துக் கொண்டு செய்யலாம்.

    தடைக்குறிப்பு: தைராய்டு, வீக்கம், இடுப்பு வலி, அதிக முதுகு வலி உள்ளவர்கள் யோக நிபுணரின் அறிவுரைப்படி இந்த ஆசனத்தை செய்வது நல்லது.

    பயன்கள்: கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இளமை மேலிடும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இடுப்பு வலி, கழுத்து வலி, மலச்சிக்கல் நீங்கும், முக அழகு அதிகரிக்கும், கழுத்து, இடுப்பு, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும். தைராய்டு மற்றும் தைமல் சுரப்பிகள் நன்கு செயல்படும். தொண்டை சதை வளர்ச்சிக்கும், நுரையீரல் கோளாறுகளுக்கும் பயனுள்ளதாகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    நிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.
    பி.பி.எப். எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி குறித்த விவரங்களை பலர் அறிந்திருப்பதில்லை. எல்லோருக்கும் ஏற்ற திட்டம் இந்த பி.பி.எப். பணத்தைச் சேமிக்க விரும்பும் நடுத்தர மக்களுக்கு ஏற்றது இது.

    நிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.

    இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளை இங்கே காணலாம்...

    * பொது வருங்கால வைப்புநிதிக் கணக்குகளைக் கூட்டாக இருவர் பெயரில் துவங்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் பெற்றோர் தங்களின் மைனர் குழந்தையின் பெயரில் கணக்கு துவங்க முடியும். பெற்றோர் இருவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது செயல்படமுடியாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், மைனர் குழந்தையின் சார்பாகக் கணக்கு துவங்க முடியும். ஆனால் மைனர் குழந்தையின் சார்பாகப் பெற்றோர் பி.பி.எப். கணக்கு துவங்கும்போது, ஒரே குழந்தைக்குப் பெற்றோர் இருவரும் தனித்தனி கணக்குத் துவக்க இயலாது. மைனர் குழந்தை மேஜராகும்போது, அவரே பி.பி.எப். கணக்குதாரராகக் கருதப்படுவார். சட்டப்பூர்வ பாதுகாவலர் பி.பி.எப். கணக்கை கையாள முடியாது.

    * நம்முடைய பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள பணம் நம்முடையது. நம்மைத் தவிர்த்து வேறு யாரும் அதை எடுக்க முடியாது. கடன் அல்லது ஏதேனும் சொத்துக்குப் பணம் செலுத்தும்போது வேறு தனிநபர் அல்லது நிறுவனத்தால் பி.பி.எப். கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது. இது உங்கள் சேமிப்புக்கு வழங்கப்படும் தரமான பாதுகாப்பு. வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தால், தவணைத் தொகையைச் செலுத்தவில்லை எனில் வீடு ஜப்தி செய்யப்படும் அபாயம் உள்ளது. அதுவே பி.பி.எப். பணம் என்றால், பி.பி.எப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கடனை அடைக்கும்படி சட்டப்படி உத்தரவிட முடியாது. இது ஒரு முக்கியமான பாதுகாப்பு. அதேநேரம், வருமானவரி பாக்கியை பி.பி.எப். கணக்கிலிருந்து எடுக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    * உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமிக்க பி.பி.எப். கணக்கில் அனுமதிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமித்தால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீத பங்கு என பி.பி.எப். கணக்குதாரர் குறிப்பிடவேண்டும். ஆனால் மைனர்களின் சார்பாகத் திறக்கப்படும் கணக்குகளுக்கு வாரிசு தாரர் நியமிக்கமுடியாது. பி.பி.எப். கணக்கு காலத்தில் உங்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாரிசுதாரரை மாற்ற முடியும். ஆனால் ஓர் அறக்கட் டளையை வாரிசுதாரராக நியமிக்க முடியாது. வாரிசுதாரர்களால் பி.பி.எப். கணக்கை தொடர்ந்து பராமரிக்க முடியாது. பி.பி.எப். கணக்குதாரரின் இறப்பின்போது கணக்கில் உள்ள பணத்தைப் பெற அனைத்து உரிமையும் பெற வாரிசுதாரர் தகுதியுடையவர் ஆவார். அப்பணத்தை அறங்காவலராக இருந்து சட்டத்துக்கு உட்பட்டுப் பெறமுடியும்.

    * பி.பி.எப். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் பண முடக்கக் காலம் என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள். பி.பி.எப். விதிகளின் படி, வைப்புநிதி செய்யப்பட்ட நிதியாண்டின் கடைசி நாளிலிருந்து முதிர்ச்சியடையும் தேதி கணக்கிடப்படும். எனவே எந்த மாதம், எந்தத் தேதி கணக்குத் துவங்கப்பட்டது என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் பி.பி.எப். கணக்குக்கு முதல் முறை ஜூன் 1, 2018 அன்று பணம் செலுத்தினால், 15 ஆண்டுப் பணமுடக்கக் காலம் மார்ச் 31, 2019-ல் இருந்து கணக்கிடப்படும், முதிர்ச்சியடையும் தேதி ஏப்ரல் 1, 2034 ஆக இருக்கும். பணி ஓய்வு, வீடு வாங்குதல் அல்லது முக்கியக் கடனை திரும்பச் செலுத்துதல் போன்ற பொருளாதாரத் திட்டங்களை வகுக்கும் போது, பி.பி.எப். கணக்கின் முதிர்ச்சி காலத்தைக் கணக்கிடுகையில் இந்த வழிமுறையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    * சில முதலீட்டாளர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை மறந்துவிடுவார்கள். குறைந்தபட்ச வைப்புநிதி இல்லையென்றால், பி.பி.எப். கணக்கு கைவிடப்படும் நிலை ஏற்படும். பி.பி.எப். கணக்கு கைவிடப்பட்டால், அதிலுள்ள பணத்துக்கான வட்டி, முதிர்ச்சியின்போது மட்டுமே கிடைக்கும். இதுபோன்ற கைவிடப்பட்ட கணக்குகளில், முதிர்ச்சி அடையும் வரை ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் இருக்கும் பணத்துக்கு வட்டி கணக்கிடப்படும். பணம் எடுத்தல் மற்றும் கடன் பெறும் வசதியும் கைவிடப்பட்ட கணக்குகளுக்குக் கிடையாது. இந்த இரு வசதியும் பெற வேண்டும் என்றால், கைவிடப்பட்ட காலத்துக்கு உண்டான குறைந்தபட்ச சந்தாவையும், குறிப்பிட்ட அளவு அபராதத்தையும் கட்ட வேண்டும். நாம் எப்போதும், எந்நிலை யிலும் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை கைவிடக்கூடாது என்பதை இந்த விதிகள் உணர்த்துகின்றன. எனவே, பி.பி.எப். கணக்கின் மீது உரிய கவனம் செலுத்தி, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்ச பணத்தையாவது முதலீடு செய்துவரவேண்டும். 
    பெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நமது உடலில் 100 மி.லி. லிட்டர் ரத்தத்தில் 10 மைக்ரோகிராம் அளவு ஈயம் இருந்தாலே நம் உடல் ஆபத்துக்கு ஆட்பட்டுவிட்டது என்று அர்த்தம். இன்று உலகில் 12 கோடி மக்கள் இந்த ஆபத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.

    பெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். பெரியவர்களின் உடலில் சேரும் ஈயத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை ஜீரண மண்டலம் மூலம் உடலில் சேர்கின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் சேரும் ஈயத்தில் 50 சதவீதத்தை, அவர்கள் உடல் அப்படியே ஈர்த்துக்கொள்கிறது. குழந்தைகளுக்குள் வேதி மாசுகள் அதிகமாக சேரும் வாய்ப்பு உள்ளன. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய நுண்ணறிவுத் திறன், பேச்சுத் திறன், கல்வித் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது.

    பொதுவாக நமது உடலில் வெளியில் இருந்து அந்நிய நச்சுப் பொருட்கள் நுழையும்போது, ரத்தத்தில் கலந்து எல்லாப் பாகங்களுக்கும் பரவும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் போகும் ரத்தம் நச்சுப் பொருட்களைக்கொண்டு செல்லாமல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதனை மூளை ரத்த நஞ்சுத்தடை (பிளட் பிரைன் பேரியர்) என்பர். ஆனால், குழந்தைகளிடம் இந்தப் பிளட் பிரைன் பேரியர் அமைப்பு வளர்ச்சியடைந்திருக்காது. எனவே, அவர்கள் உடலைச் சென்றடையும் ஈயம் போன்ற வேதி நஞ்சுகள் மூளைக்கு எளிதில் பரவி நரம்புமண்டலத்தில் கடும் பாதிப்புகளை உருவாக்குகின்றன.



    தாயின் ரத்தம் ஈயத்தால் மாசடைந்து இருந்தால், தொப்புள் கொடி வழியாக அது கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடைகிறது. இதனால் குறைப்பிரசவம், எடை குறைவாகப் பிறப்பது, திறன் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    இந்திய அளவில் ஈயப் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய ஆதாரமாக, ஈயம் கலந்த பெயிண்ட்கள் உள்ளன. வாழிடங்களிலும், பணியிடங்களிலும் சுவர்கள், பர்னிச்சர் பொருட்களில் பூசப்பட்ட பெயிண்ட்களில் இருந்து பெரியவர்களையும், குழந்தைகளையும் ஈயம் வந்தடைகிறது.

    சுவர்களில் உரிந்த பெயிண்ட்களை வாயில் போட்டு மெல்லும் பழக்கம் குழந்தைகளுக்கும் இருக்கும். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், பெண்கள் நெற்றியிலும் தலை வகிட்டிலும் இட்டுக்கொள்ளும் குங்குமத்தில் நிறமியாக ஈயம் சேர்க்கப்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் ஈய முலாம் பூசி, சமையலுக்குப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் பரவலாக உள்ளது. இது போன்ற காரணங்களாலும் உடலுக்கு ஈயத்தால் பாதிப்பு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 
    ×