என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ஒருவரை சந்திக்கும்போது நமது தோற்றம் மட்டுமல்ல, நாம் நடந்துகொள்ளும் விதமும்தான் நம்மைப்பற்றிய ‘இமேஜை’ அவரிடம் உருவாக்கும்.
    நாகரிகமாக உடை உடுத்துவதையும், அலங்காரம் செய்து கொள்வதையும் வைத்து மட்டுமே ஒருவருடைய ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை. செயல்பாடு, நடத்தை, குணாதிசயங்களையும் வைத்துதான் அவரது ஆளுமை மதிப்பீடு செய்யப்படுகிறது. மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றுகிறவர்கள், அலுவலக பணிகளில் இருப்பவர்கள், புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்கள் அனைவருமே தங்கள் ஆளுமைத்திறனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது.

    ஆளுமைத் திறன் கொண்டவர்களால்தான் மற்றவர்களை எளிதாக கவரமுடியும். ஈடுபட்ட துறையில் சாதிக்கவும் முடியும். இப்படி ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்காக, ‘இமேஜ் கன்சல்டென்ட்’ என்ற துறை வழிகாட்டுகிறது.

    நடை, உடை, பாவனைகளில் எத்தகைய மாற்றங்களை செய்யவேண்டும்- மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவைகளை பற்றி எல்லாம் அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    ஒருவரை சந்திக்கும்போது நமது தோற்றம் மட்டுமல்ல, நாம் நடந்துகொள்ளும் விதமும்தான் நம்மைப்பற்றிய ‘இமேஜை’ அவரிடம் உருவாக்கும். நல்ல படிப்பும், அனுபவமும் மட்டுமே எல்லா நேரங்களிலும் நன்மதிப்பை பெற்றுத்தந்துவிடுவதில்லை. அதற்கு மேலும் காலத்துக்கு தக்கபடி புதிய விஷயங்கள் தேவைப்படுகிறது. அவைகளை ‘இமேஜ் கன்சல்டென்ட்’ துறை வழங்குகிறது.

    ஒருவரை சந்திக்கும்போது கை குலுக்கி அறிமுகப்படுத்திக்கொள்ளும் முறை, வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கும் விதம், பேசும் விதம், தொலைபேசியில் உரையாடும் விதம், தகவல் பரிமாறும் முறை, நடை பாவனை, உடை அலங்காரம் என கவனிக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் ‘இமேஜ் கன்சல்டென்ட்’ துறை கற்றுத்தருகிறது. இந்த துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஓரளவாவது அவரது குணாதிசயங்களை கண்டறிந்து விடுவார்கள்.

    பொது மக்களோடு நெருங்கிப்பழகும் துறைகளில் இருப்பவர்களுக்கு ‘இமேஜ் கன்சல்டென்ட்’ வழிகாட்டும். அதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் அவர்கள் தங்களுடைய இமேஜை உயர்த்திக்கொள்ளலாம். மேலை நாடுகளில் பரவலாக நடைமுறையில் இருக்கும் இந்த துறை பற்றிய விழிப்புணர்வு இப்பொழுது இந்தியாவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    தாம்பத்தியத்தில் தடுமாற்றம், உடல் நலக் குறைவு, உள்ளத்தில் மகிழ்ச்சியின்மை, மழுங்கிய உணர்வுகள் போன்றவை தென்பட்டால் உடனடியாக உணவு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    தாம்பத்தியத்தில் தடுமாற்றம், உடல் நலக் குறைவு, உள்ளத்தில் மகிழ்ச்சியின்மை, மழுங்கிய உணர்வுகள் போன்றவை தென்பட்டால் உடனடியாக உணவு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    உடலின் சீரான ஹார்மோன் சுரப்புக்கும் திடமான தேகத்துக்கும் சத்தான உணவு அவசியம். திருமணத்துக்குத் தயாராகும் ஆண், பெண் இருவருக்கும் சிறப்பு உணவு வகைகளைச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே வழங்கும் வழக்கம் முன்பு பரவலாக உண்டு. பெண்ணின் மாதாந்திரச் சுழற்சி சீராக அமையவும் கர்ப்பப்பை வலுவூட்டலுக்கும் சிறப்பு உணவைக் கொடுப்பது இன்றும் பல இடங்களில் வழக்கத்தில் இருக்கிறது. ஆணோ பெண்ணோ ரத்தசோகை இருந்தால், அவர்களது ஆரோக்கியம் சரிவதுடன் இச்சைக்கான உணர்வுகள் மட்டுப்படவும் செய்யும். அதேபோல ஆணுக்கான டெஸ்ட்டோஸ்டீரோன், பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜன் போன்ற தனித்துவ ஹார்மோன்கள் சுரப்புக்கும் உணவுத் தேர்வில் கவனம் அவசியம்.

    தினசரி ஒரு கீரை சாப்பிடுவது நல்லது. கால்சியம், வைட்டமின் டி சத்து அடங்கிய முருங்கைக் கீரையில் பொரியல் அல்லது சூப் வைத்துச் சாப்பிடலாம். மணத்தக்காளி, வயிற்றின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும். வலுவான வயிறு உடலின் ஒட்டுமொத்த வலுவைச் சொல்லும். சுண்டைக்காய், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

    இவற்றில் முக்கியமானது சாரைப் பருப்பு. இதை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஊறவைத்து, பொங்கலில் மிளகு சேர்ப்பது போல அரிசியில் கலந்து சமைத்துச் சாப்பிடலாம். உயிரணுக்களைப் பெருக்கும் இதை அரபு நாடுகளில் கஞ்சியாக்கிப் பரிமாறுகிறார்கள். பிரியாணியில்கூட அவர்கள் பாதாம், பிஸ்தா சேர்ப்பார்கள். பாதாம் பருப்பில் சட்னி, துவையல் செய்து சாப்பிடலாம். உலர் பருப்புகளில் அக்ரூட் பருப்பு முக்கியமானது. பாதாம் பிசினை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் ஜவ்வரிசிக்குப் பதில் பாயசத்தில் சேர்க்கலாம்.

    முருங்கைப்பூவுடன் முந்திரி, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்ந்து சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். சாலாமிசிரி வேர், உடலுக்கு வலுச்சேர்ப்பதுடன் நலிந்த தேகத்துக்கு பொலிவை மீட்டுக் கொடுக்கும். இதை அரைத்து அரிசியுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள். காய்ச்சலில் நீண்ட நாள் விழுந்தவர்கள் விரைவாக உடல் நலம் பெற இதைக் கொடுப்பார்கள். கோதுமைப் பாலில் இனிப்புகள் செய்யலாம். சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிடுவதுகூட ஆண்களின் ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டும்.



    கிழங்கு ரகங்கள் அனைத்தும் உடலுக்கு வலுச்சேர்ப்பவை. இலங்கையில் திருமணத்துக்குத் தயாராகும் ஆணுக்குப் பனங்கிழங்கை ‘ஒடியல் கூழ்’ என்ற பெயரில் சமைத்துத் தருவார்கள். காராமணி, மொச்சை, பிஞ்சுக் கத்தரி, முருங்கைக் கீரை, வெங்காயம் ஆகியவற்றுடன் பனங்கிழங்கு மாவைக் கலந்து கிரேவியாகச் செய்வார்கள். ஆணுக்கு வீரியம் தரும் இந்த உணவைத் திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பாகவாவது பரிமாறுவார்கள். அசைவம் உண்பவர்கள் நாட்டுக்கோழி, காடை, கவுதாரி, கடல் உணவு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். நண்டு இரு பாலினத்தவருக்கும் நரம்புகளை மீட்டி, உணர்வைப் பெருக்கித் துடிப்போடு வைத்திருக்கும்.

    பெண்கள் பருவமடைந்த நாள் தொடங்கி சிறப்பு உணவூட்டத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இம்பூரல் மூலிகையில் பச்சரிசி மாவு கலந்து அடை செய்து சாப்பிட்டுவர, மாதவிடாய் சுழற்சி சீராவதுடன் கர்ப்பப்பை பிரச்சினைகள் மட்டுப்படும். இந்த மூலிகையைத் தமிழக அரசு மாத்திரையாகவும் தயாரித்து வழங்குவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை அறியலாம். அந்தக் காலத்தில், கல்யாண முருங்கை உள்ள வீட்டைத் தேடி பெண் எடுப்பார்கள். இந்த இலை, பல் பூண்டு, மிளகு ஆகியவற்றில் தலா மூன்றைச் சேர்த்தரைத்து பருவமடைந்த பெண்ணுக்கு மூன்று நாட்கள் தருவார்கள். கருமுட்டையைத் தகுதிப்படுத்தும் இந்த மருத்துவத்துக்கு இன்றும் ஈடில்லை. கல்யாண முருங்கையில் அடை செய்தும் சாப்பிடலாம்.

    சோற்றுக் கற்றாழையின் உள்ளே உள்ள சோற்றுப் பகுதியை ஜெல்லை எடுத்து ஏழு முறை நன்றாகக் கழுவி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் உதிரப்போக்கில் ஒழுங்கு பிறக்கும். மாதவிடாய் நேரத்து வயிற்று வலி மறையும். மாம்பழ சீசனில் அதன் கொட்டையை உடைத்து, பருப்பை மட்டும் ஒரு புட்டியில் சேகரித்து வைக்கலாம்.

    அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும் நாட்களில் இந்தப் பருப்பைச் சுட்டு மோரில் கரைத்து ஒரு வேளை குடித்தாலே குணம்பெறலாம். உதிரப்போக்கு அதிகமாக இருப்பதும் நீண்ட ஒழுங்குக் குலைவும் கர்ப்ப பையை இறக்கம் காணச் செய்யும். மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதுடன், அதன் தோலைக் காயவைத்துப் பொடி செய்து சாப்பிடுவதும் மேற்கண்ட பிரச்சினைகளை இயற்கை வழியில் சரிசெய்யும். சோயா, இரட்டை பீன்ஸ், புரக்கோலி, காலிஃபிளவர், தேங்காய், சோம்பு, மல்லித்தழை போன்றவை பெண்களின் உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

    கணவன், மனைவி இடையே இயல்பான தாம்பத்திய ஓட்டம் துவண்டால், அவர்களது ஆர்வமின்மையின் பின்னணியில் பிரதான உடல்நலப் பாதிப்புகள் ஒளிந்திருக்கலாம். உடல் உபாதைகளாலும் கணவன் அல்லது மனைவி உறவைத் தள்ளிவைப்பார்கள். எனவே, தாம்பத்தியத்தில் ஆர்வமின்மை என்பது சாதாரணமாக ஒதுக்கக்கூடியதோ, சங்கடத்துக்கான சங்கதியோ அல்ல.
    பயறு வகைகள், கீரை போன்றவற்றைத் தினசரியோ அடிக்கடியோ சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். இன்று பருப்புக்கீரை கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை - 1 கப்
    பச்சரிசி - கால் கப்
    முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    உப்பு - தேவைக்கு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    பருப்புக் கீரை - அரை கட்டு
    சிறிய வெங்காயம் - 50 கிராம்
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பருப்புக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    சம்பா கோதுமையைக் கழுவி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

    மறுநாள் பச்சரிசியைத் தனியே ஊறவைத்துக்கொள்ளுங்கள். 

    இவை இரண்டும் நன்றாக ஊறிய பிறகு இவற்றுடன் முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து இட்லி மாவைவிடக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    அரைத்த மாவுடன் நறுக்கிய பருப்புக் கீரை, வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். 

    பிறகு மாவை வாழையிலையில் வைத்துத் தட்டி, நடுவில் ஒரு துளையிடுங்கள்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த அடையை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சிவக்க வேகவைத்து எடுங்கள்.

    சத்தான பருப்புக்கீரை கோதுமை அடை ரெடி.

    விருப்பப்பட்ட எந்த கீரையை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை பெண்களின் தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.. தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…,
    பயன் தரும் கற்றாழை பெண்களின் தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.. கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

    இது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.

    அதற்கு கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழை எண்ணெய் தயாரித்து வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், மூன்றே மாதங்களில் தலைமுடி நன்கு வளர்ந்திருப்பதைக் காணலாம்.

    உங்களுக்கு கற்றாழை எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    கற்றாழை இலை - 1 (2-4 இன்ச் நீளமுள்ளது)
    தேங்காய் எண்ணெய் - 50 மிலி



    செய்முறை :

    கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும் போது அதில் உள்ள மஞ்சள் நிற பகுதியை தப்பித்தவறியும் எடுத்துவிட வேண்டாம்.

    ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 2-3 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.

    பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10-15 நிமிடம் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.

    பயன்படுத்தும் முறை: கற்றாழை எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடைந்து, அதன் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.
    இந்த ஆசனம் பெண்களுக்கு உண்டாகும் பலவிதமான உடற்குறைபாடுகள் நீங்கும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: சக்ரா என்றால் வட்டம் என்று பொருள். இந்த ஆசனத்தில் உடல் வட்டமாக இருப்பதால் சக்ராசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும், கைகளை மடக்கி உள்ளங்கைகளை இரு தோள்களுக்கும் அருகில் தரையில் நன்றாக பதிக்கவும், இரு கால்களையும் மடக்கி தொடையோடு சேர்த்து வைக்கவும், இரு கால்களுக்கும் இடைவெளி 2 அடி இருக்கட்டும். மூச்சை உள்ளே இழுக்கவும்.

    மூச்சை வெளியே விட்டு பிருஷ்டத்தையும் முதுகையும் மேலே தூக்கவும். இப்போது தோள்களையும் மேலே தூக்கி தலையை வளைத்து தலையின் மேல் பகுதியை தரை விரிப்பின் மேல் வைக்கவும். இந்த நிலையில் இரண்டொரு முறை சுவாசிக்கவும். மூச்சை வெளியே விட்டு தலையை தரையிலிருந்து மேலே தூக்கவும். அதே சமயம் கைகளை நேராக்கவும், முதுகை நன்றாக வளைக்கவும், கைகளிலும் கால் களிலும் உடல் எடை சமமாக இருக்கட்டும்.  

    இந்த ஆசன நிலையில் 30 முதல் 60 வினாடி சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டு கைகளை மடக்கி சவாசன நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 23 முறை பயிற்சி செய்யலாம்.  தரைவிரிப்பின் மேல் படுத்து சக்கராசனத்தை பயிற்சி செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு நின்ற நிலையில் இருந்து உடலை பின்னாலே வளைத்து ஆசன நிலைக்கு வந்து பயிற்சி செய்யலாம்.



    கவனம் செலுத்த வேண்டிய இடம்:
    மார்பு, இடுப்பு, வயிற்றின் மீதும் உடல் எடையை கைகளிலும், கால்களிலும் சமநிலைப்படுத்துவதின் மீதும் முதுகை தளர்வாக வைத்துக் கொள்வதின் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: புதியதாக பழகுபவர்களில் சிலருக்கு இந்த ஆசனத்தில் தலையை தரையிலிருந்து மேலே தூக்குவது கடினமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தரையிலிருந்து முதுகையும், தலையையும் தூக்கும்போது மற்றொருவர் இடுப்புக்கு கை கொடுத்து சில நாட்கள் தூக்கிவிடுவது நல்லது. சக்ராசனம் செய்யும்போது தரைவிரிப்பு வழுக்கக்கூடியதாக இல்லாமல் இருக்க வேண்டும். 

    தடைகுறிப்பு: நோயுற்றவர்களும், பலகீனமானவர்களும், கைகளில் வலிமை குறைந்தவர்களும், சோர்ந்திருக்கும் போதும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பயன்கள்: நரம்பு மண்டலம் முழுவதும் புத்துணர்வு பெறும். மூச்சின் இயக்கம் சீராக அமையும். ரத்த ஓட்டம் உடலெங்கும் நன்கு பரவும். நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் ஹார்மோனை சரியாக சுரக்க தூண்டுகிறது. எல்லா வயதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் வாய்க்கும். பெண்களுக்கு உண்டாகும் பலவிதமான உடற்குறைபாடுகள் நீங்கும். காக்கும் கடவுளான விஷ்ணுவின் சக்கரம் தீமைகளை ஒழித்து நன்மைகளை காப்பது போல் இந்த ஆசனம் உடல், மனகுறைபாடுகளை ஒழித்து ஆரோக்கியம் காக்க உதவுகிறது. 
    மூலிகைகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் உள்ள உணவு பொருட்களிலேயே ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.
    நாகரிகம் என்ற பெயரில் இன்றைக்கு பலரும் துரித உணவுகள் பக்கம் திரும்பி விட்டனர். இதனால், நோய்கள் புற்றீசல் போன்று புறப்பட்டு விட்டன. மனித உடலானது, நோய்களின் கூடாரமாகி விட்டது.

    இதையெல்லாம் கட்டுப்படுத்த மூலிகைகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் உள்ள உணவு பொருட்களிலேயே ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.

    கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும். அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகைச் சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

    மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்கிறது. வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.

    சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால் சீதபேதி கட்டுப்படும்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

    நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ரசாயனங்கள் நாவல் பழத்தில் உள்ளன.

    வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும். பாதாம்பருப்பில் வைட்டமின் ‘ஈ‘ சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும். 
    நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ராஜ்மா சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 100 கிராம்,
    வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    பட்டை - 2 துண்டு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை தனித்தனியா விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்ட தாளித்த பின்னர் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    மசாலா பொருட்கள் பச்சை வாசனை போனவுடன் ஊறிய ராஜ்மாவை சேர்த்து 7 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ராஜ்மா சப்ஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பழகுவது அனைவருக்கும் கடினம். அதையும் தாண்டி, நீங்கள் சமூக ஊடகங்களில் பெண் தோழிகளை சந்திக்க சிலவழிமுறைகள் உள்ளன.
    முன்பெல்லாம், ஒருவருடன் பழக வேண்டும் என்றால், அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் பேசி, அதன்பின் அவர்களுடன் பழக வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சமூக ஊடகங்கள் இந்த சுமைகளை குறைத்துள்ளது. இருப்பினும், அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பழகுவது அனைவருக்கும் கடினம். அதையும் தாண்டி, நீங்கள் சமூக ஊடகங்களில் பெண் தோழிகளை சந்திக்க சில டிப்ஸ்கள் இதோ

    உங்களுக்கு அறிமுகம் இல்லாத, எந்த வகையிலும் தொடர்பில்லாதவரை தொடர்பு கொள்வது மிகவும் தவறானது. உங்கள் நண்பரின் தோழி அல்லது, உங்கள் சமூகத்தில் இருப்பவர் என உங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடையவரை தொடர்பு கொள்ளுங்கள்

    அவரை சமூக ஊடகத்தில் நண்பர் ஆக்கிவிட்டீர்கள் எனில், அவருக்கு ஒரு ஹாய், ஹலோ என மெசேஜ் செய்து உரையாடலைத் தொடங்குங்கள். அவர் பதில் பதிவு செய்யும் வரை காத்திருங்கள். சில நாட்களுக்குப் பிறகும் பதில் பதிவு செய்யவில்லை என்றால், அவரை விட்டு விலகுங்கள்

    அவர் பதில் பதிவு செய்தால், உடனடியாக அவருக்கு நிறைய மெசேஜ் செய்து தொந்தரவு செய்யாதீர்கள். அவர் ஒரு மெசேஜ் செய்தால், அதற்கு பத்து மெசேஜ் பதில் பதிவு செய்வது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். அப்போதுதான் உங்கள் மீது ஒரு நன்மதிப்பு வரும்

    உங்களுக்கு அவர் மெசேஜ் செய்வது பாதுகாப்பானது என்பதை உணரச் செய்யுங்கள். அவருக்கு அடிக்கடி மெசேஜ் செய்து தொந்தரவு செய்வது, உங்களை ஆபத்தானவர் என்பதைப் போல் காட்டும். பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

    பெண் தோழிக்கு மெசேஜ் செய்யும் போது நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இரண்டு அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். தெரியாத விஷயங்களை பற்றி பொய் சொல்லாதீங்க. அதே போல் தெரிந்த விஷயங்களையும் அளவுடன் பேசுங்க. அப்போது உங்களது நட்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் பல காலங்கள் தொடரும். நட்பும் நிலைத்திருக்கும்.
    கணவன் மனைவி தாம்பத்தியத்தில் சில நேரங்களில் நடக்கும் விஷயங்கள் பெண்களை வெறுப்படைய செய்யும். அந்த விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
    முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு, செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்யும்.

    பெண்களுக்கு தாம்பத்தியத்தின் போது உச்சத்தை எட்டும்போது அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும்.

    அழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை தாம்பத்தியத்தின் போது பெண்களை வெறுப்படைச்செய்யும். அதனால் செக்ஸில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.

    தாம்பத்தியத்தின் ஈடுபடும் போது, முன்னாள் காதலியுடன் செக்ஸ் உறவு பற்றி பேசினால், பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. உண்மையாக இருக்கிறேன் என பலர் இந்த சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.

    ஆக்ரோஷமாக தாம்பத்தியத்தின் ஈடுபடுவது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்வது அவசியம்.

    செக்ஸ் என்பது இருவழிச்சாலை, இருவரும் தங்களின் துணைக்கு பிடித்தபடி நடக்க வேண்டும். பெண்களை மட்டும் எல்லா விஷயங்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.

    பெண்களின் உடலில் முடி இருக்கக்கூடாது என ஆண்கள் நினைப்பது போலவே ஆண்களின் உடலில் முடி இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் சுத்தமாக இருப்பது அவசியம்.
    தயிர், சாம்பார் சாதத்துடன் சாப்பிட் பன்னீர் மிளகு வறுவல் அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்,
    வெங்காயம் - 3,
    பச்சைமிளகாய் - 2,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு,
    மிளகுத்தூள் - 1½ டீஸ்பூன்,
    கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், க
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.



    செய்முறை :


    பன்னீரை சதுர துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் போட்டு 30 நிமிடம் ஊறவைத்து எடுக்கவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது மசாலா வாசனை போனவுடன் மிளகு தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக பச்சைவாசனை போகும்வரை வதக்கவும்.

    பிறகு சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    நன்கு கொதி வந்ததும் பன்னீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கறிவேப்பிலை சேர்த்து வறுவலாக வரும்வரை கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சூப்பரான பன்னீர் மிளகு வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினந்தோறும் நாக்கை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் பல்வேறு உடல்நலம் உபாதைகளை சந்திக்க நேரிடும். அவை என்னவென்று பார்க்கலாம்.
    தினம் தோறும் நாக்கை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளைப்பற்றி பார்க்கலாம்.

    தினமும் பல் தேய்த்த பின் நாக்கை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், வாய் துர்நாற்ற்ம் அதிகமாகும். பாக்டீரியாக்கள் அதிகமாக பரவத்துவங்கி, பின் மோசமான வாடையை உண்டுபண்ணும்.

    நாக்கை சரியாக சுத்தம் செய்யாததால், சில நேரங்களில் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் வர காரணமாகும். இதனால் ஈறுகள் அதிக சிகப்பாக காணப்படுவது, ரத்தம் கசிவது உள்ளிட்ட பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு உள்ளது.

    நாக்கை சுத்தம் செய்யவில்லை என்றால், அது ஈறுகளின் பிரச்சனைக்கு வழி வகுக்கும், இதனால் பற்கள் பலவீனமவதோடு, சில நேரங்களில் பற்களை எடுக்கும் நிலை கூட ஏற்படும்.

    நாக்கை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் நாக்கில் உள்ள சுவையரும்புகள் மந்தமாவதுடன், சில நாட்களில் சுத்தமாகவே சாப்பிடும் உணவின் சுவை தெரியாமலே போகும் நிலை உருவாகும்.

    நாக்கை நீங்கள் சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் உங்கள் நாக்கு கருப்பாக மாறும். இதனால் ஆபத்து எதுவும் இல்லை என்றாலும் நாக்கு கருமையான நிறத்திற்கு மாறிவிடும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 பயிற்சிகளும் மார்புத்தசையை வலுவாக்கும். இந்த உடற்பயிற்சிகளை செய்வது எப்படி என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மார்புத்தசையை வலுவாக்க இந்த 2 பயிற்சிகளும் சிறந்தவை. இப்போது இந்த பயிற்சிகளை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    பார்பெல் கர்ல் (barbell curls)


    தோள்பட்டை அகலத்துக்குக் பார்பெல்லை தொடைகளுக்கு அருகில் பிடிக்க வேண்டும். முன்பக்கம் தூக்கும் வகையில் இந்தப் பிடிப்பு இருக்க வேண்டும். உங்கள் கைமுட்டி மடங்கக் கூடாது. மூச்சை உள்ளிழுத்தபடி முட்டியை மடித்து பார்பெல்லை மார்பு வரை உயர்த்த வேண்டும். பார்பெல் மார்பை நெருங்கியதும் உங்கள் பைசெப்ஸை நன்றாக இறுகவைத்து மூச்சை வெளியேவிட்டபடி, மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பைசெப்ஸ் தசைகளை நன்றாக உறுதிப்படுத்தும்.



    பெக் டெக் ஃபிளைஸ் (pec deck flyes)

    இதற்கென உள்ள பிரத்யேகக் கருவியில் நேராக அமரவேண்டும். அதன் கைப்பிடிகளை பிடித்துக்கொண்டு, தோள்பட்டையை நேராக வைக்க வேண்டும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடி, கைப்பிடியை மெதுவாகப் பக்கவாட்டில் தள்ளிக் கொண்டுசென்று தோள்பட்டைக்கு நேராகக் கொண்டுவர வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வர வேண்டும். இதுவும் மார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சி.
    ×