என் மலர்
ஆசிரியர் தேர்வு
- ஒரு நகைச்சுவை கலந்த சைஃபை கதைக்களத்தில் படத்தை இயக்கிய டி.ராஜவேல் அவர்களுக்கு பாராட்டுகள்.
- படத்தின் முதல் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
கதைக்களம்
தர்ஷன் - அர்ஷா சாந்தினி கல்லூரி பருவத்திலிருந்து காதலித்து வருகின்றனர். அர்ஷா சாந்தினியை திருமணம் செய்து கொள்வதற்காக தர்ஷன் அவரது அனைத்து சேமிப்புகளையும் வைத்து ஒரு வீடு வாங்குகிறார். அதற்கு பின் திருமணம் செய்துக் கொண்டு அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
அப்போது அந்த வீட்டில் அமானுஷ்யமான சில விஷயங்கள் நடக்கிறது, ரிமோட் பறப்பது, டி.வி சேனல்கள் மாறுவது வேறு நபர்கள் அந்த வீட்டில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. மறுப்பக்கம் அதே குடியிருப்பில் இருக்கும் காளி வெங்கட் வீட்டிலும் இதே மாதிரி அமானுஷ்ய விஷயங்கள் நடைப்பெறுகிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது இந்த அமானுஷ்யத்திற்கு பின்னணி என்ன? தர்ஷன் வீட்டிற்கும் காளி வெங்கட் வீட்டிற்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
இயக்கம்
ஒரு நகைச்சுவை கலந்த சைஃபை கதைக்களத்தில் படத்தை இயக்கிய டி.ராஜவேல் அவர்களுக்கு பாராட்டுகள். அறிவியல் சார்ந்த விஷயங்களை எடுத்து இருந்தாலும் அதனை மக்களுக்கு புரியும் படி கூறியுள்ளார். படத்தின் முதல் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
ஒரே வீடு, இரண்டு வெவ்வேறு கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரே வீட்டில் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், அவர் தனது கேமரா மூலம் வெவ்வேறு வடிவங்களாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தயாரிப்பு
Sivakarthikeyan Productions, Play Smith Studios, South Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
ரேட்டிங் - 3.5/5
- ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும்.
- இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருகிறது.
சென்னை
ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும். ஆனால் ஆடிப்பெருக்கு தினத்தன்று (ஆகஸ்டு 3-ந்தேதி) மிகுந்த நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும்.
அந்த மாதத்தின் இதர நாட்கள் மூலம் கிடைக்கும் மொத்த பத்திரப்பதிவு வருமானத்தை விட, அன்றைய தினம் நடக்கும் பத்திரப்பதிவின் வருமானம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் பத்திரப்பதிவுகள் நடக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக முகூர்த்த மற்றும் நல்ல நாட்களில் அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறப்பதற்கு பத்திரப்பதிவுத்துறை முன்பு திட்டமிட்டது.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முகூர்த்த நாளன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் அன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு வேண்டாம் என்று பத்திரப்பதிவு துறை முடிவு செய்துவிட்டது. அந்த அடிப்படையில்தான் ஆடிப்பெருக்கு நாளன்றும் பதிவுகள் கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது.
- இங்கு சுமார் 1,500 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தச் சிறையில் கலீல் பிரையன் (30) என்ற கைதியும் அடைக்கப்பட்டு இருந்தார். இவரது தண்டனை காலம் முடிந்த நிலையில் கடந்த வாரம் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் பெயர் குழப்பத்தால் அதே பெயருடைய மற்றொரு கைதியை சிறை அதிகாரிகள் விடுதலை செய்தனர்.
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 சிறைத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதே சிறையில் இருந்துதான் கடந்த மே மாதம் 10 கைதிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் நடந்த 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-0,7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
- இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 200 விக்கெட்டுகளை கடந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
முகமது சிராஜ் போப், ஜோ ரூட், முகமது சிராஜ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்னதாக முகமது சிராஜ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 199 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
- பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
- 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.
சிறந்த பாடலுக்கான விருதை வாத்தி பாடலுக்கு ஜி.வி பிரகாஷ் வென்றுள்ளார்.
- விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு தடவை வழங்கும் நிதி உதவியின் 20-வது தவணையை தொடங்கி வைக்கிறார்.
- வாரணாசி தொகுதிக்கு ரூ.2,248 கோடி செலவில் 53 புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது எம்.பி. தொகுதியான வாரணாசி பகுதிக்கு நாளை செல்கிறார். அங்கு அவர் நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு தடவை வழங்கும் நிதி உதவியின் 20-வது தவணையை தொடங்கி வைக்கிறார். பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
வாரணாசி தொகுதிக்கு ரூ.2,248 கோடி செலவில் 53 புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 53 புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
- 2025-ம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ந்தேதி நிகழ உள்ளது.
- இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும்.
கடந்த சில நாட்களாக நாளை உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு நாசா மறுத்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் நகர்ந்து வந்து சூரியனை முழுவதுமாக மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்த நேரத்தில் சூரியனின் வெளிச்சம் சிறிது நேரத்திற்கு பூமி மேல் விழாது. இதுவே சூரிய கிரகணம் ஆகும். 2025-ம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ந்தேதி நிகழ உள்ளது. ஆனாலும் அது மிகச் சிறிய சூரியகிரகணம்தான்.
கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு வரும் ஆகஸ்டு 2, 2027-ம் ஆண்டு நிகழ இருக்கும் சூரிய கிரகணம் தான் இந்த நூற்றாண்டில் நிகழ இருக்கும் மிக நீண்ட சூரிய கிரகணம்.
இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடி வரை நீடிக்க உள்ளது . ஆனாலும் இது பூமியை முழுவதும் இருளாக ஆக்காது. ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஆனாலும் இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும். மற்ற நாடுகளில் இதை காண முடியாது. இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- சமீபகாலமாக உடல் எடையைக் குறைத்து மிகவும் ‘ஸ்லிம்' ஆக மாறியிருக்கிறார், சமந்தா.
- காய்கறி மட்டுமே உணவாக எடுத்து வருகிறார்.
பல்வேறு சோதனைகளைத் தாண்டி, மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ள 'சுபம்' என்ற படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் மாறினார் சமந்தா. தற்போது புதிய படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
சமீபகாலமாக உடல் எடையைக் குறைத்து மிகவும் 'ஸ்லிம்' ஆக மாறியிருக்கிறார், சமந்தா. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, சிவப்பு இறைச்சி உணவுகளைத் தவிர்த்து வருகிறார். காய்கறி மட்டுமே உணவாக எடுத்து வருகிறார்.
இதனால் சமந்தாவின் 'டயட்' என்னவென்று அவர் செல்லும் இடங்களிலும், அவரது சமூக வலைதள பக்கங்களிலும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனாலும் சமந்தா வாயைத் திறப்பதே இல்லையாம்.
ஏற்கனவே சமந்தா சொன்ன ஒரு மருத்துவ சிகிச்சை (நெபுலைசர்) ஆபத்தானது என்று பெரியளவில் எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்தமுறை சமந்தா 'அலர்ட்' ஆகிவிட்டார். இதனால் யார் கேட்டாலும், 'பிடித்ததை சாப்பிடுங்க' என்று கும்பிடு போடாத குறையாக கூலாக சொல்லி தப்பித்து விடுகிறார்.
ஏற்கனவே பட்ட 'அடி', கண் முன் வந்து போகுமா இல்லையா...
- ஆகஸ்ட் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 34 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,823.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- மாணிக்ராவ் கோகட்டேவின் ராஜினாமா குறித்து பேச்சு எழுந்தது.
- விவசாயிகள் தங்கள் மானியங்களை தவறாகப் பயன்படுத்டுகிறார்கள் என்று பேசியிருந்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தின்போது தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)-ஐ சேர்ந்த வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ சர்ச்சயை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு தண்டனையாக அவரிடம் இருந்து வேளாண் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சகத்தை இப்போது தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சியின் தத்தா பர்னே கையாள்வார். முன்னதாக, அவர் விளையாட்டு அமைச்சகத்தை கையாண்டு வந்தார்.
மாணிக்ராவ் கோகட்டேவின் ராஜினாமா குறித்து பேச்சு எழுந்தது. இருப்பினும் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, கோகட்டேவின் துறையை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
வேளாண் அமைச்சராக இருந்த காலத்தில், விவசாயிகள் தங்கள் மானியங்களை தவறாகப் பயன்படுத்டுகிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பல கருத்துக்களை மாணிக்ராவ் கோகட்டே பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.






