என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. எனினும், கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 24-ந்தேதி வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பிரம்மோற்சவ விழா பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்தப்படுமா அல்லது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா, மேலும் கோவிலின் நான்கு மாட வீதிகளில் காலை, மாலை என இருவேளை வாகனச் சேவை நடக்குமா? என்பது கேள்வி குறியாக உள்ளது.

    இந்தநிலையில் அறநிலையத்துறை மற்றும் கோவில் அதிகாரிகள் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் குறித்து இந்த மாதம் முதல் வாரத்தில் சித்தூர் மாவட்ட கலெக்டர் எம்.ஹரிநாராயணன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளது.

    முன்னதாக, பிரம்மோற்சவ விழாவை நடத்துவது குறித்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அதிகாரிகள் சமீபத்தில் சித்தூா் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இந்த மாதம் முதல் வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை சாதாரணமாக நடத்த மாநில அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

    அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலிலும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை சாதாரணமாக நடத்த மாநில அறநிலையத்துறை அனுமதிக்கும், எனப் பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இதற்கிடையே, நேற்றில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. முதலில் கோவிலில் வண்ணம் பூசும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதுதவிர மற்ற ஏற்பாடுகளும் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் அம்மனை மடியேந்தி வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.
    திருச்சியில் உள்ள தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிர மாகாளியம்மன் கோவில் உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அம்மன் வடக்கு திசையை நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    உக்கிர மாகாளியம்மனை மனமுருகி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் தொல்லை நீங்கும். மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் அம்மனை மடியேந்தி வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது. கண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்ந்தவுடன் அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    மேலும், தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஒரு சில பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபாடு செய்வார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படாது.
    திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளை அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். விழாவில் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக நடைபெறும்.

    தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசை நாளில் பூம்புகார் சென்று கடலில் நீராடிவிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது மன்னரின் வருகையை கவனிக்காமல் சுப்பிரமணிய பட்டர் தியான நிலையில் இருந்தார்.

    இதைக்கண்ட மன்னர் பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பி பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டார். அப்போது, அபிராமி அம்மனின் தியான நிலையில் இருந்த சுப்பிரமணிய பட்டர் வாய் தவறி தை பவுர்ணமி என கூறினார். அமாவாசை நாளை பவுர்ணமி என கூறியதால் அச்சத்தில் இருந்த சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நோக்கி அந்தாதிப் பாடல்களை பாட தொடங்கினார்.

    அப்போது அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி, தனது காதில் அணிந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினார், அது முழு நிலவாக வானில் ஒளி வீசி அமாவாசையை பவுர்ணமியாக மாற்றி காட்சி அளித்தது. இந்த அதிசய நிகழ்வை தொடர்ந்து சுப்பிரமணிய பட்டர் அபிராமி பட்டர் என சிறப்போடு அழைக்கப்பட்டார்.

    தை அமாவாசை நாளான நேற்று ஓதுவார் மூர்த்திகள் அபிராமி அந்தாதி பாடல்களை பாட ஒவ்வொரு பாட்டுக்கும் தீப நைவேத்தியம் செய்தும் வழிபட்டனர். இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கினார். பின்னர் அபிராமி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைப்பெற்றது.

    முன்னதாக ஆணைக்குளத்துகரையில் அமைந்துள்ள எதிர்காளிஸ்வரர் கோவிலில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிராமி அம்மனுக்கு பால்குடம் சுமந்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    வில்லின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வழியில், ராமாயண காவியத்தின் முழுக் கதையும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
    ஆந்திர மாநிலம் விசயநகரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ ராமநாராயணம் திருக்கோவில். சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், ‘வில்-அம்பு’ வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. வில்லில் பொருத்தப்பட்ட அம்பு, விடுவதற்கு தயார் நிலையில் இருக்கும்போது எப்படி இருக்குமோ, அந்த அமைப்பில் கோவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    அம்பின் அடிப்பகுதி இருக்கும் பகுதியில் கோவில் நுழைவு வாசல் இருக்கிறது. அம்பு மற்றும் இரு பக்க நாண் போன்றவை அடியில் தூண்கள் அமைக்கப்பட்டு பாலம் போல் அமைந்துள்ளது. வில்லில் நாண் பூட்டப்படும் இரண்டு பக்கத்திலும் இரண்டு திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அதே போல் அம்பின் நுனிப் பகுதியில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

    ராமாயண காட்சி சிற்பங்கள்

    வில்லில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு நாணின் வழியாகச் சென்று, வில்லின் ஒரு முணையில் உள்ள அமர்ந்த கோல திருமால், மற்றும் சயனக் கோல திருமாலை தரிசிக்கலாம். அங்கிருந்து வில்லின் மறு முனைக்குச் சென்று அங்குள்ள சீதா, லட்சுமணர் சமேத ராமபிரானை வழிபாடு செய்யலாம். வில்லின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு செல்லும் வழியில், ராமாயண காவியத்தின் முழுக் கதையும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

    விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் விசயநகரம் இருக்கிறது.
    அண்ணாமலையாரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.
    சிவபெருமான் அருள்பாலிக்கும் எத்தனையோ தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு மிக முக்கியமான சிறப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தலத்துக்கு மட்டுமே உண்டு. அருணாசலேஸ்வரரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனம் கசிந்து, ஆத்மார்த்தமாக இருந்த இடத்தில் இருந்தே அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.

    மறையி னானொடு மாலவன் காண்கிலா
    நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
    உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
    பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.
    செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி உரிய ஆகம விதிகளை கடைபிடித்து வழிபட்டால் பிறவிப் பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    நமது மூதாதையர்கள் கட்டிய ஆலயங்களில் இன்றும் அருள் அதிர்வலைகள் நிரம்பி இருப்பதை உணரலாம். கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் சக்தியை முழுமையாக பெறுவதற்கு ஏற்ப நமது பழமையான ஆலயங்கள் அமைந்துள்ளன.

    எனவே ஒரு ஆலயம் எந்த ராசி அல்லது எந்த நட்சத்திரத்தின் அம்சத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு வழிபட்டால் அதற்குரிய பலன்களை நிச்சயமாக பெற முடியும்.

    அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் கிருத்திகை நட்சத்திரத்தின் அம்சத்தில் அமைந்து இருப்பதாக கருதப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரத்துக்குரிய கிரகம் சூரியன் ஆவார்.

    சூரியனின் அதிதேவதை சிவபெருமான் ஆவார். எனவே கிருத்திகை நட்சத்திரம் தினத்தன்று அண்ணாமலையாரை வழிபட்டால் அனைத்து வகை செல்வங்களையும் பெற முடியும் என்று சொல்கிறார்கள். கிருத்திகை நட்சத்திரத்துக்குரிய தெய்வம் முருகன். ஜோதிட சாஸ்திரப்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம் ஆவார்.

    திருவண்ணாமலை ஆலயத்தில் அண்ணாமலையாருக்கு எந்த அளவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகிறதோ, அதே அளவுக்கு முருகப்பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    இதைக் கருத்தில் கொண்டே திருவண்ணாமலை ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்வதை சிறப்பானதாக கருதுகிறார்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமையன்று வழிபாடு செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக அதிக சக்தியுள்ள கிரகமாக செவ்வாய்க்கிரகம் உள்ளது. செவ்வாய் கிரகத்தின் அதிபதி நெருப்பு.
    திருவண்ணாமலை தலம் பஞ்ச பூதங்களில் நெருப்புக்கு உரிய தலம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால்தான் நெருப்புக்குரிய அம்சமான செவ்வாய்க்கிழமையன்று திருவண்ணாமலை தலத்தில் வழிபடுவது சிறப்பைத் தரும் என்கிறார்கள்.

    ஜோதிடப்படி செவ்வாய் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துபவராக உள்ளார். ஆளுமைத் திறன், அதிகாரம், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வீரதீர செயல் புரிதல், தலைமைப் பொறுப்பு, உயர் பதவி ஆகியவை செவ்வாயின் அனுக்கிரகத்தால்தான் கிடைக்கும்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த செவ்வாய், சிவந்த மேனியை உடையவர். அது மட்டுமல்ல செவ்வாய்க்கு கிரக அந்தஸ்தை கொடுத்ததும் சிவபெருமான்தான்.

    இதனால் திருவண்ணாமலை தலத்தில் செவ்வாய் அம்சமும், அருளும் அதிகம் உள்ளது. எனவே திருவண்ணாமலை தலத்தில் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்யும்போது நினைத்தது நிறைவேறும். ஜோதிட ரீதியாக செவ்வாய்க்கிழமையை குருட்டுத் தினம் என்பார்கள். செவ்வாய் ஓரையில் சுப காரியம் எதையும் செய்ய மாட்டார்கள்.

    ஆனால் திருவண்ணாமலை தலத்தில் செவ்வாய்க்கிழமை வழிபாடுகள் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் அணிவகுத்து வரும். சிவன் கோவில்கள் அனைத்திலும் பெரும்பாலும் திங்கட்கிழமை களில்தான் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். சோமவார பூஜையை வழிபடுவதை சிவபக்தர்கள் பலர் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆனால் திருவண்ணாமலை அக்னித் தலமாக இருப்பதால் திங்கட்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதில்லை. சோமவார பூஜை பஞ்ச பருவ விழாவில் சேர்க்கப்பட்டு விட்டதால், செவ்வாய்க்கிழமையில் தான் சிறப்பு பூஜைகளை மேற்கொள்கிறார்கள். திருவண்ணாமலை அக்னி தலம் என்பதால்தான் அருணாசலம் என்று அழைக்கப்படுகிறது. அருணம் என்றால் “சிவப்பு” என்று பொருள்.

    எனவே அக்னிக்குரிய ஆலயமாக திருவண்ணாமலை உள்ளது. அக்னிக்குரிய காரகன் செவ்வாய். இதனால் சிவாலயங்களில் திருவண்ணாமலையில் மட்டும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி உரிய ஆகம விதிகளை கடைபிடித்து வழிபட்டால் பிறவிப் பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தானோ, என்னவோ திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை வழிபட்டு கிரிவலம் வந்தால் வண்டி, வண்டியாக நன்மைகள் வரும் என்று மகான் சேஷாத்திரி சுவாமிகளே கூறியுள்ளார். திருவண்ணாமலை செவ்வாய்க்கிழமை வழிபாட்டு சிறப்புக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

    அதுபோல நமது உடல் அமைப்பு ஆதாரத் தலங்களில் திருவண்ணாமலை மணிப்பூரகத் தலமாக திகழ்கிறது. “மணிப்பூரகம்” என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் அதற்கும் திருவண்ணாமலை ஆலயத்துக்கும் உள்ள அதிசய தொடர்பு உங்களுக்குத் தெரிய வரும்.

    மனித உடலில் 72 ஆயிரம் நாடிகள் இருக்கின்றன. இந்த 72 ஆயிரம் நாடிகளும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை, சகஸ்ரஹாரம் அல்லது துரியம் எனும் 7 சக்கரங்களில் இணைகின்றன. எனவே இந்த 7 சக்கரங்களும் நமது உடம்பில் எப்படி செயல்படுகிறதோ, அதற்கு ஏற்பதான் நமது உடலும், மனமும் இயங்கும்.

    நமது உடம்பில் தொப்புள் கொடிக்கு அருகில் மணிப்பூரகம் அமைந்துள்ளது. இதன் மூலக்கூறு நெருப்பாகும். அதாவது மணிப்பூரகம் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. திருவண்ணாமலை திருத்தலமும் அக்னி லிங்கமாக நெருப்பில் உருவாகி இருப்பதால் திருவண்ணாமலை தலத்தை மணிப்பூரகத் தலம் என்கிறார்கள்.

    மணிப்பூரகம் என்பது நமது வயிற்றையும் குறிக்கும். வயிற்றுக்குள்தான் இந்த உலகமே இயங்குகிறது. இது ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்பதை பிரதிபலிப்பதாக சொல்கிறார்கள். மணிப்பூரகம் சக்கரம் உணர்ச்சிமயமானது என்று வரையறுத்துள்ளனர். மணிப்பூரகம் சக்கரம் சரியானபடி சுழலா விட்டால் அதிக உணர்ச்சி ஏற்படும். அதாவது மனதில் நிம்மதி இருக்காது. மனம் கொந்தளிப்புடன் காணப்படும்.

    சிலருக்கு மணிப்பூரகம் ஒழுங்கற்று இருந்தால் மனதில் ஆணவத்தையும், அகங்காரத்தையும் உருவாக்கி விடும். மகா விஷ்ணுவும், பிரம்மாவும் ஆணவத்தையும் அகங்காரத்தையும் கைவிட்டது இந்த தலத்தில்தானே. அதுபோல மணிப்பூரகம் சிறப்பாக&சரியாக சுழன்றால் நம்மிடம் உள்ள ஆணவமும், அகங்காரமும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். இதனால் நம் மனதில் நிம்மதி பிறக்கும்.

    மணிப்பூரகத்தில் தாமரை இதழ் போன்று 10 யோக நாடிகள் இருக்கின்றன. அவை சீராக இருந்தால் மனதில் சாந்தம் உண்டாகும்.திருவண்ணாமலை தலத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதற்கு சில சூட்சமமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் அமர்ந்து தியானம் செய்து மணிப்பூரம் சக்கரத்தை மேம்படுத்தினால் மனதில் இனம்புரியாத அமைதி வந்து விடும். எந்தவித நோய்களும் உங்களை அணுகாது.

    “நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தில் ‘ம’ எனும் மந்திரத்தையும், தத்துவத்தையும் பிரதிபலிப்பதாக மணிப்பூரகம் சக்கரம் உள்ளது. இந்த சக்கரத்தை நாம் எந்த அளவுக்கு சுழல வைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமது வாழ்க்கையில் வசதிகள் பெருகும்.

    ஒருவரை நேர்மையான கடும் உழைப்பாளியாக மாற்றுவதே மணிப்பூரகம் சக்கரம்தான். எனவே திருவண்ணாமலை தலத்தில் உரிய முறையில் தியானம் செய்தால் இந்த பலனைப் பெற முடியும்.

    இப்படி இன்னும் பல சூட்சமங்களுடன் தொடர்புடையதாக திருவண்ணாமலை தலம் உள்ளது. இத்தலத்தில் உள்ள 142 சன்னதிகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புத் தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு சன்னதியிலும் நின்று நிதானமாக வழிபட்டால், அதன் சிறப்பை நீங்கள் உணர முடியும். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் புகழ் பெற்ற திருவண்ணாமலையில் இதுவரை மூர்த்தி மற்றும் தலத்தின் சிறப்புகளை பார்த்து விட்டோம். அடுத்து தீர்த்தம்.

    திருவண்ணாமலையில் 360 தீர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொரு தீர்த்தத்துக்கும் ஒரு மகிமை
    நாங்கூரில், நாளை 11 பெருமாள் கருட சேவை நடக்கிறது. இந்த விழாவை குறைவான பக்தர்களை கொண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.
    சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தில் நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 11 பெருமாள் கருட சேவை நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தில் நாங்கூர் பகுதியை சுற்றியுள்ள 11 பெருமாள்கள் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் அனைத்து பெருமாள்களுக்கும் தீபாராதனை நடைபெறும். இதுவே கருடசேவை உற்சவம் என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கருடசேவை உற்சவம் நாளை (புதன்கிழமை) இரவு நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நாராயண பெருமாள் கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமை தாங்கினார். தாசில்தார் சண்முகம், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், கிராம தலைவர் அன்பு, ஊராட்சி தலைவர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், கொரோனா காரணமாக மாவட்ட கலெக்டர் லலிதா அறிவுரையின்படி குறைவான பக்தர்களை கொண்டு கருடசேவை உற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் கூறியதாவது:-

    தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, அரசு கூறியுள்ள வழிகாட்டுதல்படி கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் உற்சவத்தில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை உப்பாற்றங்கரையில் மாசாணியம்மன் கோவில் உள்ளது.

    மாசாணியம்மனை தரிசிக்க கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருவார்கள். அமாவாசை உள்பட முக்கிய நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குண்டம் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. பின்னர் மாசாணியம்மனுக்கு பல்வேறு வகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழாவையொட்டி கொடியேற்றுவதற்காக சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டில் இருந்து மூங்கில் மரத்தை வெட்டி வந்து கொடியேற்றுவது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் சர்க்கார்பதி காட்டிற்கு சென்று 70 அடி நீளமுள்ள மூங்கில் கம்பை பக்தர்கள் வெட்டி எடுத்து வந்தனர்.

    பின்னர் சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் வைத்து மூங்கில் கம்பத்துக்கு புடவை அணிவித்து சந்தனம், குங்குமம், வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    நேற்று இரவு கொடிக்கம்பம் மாசாணியம்மன் கோவில் அருகே உள்ள ஆழியாற்றிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆற்று தண்ணீரில் கம்பை ஊற வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இன்று காலை பக்தர்கள் ஆழியாற்றில் இருந்து கொடிக்கம்பத்தை தோளில் சுமந்து கொண்டு ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து, சரியாக 8.45 மணியளவில் கோவிலுக்கு வந்தனர்.

    அதனை தொடர்ந்து 8.48 மணியளவில் கோவில் முன்பு கொடிமரத்தை நட்டு குண்டம் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏக்கள், பொள் ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

    கொடியேற்றத்தையொட்டி ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    தொடர்ந்து இன்று முதல் 18 நாட்களும் காலை, மாலை வேளைகளில் மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேங்களும், பூஜைகளும் நடக்கிறது.

    வருகிற 14-ந் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் மயான பூஜையும், 15-ந் தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜையும் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதலும், மாலை 6 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தல் மற்றும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.

    18-ந் தேதி காலை மஞ்சள் நீராடுதலும், இரவில் மகாமுனி பூஜையும் நடக்கிறது. 19-ந் தேதி மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    இயேசுவின் அன்னையான தூய மரியாள் புனிதரான நாள் பிப்ரவரி 2. ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    இயேசு கிறிஸ்து தூய மரியாளின் வழியாகவே இந்த மண்ணுலகம் வந்தார். தூய மரியாள் இயேசு கிறிஸ்துவை ஈன்றெடுத்ததால் சொல்லொண்ணா துன்பங்களையும் வசைச் சொற்களையும் எதிர்கொண்டார். காலம் முழுக்க இயேசுவுக்காக அவர் மறைவான வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. 'அருள் நிறைந்த மரியே' என்று அகிலத்தோர் புகழ்ந்தாலும் இவர் வாழ்ந்த காலம் முழுக்க, எந்த அற்புதங்களையும் செய்யாமல் பொறுமை கொண்டார். எல்லா ஞானங்களையும் அன்னை மரியாள் பெற்றிருந்தபோதும் கர்த்தருக்காக அமைதி காத்தார். இதனாலேயே உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல்களை இந்த தூய மாதாவின் வழியாகவே சொல்லி மன்றாடி வருகிறார்கள்.

    வேண்டுபவர்க்கு வேண்டியதை அருளும் தேவமாதா டிசம்பர் 25-ம் தேதி தேவகுமாரனான இயேசு கிறிஸ்துவை ஈன்றெடுத்தார். அன்றிலிருந்து அக்கால முறைப்படி 40 நாள்கள் கடுமையான விரதம் இருந்து தேவனைப் பாதுகாத்தார். வீட்டைவிட்டு வெளியே வராமல் பத்திய உணவுகளை மட்டுமே உண்டு பேறுகால வலிகளைக் குணப்படுத்திக்கொண்டார். 40 நாள்கள் விரதத்துக்குப் பிறகு, தூய மரியாள் பிப்ரவரி 2-ம் தேதி விரதத்தை முடித்துக்கொண்டு இயேசு கிறிஸ்துவை தங்களது கோயிலுக்கு அழைத்துச் சென்று தேவனுக்கு அர்ப்பணித்தார். பேறுகால அவஸ்தைகள் நீங்கி புனிதரான தேவமாதா, தேவனால் அன்றைக்கு ஆசீர்வதிக்கப்பட்டார். இதே நாளில்தான் இயேசு கிறிஸ்துவும் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்; ஆகவே 'ஆண்டவரை அர்ப்பணிக்கப்பட்ட தினம்' என்றும் இந்நாள் அழைக்கப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு 40-வது நாள் வரும் இந்த அர்ப்பணிப்பு நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையின் இறுதி நாளாகவும் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ஜோசப்பும் மரியாவும் எருசலேமில் இருந்த ஆலயத்தில் கிறிஸ்துவை அர்ப்பணித்தார்கள் எனவும், இது மோசேயின் கட்டளைப்படி நடத்தப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மரபுவழி திருச்சபை குறிப்பிட்டுள்ள 12 பெருவிழாக்களில் இந்நாளும் ஒன்று. மரியாள் புனிதரான நாள் மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளை உலகின் சில நாடுகளில் 'கேன்டில்மஸ்' (Candle mas) என்ற பெயரில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். பிரகாசிக்கும் மெழுகுதிரிகளை ஏந்தி இந்த நாளில் அன்னை மரியாளையும், தேவகுமாரன் கர்த்தரையும் மகிமைப்படுத்துகிறார்கள். ஆலயங்களில் நடைபெற்ற திருப்பலிக்கு முன்பாக, ஏற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு வீதிகளில் பவனியாக மக்கள் பாடிக்கொண்டு வருவார்கள். எனவேதான் இந்த நாள் 'கேண்டில்மஸ்' (Candle mas) என்றும் அழைக்கப்பட்டது. இப்போதும் இந்த நடைமுறை சில நாடுகளில் உள்ளது.

    கத்தோலிக்க திருச்சபையில் இயேசு கிறிஸ்துவை அர்ப்பணித்த இந்த நாள் தேவகுமாரன் முதன்முதலாக ஆலயத்தில் நுழைந்த புனித நாளாகவும் போற்றப்படுகிறது. ஐரோப்பாவின் பல பகுதிகளில் இந்த நாளில் கிரீப் (Crepe) எனப்படும் மாவு, பால், முட்டை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அப்பத்தை உண்ணும் வழக்கம் உள்ளது. இந்த அப்பத்தை தயாரிக்கும்போது ஒரு கையில் நாணயத்தை வைத்துக்கொள்வதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. இதனால் அடுத்த கிறிஸ்துமஸ் வரை தங்களுக்கு உணவோ, பணமோ கிடைக்காமல் போகாது என்பதே இந்த நம்பிக்கையின் அடிப்படை. ஸ்பானிஷ் (Spanish) நாடுகளில் இந்த விழா `Candelaria’ என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட அப்பத்தையும், மெழுகுதிரிகளையும் தேவாலயத்துக்கு கொண்டு வருவது இந்த நாளின் வழக்கமாக உள்ளது.

    கிறிஸ்துமஸ் தினத்தில் வைக்கப்பட்ட குடில்கள், அலங்காரங்களை இந்த கேண்டில்மாஸ் தினமான இன்றுவரை வைத்திருப்பதும் சில நாடுகளில் வழக்கமாக இருக்கிறது. இந்த விழா நான்காம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் தூய மரியன்னையை மகிமைப்படுத்த 'புனிதரான மரியாள் விருந்தும்' தேவாலயங்களில் நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இந்த நாளுக்கு பொதுமுறை அளிக்கப்படவில்லை என்றாலும் கத்தோலிக்கர்களின் முக்கிய விழாவாகவே உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது.

    நலங்களையெல்லாம் அருளும் தேவமாதா, கர்த்தரால் எளிய மக்களின் பிரார்த்தனையை நிறைவேற்றப் படைக்கப்பட்டவர். ஒரே ஒரு மகனான ஆண்டவரை தூய மரியாள் நமக்காக ஒப்புக்கொடுத்து உயர்வடைந்தார். தியாக வாழ்வால் தேவனுக்கு அருகிலேயே வாழும் விண்ணுலக வாழ்வை உடலுடன் பெற்ற தூயவர் அன்னை மரியாள். எல்லா நிலையிலும் தன்னை தாழ்த்திக்கொண்டு கர்த்தரை மகிமைப்படுத்தியவர் தேவமாதா. அவர் தமக்காக ஒன்றுமே ஆண்டவரிடத்தில் கேட்காத அருமையான குணவதி. அதனாலேயே அவர் ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டார். தூய ஆவியாலே கருவுற்று கர்த்தரைப் பெற்றபோதிலும் விரதமிருந்து இந்த நாளில் புனிதமடைந்தார். எண்ணில்லாத தியாகங்களால் ஏற்றம் கொண்ட புனித மரியாள் பரிசுத்தமடைந்த இந்த நாளில் நமது வார்த்தைகளால், கீர்த்தனைகளால் அவரை மகிமைப்படுத்துவோம்!
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு குடமுழுக்கு நடக்கிறது.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி கடந்த ஆண்டு திருப்பணிகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர், அபிராமி, விநாயகர், முருகன், காலசம்ஹாரமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, ராஜகோபுரங்கள், கொடிமரம், தோரணவாயில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு பணிகள் பழமை மாறாமல் நடைபெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு குடமுழுக்கு நடக்கிறது. விழாவில் அரசின் விதிகளை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் காஞ்சீபுரம் தொண்டைமண்டல 233-வது திருச்சிற்றம்பல தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் நடக்கும் விழாக்கள் குறித்த விவரங்களை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    பிப்ரவரி மாதம் 1-ந்தேதி கர்நாடக சங்கீத மேதை புரந்தரதாசர் ஆராதனை விழா,
    5-ந்தேதி வசந்த பஞ்சமி,
    8-ந்தேதி ரதசப்தமி,
    12-ந்தேதி பீஷ்ம ஏகாதசி, சர்வ ஏகாதசி,
    16-ந்தேதி பவுர்ணமி கருடசேவை, குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம்.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
    அடுத்தவரின் உணவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாம், தமக்கு போக மீதமுள்ளதை தானமாக வழங்கிட வேண்டும். வீண் விரயம் செய்யக்கூடாது.

    காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் ஆகிய ஐந்து அம்சங்களால் உருவாக்கப்பட்டது தான் உலகமும், உலக உயிரினங்களும். இந்த ஐந்து நிலைகளில் ஒன்றை இழந்தாலும் உயிர் வாழ முடியாது; உலகமும் இயங்காது.

    நிலம் என்பது வெறும் மண்ணை மட்டுமே குறிக்காது. மண்ணில் விளையும் அனைத்து வகையான உணவு வகைகளையும் உள்ளடக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால் உணவின்றி உயிர் வாழமுடியாது. மனிதன் உயிர் வாழ உணவு தேவை.

    ஒருவருக்கு போதுமான அளவை விட அதிகப்படியான உணவு பண்டங்கள் யாவுமே அடுத்தவரின் உணவே, அவரின் உடமையே, அவரின் உரிமையே. அடுத்தவரின் உணவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாம், தமக்கு போக மீதமுள்ளதை தானமாக வழங்கிட வேண்டும். வீண் விரயம் செய்யக்கூடாது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தை வலியுறுத்தி இஸ்லாம் அதிகமாக பேசுகிறது. இஸ்லாத்தில் சிறந்த செயல் பசித்தவருக்கு உணவளிப்பது. செயல்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்த விருப்பமான செயல், பசித்தவனுக்கு உணவளிப்பது. சொர்க்கத்தின் வாசலை திறந்து வைக்கும் செயல், பசித்தவனுக்கு உணவளிப்பது. மக்களில் சிறந்தவர் பசித்தவனின் பசியை போக்குபவர் ஆவார். பசித்தவனின் பசியை போக்கும் பண்பு நல்லோர்களின் பண்பு. பசியை போக்கும் நற்பண்பு வலப்புறத்தாராகிய சொர்க்கவாசிகளின் இயற்கையான பண்பு.

    “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமியப் பண்புகளில் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘பசித்தவருக்கு நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்துக் கூறுவதும் ஆகும்’ என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    ‘செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது, ஒருவர் மகிழ்ச்சியை தமது சகோதர முஸ்லிமுக்கு சேர்த்து வைப்பதும், அவரை விட்டு சிரமங்களை அகற்றுவதும், அவரின் பசியை போக்குவதும், அவரின் கடனை நிறைவேற்றுவதும் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: தப்ரானீ)

    “ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, என்னை சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும் ஒரு செயலை எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என வேண்டினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் ‘நீர் ஓர் அடிமையை விடுதலை செய்வீராக, அதற்கு சக்தி பெறாத பட்சத்தில் பசித்தவருக்கு உணவளிப்பீராக, தாகித்தவனுக்கு நீர் புகட்டுவாயாக’ என பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘ஒரு பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி)

    ‘உங்களில் சிறந்தவர் பசித்தவருக்கு உணவு அளிப்பவரே ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: சுஹைப் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘நிச்சயமாக நல்லோர்கள் இறைவன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக வேண்டியே. உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நீங்கள் நன்றி செலுத்த வேண்டியோ நாங்கள் நாடவில்லை’ என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன் 76: 8,9)

    ‘அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து, இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் இவைகளே கணவாய் ஆகும். அவர்களே வலப்புறத்தார்’. (திருக்குர்ஆன் 90:11-18)

    ‘தம் அண்டைவீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் வயிறு நிரம்ப சாப்பிடுபவன் உண்மை இறைவிசுவாசியாக ஆகமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஹாகிம்)

    பசித்திருக்கும் அண்டை வீட்டாரின் பசியையும் போக்கி, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நாடோடிகளாக ரோட்டில் சுற்றித்திரியும், வீதிகளை வீடுகளாக நினைத்து தெருவீதிகளிலும், கடை வீதிகளிலும், நடைபாதைகளிலும், கடைகோடியிலும் இருப்பிடம் அமைத்து அல்லல்படும் அப்பாவிகளின் பசியையும் போக்க வேண்டும். யாசிப்பவருக்கும், யாசிக்காமல் சுயமரியாதையாக வாழும் கஷ்டப்படுவோருக்கும் உணவளித்து, அவர்களின் பசியை போக்கிட வேண்டும். பசித்தவனின் பசியை போக்கி பசியில்லாத, பட்டினிச்சாவு இல்லாத உலகை கட்டமைப்போம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    ×