search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "matha"

    • வழிநெடுகிலும் மக்கள் நேர்ச்சைக் கடன்கள் செலுத்தினர்.
    • கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.

    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை, ஜெபமாலை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    திருவிழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி போன்றவை நடந்தது.

    காலை 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, 10 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி போன்றவை நடந்தது. இதில் விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரைபாரதி உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடந்தது. இரு தங்கத்தேர்களும் ரத வீதிகள் வழியாக பவனி வந்த போது வழிநெடுகிலும் மக்கள் நேர்ச்சைக் கடன்கள் செலுத்தினர். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் மேக்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • நாளை மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தோ் பவனி நடக்கிறது.
    • இன்று இரவு சூசையப்பர் தங்கத்தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குதந்தை ஆன்றனி அல்காந்தர் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது. விழாவில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடந்தது.

    9-ம் நாள் விழாவான இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, மறையுரை, இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத்தேர்ப்பவனி, 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத்திருப்பலி, மறையுரை, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தோ் பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு சிறப்பு திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குதந்தை ஆன்றனி அல்காந்தா், இணை பங்கு தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குபேரவை துணைத்தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • இன்று ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.
    • 18-ந்தேதி மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணிக்கு முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், திருப்பலி, மறையுரை ஆகியவை நடைபெற்றது. விழாவில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 18-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, மறையுரை, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு வடசேரி பங்குதந்தை புருணோ தலைமையில் திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • 17-ந்தேதி சூசையப்பர் தேர்பவனி நடக்கிறது.
    • 18-ந்தேதி மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 9-ந்தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி நடைபெறுகிறது.

    விழாவில் 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, வானவேடிக்கை, தொடர்ந்து சூசையப்பர் தேர்பவனி நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.

    தேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்கு பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணைச்செயலாளர் வினோ மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவையினர், அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • தேர் பவனி முக்கிய விதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தது.
    • திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் 471-வது ஆண்டு பெருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

    திருவிழாவில் 8-ம்திருவிழா அன்று மாலையில் நற்கருணை பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை வரை சென்று மீண்டும் நற்கருணை பவனி ஆலயத்தை வந்தடைந்தது.

    இந்த நற்கருணை பவனி மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி பாத்திமா நகர் உதவி பங்கு சந்தை விமல்ஜன் அடிகளார், பெரியதாழை உதவி பங்கு தந்தை கிங்ஸிலின் அடிகளார், அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய நிர்வாகி சில்வ ஸ்டர் அடிகளார், கூட்டபனை பங்கு தந்தை லோஷன் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். 9-ம் திருவிழா அன்று காலை 10 மணி அளவில் தூய ராஜ கன்னி மாதா சொரூபத்திற்கு மகுடம் அணிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலையில் திருவிழா ஆராதனை நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி இளையோர் பணிக்குழு இயக்குனர் ரஞ்சித் குமார் கருடோசா அடிகளார், குரூஸ்புரம் உதவி பங்கு சந்தை சுதர்சன அடிகளார், புன்னக்காயல் மூத்த பங்கு தந்தையும் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தின் செயலாளருமான அமுதன் அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவு தூய ராஜகன்னி மாதா சொரூப தேர் பவனி நடைபெற்றது. திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4 மணியளவில் அன்னையின் திருஉருவத்தேரின் முன்பு ஜான் சுரேஷ் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது..

    தொடர்ந்து காலை 7.30 மணி அளவில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. பின்னர் தேர் பவனி முக்கிய விதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். திருவிழாவையொட்டி புன்னக்காயல் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    • 23-ம்தேதி ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
    • 24-ந்தேதி திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது.

    கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் தமிழகத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும்.

    இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர்பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்று வந்த திருவிழா பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்துக்கு மாற்றி வைக்கப்பட்டது.

    இருப்பினும் பாரம்பரிய முறைப்படி நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் 'தேதிப்படி திருவிழா' என நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி, அதைதொடர்ந்து மறையுரை நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்றனி ஆல்காந்தர், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • திருவிழா வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது.
    • தினந்தோறும் காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும் திருவிழாவுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மலை மாதா ஆலய திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மலை மாதா ஆலய திருவிழா தொடங்கியது.

    இதில் காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. திருவிழா வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு, காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது.

    இதில் இன்று (திங்கள்) முதியவர்கள், நோயாளிகளுக்காக சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதேபோல நாளை கொங்கனியிலும், 14-ந் தேதி (புதன்கிழமை) மராத்தியிலும், 15-ந் தேதி (வியாழன்) தமிழிலும், 16-ந் தேதி (வெள்ளி) மலையாளத்திலும், 17-ல் குஜராத்தியிலும் திருவிழா திருப்பலி நடக்கிறது. 18-ந் தேதி அதிகாலை 5.30 மணி முதல் திருப்பலி நடக்கிறது.

    மலை மாதா ஆலய திருவிழாவில் தமிழர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக பெஸ்ட் சார்பில் 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் பாந்திரா ரெயில் நிலையம், மாகிம் சர்ச், மலை மாதா ஆலயம் இடையே இயக்கப்பட உள்ளன. மேலும் மலை மாதா ஆலய பகுதியில் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அசாம்பாவிதங்களை தடுக்க பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உள்பட 400 போலீசார் ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் சாதாரண உடைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேளாங்கண்ணியில் உலகப்புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திவ்ய நற்கருணை ஊர்வலம் நடைபெற்றது. இதில் திராளானோர் பங்கேற்றனர்.
    வேளாங்கண்ணியில் உலகப்புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதா கையில் ஏசு குழந்தையை ஏந்தியபடி காட்சி தருகிறார். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுதலுக்காவும், குறைகள் நிவர்த்தி அடைந்ததற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் வந்து செல்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். கடந்த 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதாகுளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்யநற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்று வருகிறது. .

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடி சூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாதாவிற்கு கிரீடம் அணியப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று மாதாகுளத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

    பின்னர் பூஜை மேடையில் இருந்து திவ்ய நற்கருணை பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கு உள்ள வாகனத்தின் மூலம் சிலுவை பாதை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் வைத்து மறையுறை, பக்தர்களுக்கு திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவிப்பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு தேரில் மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தை வைத்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், முடி சூட்டினார்.
    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இது ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த பேராலயம் கீழை நாடுகளின்"லூர்து" நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா" என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்கும். இந்த பேராலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது மேலும்சிறப்பு.

    மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த மாதம்(மே) 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு தேரில் மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தை வைத்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், முடி சூட்டினார். அதை தொடர்ந்து தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் உதவி பங்குதந்தைகள், அருட் சகோதரர்கள், சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    சேலம் செவ்வாய்ப்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    சேலம் செவ்வாய்ப்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணை பேராலய திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் திருப்பலி நடந்து வந்தது. முக்கிய நாளான நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய ஜெயராக்கினி அன்னை சொரூபம் வைக்கப்பட்டது.

    தேர்பவனியை சேலம் மறைமாவட்ட முதன்மை குரு அருளப்பன் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். தேவாலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, செவ்வாய்பேட்டையின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவாலய பங்கு தந்தை அழகுசெல்வன், உதவி பங்குதந்தை அருள்வழவன், துணைத்தலைவர் சகாயராஜ், செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் ஜேக்கப் மற்றும் விமல் ஆகியோர் செய்திருந்தனர்.
    சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், வேண்டுதல் சப்பரபவனியும், வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் ஆடம்பர சப்பர தேர்பவனி நடைபெற்றது.
    புள்ளம்பாடியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அன்னாள் ஆலய திருவிழா, கடந்த 17-ந் தேதி பங்குத்தந்தை சூசைமாணிக்கம், உதவி பங்குத்தந்தை அருள்தொன்போஸ்கோ ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அருட்தந்தையர்கள் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்று, நவநாள் சப்பரம் ஆலயத்தை சுற்றி வலம்வந்தது.

    கடந்த 24-ந் தேதி சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், வேண்டுதல் சப்பரபவனியும், நேற்று முன்தினம் வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் ஆடம்பர சப்பர தேர்பவனி நடைபெற்றது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித அன்னாள் சிலை தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. தேரினை மறைவட்ட முதன்மை குரு பீட்டர்ஆரோக்கியதாஸ் புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி தலைவர் ஆலிஸ் செல்வராணி ஜோசப் செல்வராஜ், செயல் அலுவலர் ஜவஹர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அருட்தந்தையர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவில் ஆலயத்தை வந்தடைந்தது.
    ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டி புதூரில் பழமையான புனித சலேத் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 137-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஊர்வலமும், திருப்பலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    21-ந்தேதி புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருவிழாவில் புதுநன்மை திருப்பலி மறவபட்டி பங்குத்தந்தை லியோ ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் மின்ரத பவனி நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று நடந்த பகல் திருவிழாவில் புனித சலேத் மாதாவின் பெரிய சப்பர பவனி நடைபெற்றது. முடிவில் ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பெரிய தனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    ×