என் மலர்

  கிறித்தவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
  வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை தேர்பவனி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முன்னதாக மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடந்தது.

  தேர் தாணிக்கோட்டகம் கடைத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடந்தது. இதில் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் உள்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
  விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை எட்வர்ட் ராயன், பாளை.புனித சவேரியார் கல்லூரி கலைமனைகளின் பொருளாளர் ராய்ஸ் அடிகளார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

  இதில் இறைமக்கள், புனித அந்தோணியார் நற்பணி மன்றம், இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு திருப்பலி நடைபெறும். 5-ந் தேதி தியானம், திருப்பலியை தொடர்ந்து நற்கருணை பவனி நடக்கிறது. 6-ந் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் தேர்பவனி, 7-ந் தேதி காலை 9 மணிக்கு கொடி இறக்கம், மதியம் அசன விருந்து நடைபெறுகிறது.

  விழா ஏற்பாடுகளை புனித அந்தோணியார் நற்பணி மன்றம், ஆலய நிர்வாகிகள், ஜெயராஜ் சுவாமிதாஸ், அந்தோணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் ஏசு ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி தேசிய அளவிலான நன்றி விழா 5-ந்தேதி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடக்கிறது.
  குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றி விழா கொண்டாட்டம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையை அடுத்து அதாவது நாகர்கோவிலில் இருந்து 4 வழிச்சாலையில் காவல்கிணறு செல்லும் பாதையில் காற்றாடிமலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் நடைபெறுகிறது.

  விழாவின் தொடக்கமாக பிற்பகல் 2.30 மணி அளவில் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இலங்கைத் தமிழர்கள் வரவேற்பு நடனம் ஆடுகிறார்கள். தோவாளை டி.எம்.ஐ. கல்லூரி, நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, அனந்தநாடார் குடியிருப்பு ஜெரோம் கல்லூரி, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி, கருங்கல் புனித அல்போன்சா கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த நாட்டியமாடுகிறார்கள்.

  பின்னர் மாலை 4 மணி அளவில் விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 5 மணியளவில் ஆடம்பரத் திருப்பலி நடக்கிறது. போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் கர்தினால்கள் ஆஸ்வால்டு கிராசியாஸ் (அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவர்), ஜார்ஜ் ஆலஞ்சேரி (சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர்), தமிழக ஆயர் பேரவைத் தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கோவா- டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்றாவோ, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரக பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி, புதுவை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், போபால் பேராயர் துரைராஜ், நாக்பூர் பேராயர் எலியாஸ் உள்பட 50 ஆயர்கள் மற்றும் பேராயர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

  இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஞானதிரவியம், விஜய்வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வக்கீல் மகேஷ், குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பாலபிரஜாபதி அடிகளார், குமரி மாவட்ட திருவருட்பேரவை நிர்வாகிகள், சி.எஸ்.ஐ. திருச்சபை பேராயர்கள், பல்சமய பிரதிநிதிகள், குமரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

  விழா மேடை மற்றும் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் விழா பந்தல் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மழை பெய்தாலும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இரும்பு தூண்கள் தார்ப்பாய்களால் ஆன மேற்கூரைகளுடன்கூடிய பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

  பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, பணகுடி, தூத்துக்குடி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் விழா ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரகப் பரிபாலகரும், மதுரை பேராயருமான அந்தோணி பாப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் ஜாண்குழந்தை மற்றும் கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களின் அருட்பணியாளர்கள், பொதுநிலையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேளாங்கண்ணியில் உலகப்புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திவ்ய நற்கருணை ஊர்வலம் நடைபெற்றது. இதில் திராளானோர் பங்கேற்றனர்.
  வேளாங்கண்ணியில் உலகப்புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதா கையில் ஏசு குழந்தையை ஏந்தியபடி காட்சி தருகிறார். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுதலுக்காவும், குறைகள் நிவர்த்தி அடைந்ததற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் வந்து செல்கின்றனர்.

  பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். கடந்த 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதாகுளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்யநற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்று வருகிறது. .

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடி சூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாதாவிற்கு கிரீடம் அணியப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று மாதாகுளத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

  பின்னர் பூஜை மேடையில் இருந்து திவ்ய நற்கருணை பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கு உள்ள வாகனத்தின் மூலம் சிலுவை பாதை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் வைத்து மறையுறை, பக்தர்களுக்கு திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவிப்பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது.

  சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  சேலம் மறை மாவட்ட முதன்மை குரு அருளப்பன் கொடியேற்றி வைத்தார். முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் பங்குத்தந்தை மைக்கேல் ராஜ்செல்வம், உதவி பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ, அன்பு இல்ல இயக்குனர் கஸ்மீர் மற்றும் சகாயராஜ், மைக்கேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

  ஆலய திருவிழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது.
  பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் பாளை. மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து மாலை ஆராதனையை நடத்தினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெப மாலையும், நவநாள் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

  12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு புனித அந்தோணியார் திருவுருவ பவனி நடக்கிறது. திருவிழா நிறைவு நாளன்று காலை 6.30 மணிக்கு பாளை. மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்துகொண்டு ஆராதனையையும், திருவிழா கூட்டு திருப்பலியையும் நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜேம்ஸ், அருட் சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு தேரில் மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தை வைத்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், முடி சூட்டினார்.
  வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இது ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த பேராலயம் கீழை நாடுகளின்"லூர்து" நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா" என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்கும். இந்த பேராலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது மேலும்சிறப்பு.

  மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த மாதம்(மே) 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.

  இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு தேரில் மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தை வைத்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், முடி சூட்டினார். அதை தொடர்ந்து தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் உதவி பங்குதந்தைகள், அருட் சகோதரர்கள், சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புனித இருதய ஆண்டவர் ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த களத்திடல்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த திருஇருதயஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப்பெரு விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய திருத்தேர் பவனி நடை பெற்றது. இதனை முன்னிட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இருதயஆண்டவர், மிக்கேல் அதிதூதர், தேவமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலியை செய்துவைத்து சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார்.

  ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரபட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் தென்னிலைப்பட்டி அருட்தந்தை கிறிஸ்துராஜா கலந்துகொண்டு கொடியிறக்கம் மற்றும் திருப்பலி நிறைவேற்றி வைத்தார்.
  விராலிமலை தாலுகா, மேலபச்சகுடி ஊராட்சிக்குட்பட்ட குமரபட்டியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்பவனி விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 27-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை முன்னிட்டு அன்று மாலை 6.30 மணியளவில் ஆலயத்தில் பாத்திமாநகர் பங்குத்தந்தை கபிரியேல் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி ஆலயத்தின் முன்பு கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஆலயத்தில் பல்வேறு பங்கு தந்தையர்கள் கலந்துகொண்டு திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.

  இதையடுத்து இரவு 7 மணியளவில் மலர்மாலைகள், தோரணங்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் மற்றும் மாதா சொரூபங்கள் பொருத்தப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. தேர் மேளதாளம், அதிர்வேட்டு, வாணவேடிக்கை முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணியளவில் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  விழாவின் தொடர்ச்சியாக நேற்று மாலை ஆலயத்தில் தென்னிலைப்பட்டி அருட்தந்தை கிறிஸ்துராஜா கலந்துகொண்டு கொடியிறக்கம் மற்றும் திருப்பலி நிறைவேற்றி வைத்தார். விழாவில் குமரபட்டி, பாத்திமாநகர், மேலபச்சகுடி, செவந்தியானிபட்டி, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, புனித செபஸ்தியார் அன்பியம் மற்றும் குமரபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் செவ்வாய்ப்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
  சேலம் செவ்வாய்ப்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணை பேராலய திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் திருப்பலி நடந்து வந்தது. முக்கிய நாளான நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய ஜெயராக்கினி அன்னை சொரூபம் வைக்கப்பட்டது.

  தேர்பவனியை சேலம் மறைமாவட்ட முதன்மை குரு அருளப்பன் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். தேவாலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, செவ்வாய்பேட்டையின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

  இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவாலய பங்கு தந்தை அழகுசெல்வன், உதவி பங்குதந்தை அருள்வழவன், துணைத்தலைவர் சகாயராஜ், செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் ஜேக்கப் மற்றும் விமல் ஆகியோர் செய்திருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print