என் மலர்
சினிமா செய்திகள்
- கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
- இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ட்யூட் படத்தின் மூன்றாம் சிங்கிளான 'சிங்காரி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
- புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருவரின் காம்போவும், இவர்கள் நடித்த காதல் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இதனிடையே, இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்களும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதற்கு இருதரப்பில் இருந்து பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து, இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளியாகியது. மேலும், இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற திருமண நிச்சயதார்த்ததில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களின் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
- புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது.
இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.
இந்நிலையில் 'பீக்கி பிளைண்டர்ஸ்' மேலும் இரண்டு புதிய சீசன்களுடன் நெட்ஃபிக்ஸ் தளத்தில் மீண்டும் வரவுள்ளது. இந்த அறிவிப்பை அத்தொடரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ஒவ்வொரு புதிய சீசனிலும் ஆறு எபிசோடுகள் இடம்பெறும். ஒவ்வொரு எபிசோடும் சுமார் 60 நிமிடங்கள் ஓடும்.
உலகளவில் நெட்ஃபிக்ஸ் தளத்திலும், இங்கிலாந்தில் மட்டும் பிபிசி தொலைக்காட்சியிலும் இந்தத் தொடர் வெளியாகும்.
புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
'பீக்கி பிளைண்டர்ஸ்' ஃபிரான்சைஸின் ஒரு பகுதியாக, 'தி இம்மோர்டல் மேன்' (The Immortal Man) என்ற புதிய திரைப்படமும் 2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதிலும் கில்லியன் மர்ஃபி, ரெபேக்கா பெர்குசன், டிம் ரோத், சோஃபி ரண்டில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'டீசல்' படத்தின் டீசர் வெளியானது.
டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், டீசல் படத்தின் "ஆருயிரே" பாடல் வெளியானது.
பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் சைபர் குற்றங்கள் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
என் மகள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். சில வீடியோ கேம்களை நீங்கள் எதிர் திசையில் யாருடனும் விளையாடலாம். நீங்கள் தெரியாத ஒருவருடன் விளையாடுகிறீர்கள்.
நீங்கள் விளையாடும்போது, சில சமயங்களில் அங்கிருந்து ஒரு செய்தி வரும்... அப்படி என் மகளுக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
"நீங்கள் ஆணா பெண்ணா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு என் மகள் பெண் என்று பதிலளித்தாள். பின்னர் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், உங்களுடைய நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்ப முடியுமா? என்று இருந்தது. இதனால் பயந்துபோன என் மகள், எல்லாவற்றையும் அணைத்துவிட்டு என் மனைவியிடம் சென்று நடந்தவை குறித்து கூறினார்.
இப்படித்தான் விஷயங்கள் தொடங்குகின்றன. இதுவும் சைபர் குற்றத்தின் ஒரு பகுதி... நமது மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒவ்வொரு வாரமும் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில், சைபர் வகுப்பு (Cyber Period) என்று ஒரு வகுப்பு இருக்க வேண்டும். அங்கு குழந்தைகளுக்கு இது குறித்து விளக்க வேண்டும் என்று நான் முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் குற்றம் தெருக் குற்றங்களை விடப் பெரிதாகி வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தக் குற்றத்தைத் தடுப்பது மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 30 நாடுகளில் இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
- ‘காந்தாரா சாப்டர்-1’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' வெளியாகி உள்ளது. 30 நாடுகளில் இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வரும் நாட்களில் 'காந்தாரா சாப்டர்-1' வசூலை வாரிக்குவிக்கும் என்றும் முதல் பாகத்தை விட இப்படம் வசூல் சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது.
- கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
- மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
இந்திய சினிமாவின் திரை பிரபலங்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை படங்களின் வசூலை தாண்டி, சமூக வலைதளங்களில் அவர்களை எத்தனை பேர் தேடினார்கள்? என்ற விவரத்தை வைத்தும் மதிப்பிடப்படுகிறார்கள்.
அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதில் ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் என நாட்டின் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களில் தொடருகிறார்கள்.
இந்த பட்டியலில் சமந்தா 13-ம் இடத்திலும், தமன்னா 16-ம் இடத்திலும், நயன்தாரா 18-வது இடத்திலும் இருக்கின்றனர். பிரபாஸ் 29-ம் இடமும், தனுஷ் 30-ம் இடமும் பிடித்து இருக்கின்றனர். மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
- பைசன் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
- மாரி செல்வராஜ் வரிகளை எழுத சத்யன் இப்பாடலை பாடியுள்ளார்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி 2-வது பாடலான றெக்க றெக்க மற்றும் 3 ஆவது பாடலான சீனிக்கல்லு ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், 'பைசன்' படத்தின் 'தென்நாடு' பாடல் வெளியானது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் மாரி செல்வராஜ் வரிகளை எழுத சத்யன் இப்பாடலை பாடியுள்ளார்.
- அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
- இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்ததுள்ளார்.
முன்னதாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டாக மாறியது.
- இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.
சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு திரைப்படம் அறை எண் 305-ல் கடவுள். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், எம். எஸ்.பாஸ்கர், சந்தானம், சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் ஏற்று நடித்த ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டாக மாறியது.
படத்தின் தொடக்கத்தில் சிறு போர்ஷனில் வந்திருந்தாலும் ஜாவா படித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய மென்பொருள் வல்லுநராக மாறியிருப்பார். 'கலக்குப்பா கலக்கு' என்று சந்தானம் கூறும் டயலாக்கும் பேமஸானது. இதனால் நடிகர் சாம்ஸ் ரசிகர்கள் மனதில் ஜாவா சுந்தரேசன் என்றே பதிந்து விட்டார்.
இந்த நிலையில், இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.
அவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்து வாழ்த்தியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் சாம்ஸ் அவர் திரைவாழ்வில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்த ஜாவா சுந்தரேசன் என்ற பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டது கவனம் பெற்றுள்ளது. செல்லும் இடமெல்லாம் தன்னை ஜாவா சுந்தரேசன் என்றே அழைப்பதால் அவர் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
- படத்தின் நாயகனாக வரும் ரிஷப் ஷெட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
- நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், தனது அழகால் மட்டுமில்லாமல் நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா சாப்டர் 1.
காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது தந்தை ஒரே இடத்திலேயே ஏன் மறைந்து போகிறார்கள் என்கிற கேள்விகளுக்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.
அதில், பாங்ரா என்ற நாட்டை ஒரு ராஜா ஆட்சி செய்து வருகிறார். காந்தாரா மலைப்பகுதிகளில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டம் என்று அழைக்கப்படும் பகுதியில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈஸ்வர பூந்தோட்டத்தை கைப்பற்ற நினைக்கும் மன்னன் படையுடன் சென்று காந்தார மக்களை அழிக்க பார்க்கிறார். ஆனால் தெய்வத்தின் உதவியுடன் மக்கள் மன்னரின் படைகளை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெறுகிறார்கள்.
இந்த போரில் உயிர்பிழைத்த ராஜாவின் வாரிசுகள் பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் காந்தராவை கைப்பற்ற நினைக்கிறார்கள். ராஜா வாரிசுகளின் ஆசை நிறைவேறியதா? இல்லை அதை கதாநாயகன் ரிஷப் செட்டி தடுத்து நிறுத்தினாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்:
படத்தின் நாயகனாக வரும் ரிஷப் ஷெட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல நடிகராகவும் இப்படத்தில் அவர் மிளிர்கிறார். தெய்வ சக்தி வந்தவுடன் ரிஷப் ஷெட்டி ஆடும் ஆட்டம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், தனது அழகால் மட்டுமில்லாமல் நடிப்பாலும் நம்மை கவர்கிறார். வழக்கமான 'கதாநாயகி' பாத்திரம் போல் அல்லாமல் அழுத்தமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மன்னரின் அப்பாவாக வரும் ஜெயராம் உட்பட படத்தில் நடித்துள்ள பிற நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்கம்:
காந்தாரா படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்த ரிஷப் ஷெட்டி, வரலாற்று கதை அம்சம் கொண்ட காந்தாரா சாப்டர் 1 படத்தில் மேலும் மெனெக்கெட்டு உழைத்துள்ளது திரையில் தெரிகிறது. குறிப்பாக அருமையான VFX காட்சிகள், சிறப்பான மேக்கிங் படத்திற்கு வலுசேர்க்கின்றன. அதே சமயம் காந்தாரா படத்தில் இருந்த சுவாரசியம் காந்தாரா சாப்டர் 1 படத்தில் இல்லை. கதை மிகவும் மெதுவாக நகர்வது ரசிகர்களை சோர்வடைய செய்கிறது. மேக்கிங்கில் கவன செலுத்திய ரிஷப் ஷெட்டி திரைக்கதையில் சற்று சறுக்கி விட்டார்.
இசை:
அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அதைவிட அவரின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு:
அரவிந்த் கஷ்யப்பின் ஒளிப்பதிவு நம்மை படத்தின் வரலாற்று காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது.
தயாரிப்பு:
ஹோம்பாலே பிலிம்ஸ்
ரேட்டிங்:
3/5
- நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
- இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
இந்த நிலையில், மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் PATRIOT படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






