என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • துப்பாக்கி, ஜில்லா படத்தில் விஜயுடன் இவர் நடித்துள்ளார்.
    • ஆவடி நகைக்கடை திறப்பு விழாவில் காஜல் அகல்வால் கலந்துகொண்டார்.

    தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த தெலுங்கு படமான மகதீரா இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தது.

    தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாரி போன்ற படங்களில் நடித்து இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். துப்பாக்கி, ஜில்லா படத்தில் விஜயுடன் இவர் நடித்துள்ளார்.

    திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர், தமிழில் கடைசியாக கமல் நடித்த இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தில் இவரது போர்ஷன்கள் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், ஆவடி நகைக்கடை திறப்பு விழாவில் காஜல் அகல்வால் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் விஜயின் கரூர் துயர சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பாக கருத்து கூற மாட்டேன். அது வேறு களம்.

    விஜய் குறித்து பேசிய அவர், விஜயுடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் நடிகர் விஜயின் மிகப்பெரிய ரசிகை.

    தமிழ் படத்தில் மிக விரைவில் நடிப்பேன் என அவர் கூறினார்.

    • மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.
    • மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.

    கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

    மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.

    'லால்-சலாம்' என்ற தலைப்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மோகன்லாலுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.

    விழாவில் பேசிய பினராயி விஜயன், "மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம். இது ஒவ்வொரு மலையாளியையும் பெருமைப்பட வைக்கிறது. இந்த விருது மலையாள சினிமாவின் கலை மதிப்பை தேசிய அளவில் நிலைநிறுத்தியுள்ளது" என்று கூறினார்.

    பாராட்டு விழாவில் ஓவியர் ஏ. ராமச்சந்திரன் வரைந்த ஓவியம் மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

    அருள்நிதி நடித்துள்ள ராம்போ திரைப்படம் வரும் 10ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருள் நிதி, வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இவர் நடித்து சமீபத்தில் வெளியான டிமான்டி காலனி 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், அருள்நிதி அடுத்ததாக ராம்போ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கொம்பன் படத்தினை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார்.

    அருள்நிதிக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் 10ம் தேதி சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

    இந்நிலையில், ராம்போ படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது.

    • இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
    • திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், படத்தின் மூன்றாம் சிங்கிளான 'சிங்காரி' பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    • இந்த படத்தை சாரங் தியாகு இயக்க, சித்து குமார் இசையமைக்கிறார்.
    • கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து `ஆரோமலே' படத்தில் நடிக்கின்றனர்.


    கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து `ஆரோமலே' படத்தில் நடிக்கின்றனர். முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்தார்.

    இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை சாரங் தியாகு இயக்க, சித்து குமார் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்நிலையில் இப்படத்தின் 'எப்படி வந்தாயோ' பாடல் வெளியானது. சித்து குமார் இசையில் சின்மயி, ஆனந்த் அரவிந்த் அக்ஷன் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

    கும்கி படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில், பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் ஹீரோ மதியின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

    BRO CODE பயன்படுத்த கூடாது என டெல்லி நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

    ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு BRO CODE என்ற பெயரை பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    BRO CODE என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என டெல்லி நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

    டெல்லி நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு எதிராக ரவி மோகன் ஸ்டுடியோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, BRO CODE என்ற சினிமா தலைப்பு எந்த விதத்திலும் மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் வணிக சின்ன உரிமையை மீறவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரவிமோகன் ஸ்டூடியோஸ் BRO CODE என்ற பெயரை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது என டெல்லி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தி கேர்ள்ஃபிரெண்ட் படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார்.
    • பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனா முன்னணி இடத்தில் இருப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள்ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது.

    இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்நிலையில், The Girlfriend திரைப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

    கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண்ணை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் மரியா.

    கன்னியாஸ்திரியான நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு செல்கிறார். அங்கு சில நாட்கள் தங்கும் அவர் கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது குடும்பம் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவரை வீட்டைவிட்டு துரத்தி விடுகிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தை வெறுக்கும் அவர், அதற்கு எதிரான சாத்தானை வழிபடும் குழுவுடன் பழக்கம் ஏற்படுகிறது.

    இறுதியில் சாய்ஶ்ரீ பிரபாகரன் சாத்தானை வழிபட்டாரா? மீண்டும் கன்னியாஸ்திரியாக மாறினாரா? அவரது வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன், சர்ச்சையான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்து இருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத இவரது நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது.

    சாத்தான் வழிபாட்டு குழுவின் தலைவராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் போதும் என்ற அளவிற்கு பேசி இருப்பது பலவினம். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சிது குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண்ணை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி கே.சுதன். சர்ச்சையான விசயத்தை தைரியமாக சொல்லி இருக்கிறார். முதல் பாதி திரைக்கதை தெளிவாகவும், இரண்டாம் பாதி தெளிவில்லாமல் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். அனைத்து தர மக்களுக்கும் பிடிப்பது சந்தேகம்.

    இசை

    இசையமைப்பாளர்கள் அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் ஆகியோரது இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம்.

    ஔிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் மணிஷங்கர்.ஜி, அதிக வெளிச்சம் இல்லாமல் படமாக்கி இருக்கிறார்.

    • ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார்.
    • தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

    சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

    ஆனால், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது இணையத்தில் பேசுபொருளானது. பலரும் பிரியங்கா நடனம் ஆடி இருக்க கூடாது என்று அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். அதே சமயம், பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டனர்.

    இந்நிலையில், ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது பேசிய மகள் இந்திரஜா சங்கர், "அப்பா இல்லாம முதல் பிரஸ் மீட் இங்க இருக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ரொம்ப பெரிய பெரிய நன்றி.. அவர் விட்ட பாதையில் இருந்து தொடர்வோம்... அப்பாவிற்காக அன்பை வெளிப்படுத்திய அம்மாவின் நடனத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான் விமர்சித்தார்கள்" என்று தெரிவித்தார்.

    மறைந்த நடிகர் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியது இணையத்தில் பேசுபொருளான நிலையில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் விளக்கம் அளித்துள்ளார். 

    • திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற கோரி இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின.
    • கந்தர் மலை அல்ல, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்துள்ள படம் கந்தன் மலை.

    அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மபோராளி' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், ட்யூட் படத்தின் மூன்றாம் சிங்கிளான 'சிங்காரி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    ×