என் மலர்
சினிமா செய்திகள்

மரியா- திரைவிமர்சனம்
கன்னியாஸ்திரியான நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு செல்கிறார். அங்கு சில நாட்கள் தங்கும் அவர் கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது குடும்பம் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவரை வீட்டைவிட்டு துரத்தி விடுகிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தை வெறுக்கும் அவர், அதற்கு எதிரான சாத்தானை வழிபடும் குழுவுடன் பழக்கம் ஏற்படுகிறது.
இறுதியில் சாய்ஶ்ரீ பிரபாகரன் சாத்தானை வழிபட்டாரா? மீண்டும் கன்னியாஸ்திரியாக மாறினாரா? அவரது வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன், சர்ச்சையான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்து இருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத இவரது நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது.
சாத்தான் வழிபாட்டு குழுவின் தலைவராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் போதும் என்ற அளவிற்கு பேசி இருப்பது பலவினம். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சிது குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண்ணை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி கே.சுதன். சர்ச்சையான விசயத்தை தைரியமாக சொல்லி இருக்கிறார். முதல் பாதி திரைக்கதை தெளிவாகவும், இரண்டாம் பாதி தெளிவில்லாமல் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். அனைத்து தர மக்களுக்கும் பிடிப்பது சந்தேகம்.
இசை
இசையமைப்பாளர்கள் அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் ஆகியோரது இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஔிப்பதிவு
ஒளிப்பதிவாளர் மணிஷங்கர்.ஜி, அதிக வெளிச்சம் இல்லாமல் படமாக்கி இருக்கிறார்.






