அம்மாவின் நடனத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான் விமர்சித்தார்கள் - ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.
அம்மாவின் நடனத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான் விமர்சித்தார்கள் - ரோபோ சங்கர் மகள் இந்திரஜா
Published on

சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

ஆனால், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது இணையத்தில் பேசுபொருளானது. பலரும் பிரியங்கா நடனம் ஆடி இருக்க கூடாது என்று அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். அதே சமயம், பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டனர்.

இந்நிலையில், ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய மகள் இந்திரஜா சங்கர், "அப்பா இல்லாம முதல் பிரஸ் மீட் இங்க இருக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ரொம்ப பெரிய பெரிய நன்றி.. அவர் விட்ட பாதையில் இருந்து தொடர்வோம்... அப்பாவிற்காக அன்பை வெளிப்படுத்திய அம்மாவின் நடனத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான் விமர்சித்தார்கள்" என்று தெரிவித்தார்.

மறைந்த நடிகர் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியது இணையத்தில் பேசுபொருளான நிலையில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் விளக்கம் அளித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com