ஆரோமலே படத்தின் 'எப்படி வந்தாயோ' பாடல் வெளியானது!

இந்த படத்தை சாரங் தியாகு இயக்க, சித்து குமார் இசையமைக்கிறார்.கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து `ஆரோமலே' படத்தில் நடிக்கின்றனர்.
ஆரோமலே படத்தின் 'எப்படி வந்தாயோ' பாடல் வெளியானது!
Published on

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து `ஆரோமலே' படத்தில் நடிக்கின்றனர். முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்தார்.

இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை சாரங் தியாகு இயக்க, சித்து குமார் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் 'எப்படி வந்தாயோ' பாடல் வெளியானது. சித்து குமார் இசையில் சின்மயி, ஆனந்த் அரவிந்த் அக்ஷன் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com