என் மலர்
சினிமா செய்திகள்
- முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர்.
- இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.
கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இப்படம் கடந்த வாரம் வெளியாக இருந்த நிலையில், சில சூழ்நிலைக்காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாலையா நடித்துள்ள 'அகண்டா 2' படம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே டிசம்பர் 5-ந்தேதி பிரபாஸ் நடித்துள்ள 'ராஜா தி சாப்' திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் ஒரே நாளில் பான் இந்திய படமாக பிரபாஸ் மற்றும் பாலையாவின் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். 'இட்லி கடை' நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் வெளியான முதல் நாளிலே நல்ல வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் மேலும் வசூல் குவிக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, 'இட்லி கடை' திரைப்படம் எப்போது ஓ.டி.டி.யில் வெளியாகும் என ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில், இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, 'இட்லி கடை' படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் தளம் பெற்றுள்ளதாகவும், நவம்பர் மாதம் இப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
- இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார்.
- 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'மூக்குத்தி அம்மன்' முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இப்பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் அம்மனாக நடித்து இருக்கும் நயன்தாரா சோகத்தில் அமர்ந்து இருப்பது போன்று உள்ளது. ரசிகர்கள் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதனிடையே, சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
- டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் மீது வீட்டுப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
- இந்த விவகாரம் தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி 'தேவி 2', 'வீரமே வாகை சூடும்', அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பல தெலுங்கு படங்களில் நடித்து அவர் புகழ்பெற்றார்.
இந்நிலையில், டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் மீது அவரது வீட்டுப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ஹயாதி மற்றும் அவரது கணவர் தன்னை துன்புறுத்தியதாகவும், நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும், சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை டிம்பிள் ஹயாதி, 2023-ல் ஐபிஎஸ் அதிகாரியின் கார் மீது செருப்பு வீசிய சர்ச்சையிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
- உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட் உள்ளார்.
இந்தியப் பணக்கார நடிகர்கள் பட்டியல் முதலிடம் பிடித்து வந்த ஷாருக்கான் முதல்முறையாக உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
The Hurun India வெளியிட்டுள்ள பட்டியலில் 1.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,490 கோடி) சொத்து மதிப்புடன் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்
திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டவை ஷாருக் கானுக்கு சொந்தமானவை ஆகும்.
உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட்' 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். ஜெர்ரி செய்ன்ஃபெல்ட் 1.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
பிரபல அமெரிக்க பாடகி செலினா கோமஸ் 720 மில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.
டாப் 5 இந்தியப் பணக்காரர்கள் பட்டியல்:
1. ஷாருக் கான் மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.12,490 கோடி
2. ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.7,790 கோடி
3. ஹிருத்திக் ரோஷன் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,160 கோடி
4. கரண் ஜோஹர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,880 கோடி
5. அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி
- அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
- இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
இந்நிலையில், இந்த கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணியில் நரேன் கார்த்திகேயன், அஜித் குமார் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோர் உள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை அஜித்குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை திரைப்படத்தை இயக்கினார்.
பிறகு, தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
இப்படம் வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேரே இஷ்க் மே படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நாயகன் தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த இட்லி கடை ஊரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால், தனுஷுக்கு கிராமத்தில் வாழ விருப்பம் இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்கிறார்.
வெளிநாட்டில் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் சத்யராஜ் மகள் ஷாலினி பாண்டேவுக்கும் தனுஷுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தனுஷின் தந்தை ராஜ்கிரனும் தாய் கீதா கைலாசமும் இறக்கிறார்கள். கிராமத்திற்கு திரும்பி வரும் தனுஷ், வெளிநாட்டிற்கு செல்ல மறுக்கிறார். மேலும் ராஜ்கிரண் நடத்தி வந்த இட்லி கடையை நடத்த முடிவு செய்கிறார்.
இவரது இந்த முடிவால், தனுஷ், ஷாலினி பாண்டே திருமணம் நின்று விடுகிறது. இதனால் கோபமடையும் ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய், கிராமத்திற்கு வந்து தனுஷுடன் சண்டை போடுகிறார். அதே சமயம் இட்லி கடைக்கு எதிரே பரோட்டா கடை நடத்தி வரும் சமுத்திரக்கனி தொழில் போட்டியால் தனுஷை ஒழிக்க நினைக்கிறார்.
இறுதியில் தனுஷ் இட்லி கடையை தொடர்ந்து நடத்தினாரா? அருண் விஜய் தனுஷை என்ன செய்தார்? சமுத்திரக்கனியின் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பா, அம்மாவை நினைத்து வருந்தும் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார். இட்லி கடை எப்படியாவது நடத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், தனுஷுக்கு உறுதுணையாக படம் முழுக்க பயணித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். இவரது வெகுளித்தனமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அருண் விஜய் மிகவும் கோபக்காரனாகவும், ஈகோ உள்ளவராகவும் கம்பீரத்துடன் நடித்து இருக்கிறார்.
ராஜ்கிரண், சத்யராஜ், கீதா கைலாசம், இளவரசு ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபன் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சர்ப்ரைஸ் ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாலினி பாண்டே அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
இயக்கம்
நடிப்பு மட்டுமில்லாமல் படம் இயக்குவதிலும் தான் சிறந்தவன் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் தனுஷ். உண்மை கதையை கொஞ்சம் சினிமா ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் அம்மா, அப்பா பற்றி பேசும் காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக அமைந்து இருக்கிறது. வசனங்கள் மற்றும் கன்னுக்குட்டி காட்சிகள் சிறப்பு.
இசை
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்து இருக்கிறது. பின்னணி இசையில் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை மண்மணம் மாறாமல் இருக்கிறது.
தயாரிப்பு
ஆகாஷ் பாஸ்கரன், தனுஷ்
- ஜீவாவின் 45 ஆவது படத்தை 'Falimy' படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார்.
- ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார்.
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது ப்ளாக் திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இந்நிலையில், ஜீவாவின் 45 ஆவது படத்தை 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு 'தலைவர் தம்பி தலைமையில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- திருமணம் தொடர்பான திட்டங்கள் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஹாலிவுட் சினிமாவில் டாம் குரூஸ், நடிகை அனா டி அர்மாஸுடன் காதல் என சில நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக இருவரும் எதுவும் கூறாத நிலையில், இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஜோடி இன்னும் திருமண நிச்சயதார்த்தம் செய்யவில்லை. இருப்பினும் திருமணம் தொடர்பான திட்டங்கள் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், டாம்- அனா டி அர்மாஸ் திருமணம் விண்வெளியில் நடைபெற உள்ளது. இதனால் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் முதல் ஜோடி இவர்கள் தான் என்கின்றனர்.
63 வயதான டாம் குரூஸ் ஏற்கனவே மூன்று திருமணங்களை செய்து உள்ள நிலையில், தற்போது 37 வயதான அனா டி அர்மாஸை நான்காவதாக திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது.
- இந்த படத்தை மணி ரத்னம் இயக்கி உள்ளார்.
கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணி ரத்னம் இயக்கினார். படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ்நாட்டில் 214 நாட்கள் ஓடியது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'நாயகன்' திரைப்படத்தை வரும் நவம்பர் 6-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.
- பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.
இதனை தொடர்ந்து நடிகர் மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பதிவில், "சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் என் வாழ்க்கையில் மிகவும் விரும்பியதைச் செய்யத் திரும்பியுள்ளேன். கேமரா அழைக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு MMMN என்று தெரிவித்துள்ள படக்குழு டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, மகேஷ் நாராயணன் ஆகியோரின் பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தைக் கொண்டு படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மம்மூட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.






