'அகண்டா 2' ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு

முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
'அகண்டா 2' ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.

கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இப்படம் கடந்த வாரம் வெளியாக இருந்த நிலையில், சில சூழ்நிலைக்காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பாலையா நடித்துள்ள 'அகண்டா 2' படம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 5-ந்தேதி பிரபாஸ் நடித்துள்ள 'ராஜா தி சாப்' திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் ஒரே நாளில் பான் இந்திய படமாக பிரபாஸ் மற்றும் பாலையாவின் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com