என் மலர்
சினிமா செய்திகள்
- 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.
- ‘சூரரைப் போற்று’ படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.
டெல்லியில் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெற்றார்.
'வாத்தி' படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு 'சூரரைப் போற்று' படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பரிசு ஒன்றை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. இரண்டாவது முறையாக தேசிய விருதுகளைப் பெற்றதற்காக ஏ.ஆர்.ரகுமான் சார் இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்குப் பரிசளித்தார்.
மிக்க நன்றி சார், இது நிறைய அர்த்தம் தருகிறது. லெஜெண்ட் பயன்படுத்திய பியானோ. இதைவிட சிறந்த பரிசு என்னவென்று நான் கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.
- உலக முழுவதும் நாளை இப்படம் வெளியாக உள்ளது.
- பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது.
உலக முழுவதும் நாளை இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் 'ரெபெல்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
முன்னதாக, சென்னையில் நேற்று நடைபெற இருந்த 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்தது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
- சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்தனர்.
சோனி டிவியில் ஸ்ரீமத் ராமாயணம் இந்தி தொடரில் நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் சர்மா (10 வயது) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் சன் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்துள்ளார். சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறுவயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் உள்ள வீட்டில் வீர் சர்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த நேரத்தில், தந்தையான ஜிதேந்திர சர்மா பஜனை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார், தாயார் ரீட்டா சர்மா வேலை விஷயமாக மும்பையில் இருந்தார்.
தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வீர் மற்றும் அவரது சகோதரர் சௌரியா, புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி சுயநினைவை இழந்தனர்.
வீட்டின் அறையில் இருந்து புகை வந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்தனர்.
கோட்டா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆர்யன் படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.
- ஆர்யன் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி. எஸ். இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 'ஆர்யன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
- அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
- இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
இந்நிலையில், இந்த தொடரில் அஜித்குமார் LMP3 எனும் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை நரேன் கார்த்திகேயன் உடன் இணைந்து அஜித்குமார் அறிமுகம் செய்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை அஜித்குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவியை ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
- ‘கருப்பு’ படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
- ஏற்கனவே நடிகர் சூர்யா 2 டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா உடன் த்ரிஷா, நட்டி, சுவாஷிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். 'கருப்பு' படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'ழகரம்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் சூர்யா 2 டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
- 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், செப்டம்பர் மாதம் 'மதராஸி', 'பேட் கேர்ள்', 'காட்டி', 'காந்தி கண்ணாடி' உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இந்த நிலையில், அக்டோபர் மாத முதல் வாரத்தில் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
இட்லி கடை:
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை காண ரசிர்கள் ஆவலுடன் காத்து உள்ளனர்.
காந்தாரா சாப்டர் 1:
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. நாளை மறுநாள் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மரியா:
நடிகர் பாவெல் நவகீதன் நடிப்பில் , அறிமுக இயக்குனர் ஹரி கே சுதன் இயக்கியுள்ள படம் 'மரியா'. சாய்ஸ்ரீ பிரபாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சித்து குமரேசன், விக்னேஷ் ரவி மற்றும் சுதா புஷ்பா ஆகியோர் நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு சாம். சி. எஸ். இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
- இப்படம் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி. எஸ். இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 'ஆர்யன்' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பினை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5.06 மணிக்கு டீசர் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
- காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ‘காந்தாரா சாப்டர்1’ படக்குழு தெரிவித்துள்ளது.
- 30 நாடுகளில் ‘காந்தாரா சாப்டர் 1’ வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. நாளை மறுநாள் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற இருந்த 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்தது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக 'காந்தாரா சாப்டர்1' படக்குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளில் 'காந்தாரா சாப்டர் 1' வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
- மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
- மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.
கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா எடுக்கிறது.
'லால்-சலாம்' என்ற தலைப்பில் அக்டோபர் 4 ம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது என கேரள கலாச்சார விவகார அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார்.
மலையாள சினிமாவிற்கும் கேரள மக்களுக்கும் மோகன்லாலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.
இந்த விழாவில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.
மேலும் பாடகர்கள் கே ஜே யேசுதாஸ் மற்றும் கே எஸ் சித்ரா ஆகியோரின் வீடியோவும் நிகழ்வின் இடம்பெற உள்ளது. இந்த விழாவின் போது மோகன்லால் கேரள அரசால் முறையே கௌரவிக்கப்படுவார்.
- கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
- விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.
முழுமையான உண்மை, அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பின்னரே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக அவரது நண்பரும் நடிகருமான சஞ்சீவ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம்தான்" என விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.






