என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இப்படத்தின் போஸ்டரில் தெய்வீக சடங்குகள் மற்றும் ரத்தத்தில் நனைந்த வாள் இடம்பெற்றுள்ளன.

    சுதிகாளி சுதீரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் பிரசன்ன குமார் கோட்டா இயக்கியுள்ள இந்தப் படத்தை வஜ்ர வராஹி சினிமாஸ் சார்பில் சிவா செர்ரி மற்றும் ரவிகிரண் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

    "ஹெய்லெசோ" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், சுதீர் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படம் ஆகும்.

    படத் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை ஒரு பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

    கிராமிய வடிவமைப்பு மற்றும் புராணக் காட்சிகளுடன் கூடிய இந்த போஸ்டரில் தெய்வீக சடங்குகள் மற்றும் ரத்தத்தில் நனைந்த வாள் இடம்பெற்றுள்ளன.

    இந்த படத்தின் தலைப்பான "ஹெய்லெசோ" விவசாய சமூகங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பேச்சுவழக்கில் இருந்து எடுக்கப்பட்டது. இது படத்திற்கு ஒரு பூர்வீக சுவையை அளிக்கிறது.

    "கோர்ட்" படத்தில் நடித்த சிவாஜி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். நடாஷா சிங், நக்ஷா சரண் மற்றும் அக்ஷரா கவுடா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

    மேலும், மொட்டை ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு மற்றும் பெவரா துஹிதா சரண்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    படத்தில் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு உள்ளது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ளார். சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். "ஹெய்லெசோ" தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக திரைக்கு வருகிறது.

    மருதம் படம் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    அருவார் பிரைவெட் லிமிடட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில் விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் மருதம்.

    இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இசை மற்றும் டிரெயிலர் வெளியிடப்பட்டது.

    அப்போத, நடிகர் விதார்த் கூறியதாவது:-

    இந்தப்படத்தில் நடிக்க நான் முதல் காரணம் அன்பழகன் அண்ணன். அவர் தான் கஜேந்திரன் சாரை அறிமுகப்படுத்தினார். கதை சொன்ன போது இது உங்களுக்கு நடந்ததா எனக்கேட்டேன் என் நண்பருக்கு நடந்தது என்றார்.

    ஷூட்டிங்கில் அவரைச் சந்தித்தேன். இது இந்தியா முழுதும் விவசாயிகளுக்கு நடக்கிறது. இந்த விசயத்தை நீங்கள் கண்டிப்பாக நேரில் பார்த்திருப்பீர்கள்.

    இந்தப்படத்தில் நடித்தது மிகுந்த சந்தோசம். மாறன் இப்படத்தில் முக்கியமான ரோல் செய்துள்ளார்.

    ஜே பேபி படம் பார்த்து அவரிடம் நாமும் இணைந்து நடிக்க வேண்டும் எனச் சொன்னேன், இதிலும் காமெடி மட்டுமில்லாமல் கலங்க வைத்துவிடுவார். அருள் தாஸ் அண்ணா நல்ல ரோல் செய்துள்ளார். ரக்ஷ்னா ஒரு குழந்தைக்கு அம்மா.

    யாரை நடிக்க வைக்கலாம் என்றார், திடீரென வந்து ரக்ஷனா நடிக்க வைக்கலாம் என்றார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம் கதாப்பாத்திரம் தான் முக்கியம் எனும் அவரது கொள்கைக்கு என் நன்றிகள். குழந்தை நட்சத்திரம் இயக்குநரின் மகன் எங்கள் எல்லோரையும் விட நன்றாக செய்துள்ளான்.

    கஜேந்திரன் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். பட்ஜெட் போட்டு அவரே தயாரிப்பாளர் போல படத்தை எடுத்துள்ளார். என் படங்களில் தரமான படங்கள் லிஸ்டில் இப்படம் இருக்கும். வியாபார ரீதியாக இப்படம் ஜெயிக்க வேண்டும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

    இவ்வாறு கூறினார்.

    நடிகர் ரஞ்சித் அக்டோபர் 10ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'படம் இறுதி முயற்சி'.

    இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் - பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    ரஞ்சித்துடன், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். வடிவேல் - விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை தாமு கவனித்திருக்கிறார்.

    தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக படம் தயாராகி உள்ளது.

    இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்நிலையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டனர்.

    இவ்விழாவில் நடிகர் ரஞ்சித் பேசுகையில்,'' சினிமாவை.. நிலாவை ரசிப்பது போல் இதயத்தில் வைத்து ரசித்துக் கொண்டிருப்பேன். அதனால் எனக்கு சினிமா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.

    இந்தத் தருணத்தில் தான் இயக்குநர் வெங்கட் ஜனா என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். முதலில் இதற்கு தயக்கம் தெரிவித்தேன். அதன் பிறகு இந்தக் கதையில் நான் ஏன் நடிக்க வேண்டும்? என கேட்டேன்.

    இந்த கதையை திரைக்கதையாக எழுதி என்னிடம் வாசிக்குமாறு சொன்னார். அந்த கதையை படித்ததும் பிடித்துப் போனது. ஏனெனில் அந்த கதையின் வாழ்வியல் என்னை உலுக்கியது.

    இந்தப் படத்தில் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் கதைக்கு தேவையான உண்மைத் தன்மையை திரைக்கதையில் நம்பக தன்மையுடன் இயக்குநர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. எங்கும் போரடிக்கவில்லை. ஆனால் இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறுமா..? என்றால்.. என்னால் உறுதி கூற இயலாது. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால்... ரசிகர்களுக்கு பிடித்திருந்தால்... இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்" என்றார்.

    ராஜாசாப் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.

    பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தை தொடர்ந்து, கேரளாவிலும் படப்பிடிப்புகள் நடைபெற்றது.

    அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன.

    பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் டிரெயிலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    மார்க் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, ஈ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.

    இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக கே47' என பெயரிடப்பட்டது.

    சமீபத்தில், நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட்லுக் டைட்டிலை வெளியிட்டது. அதில், இப்படத்திற்கு மார்க் என்ற டைட்டில் வைக்கப்பட்டது.

    மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி அன்று முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
    • இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது.

    பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    இந்நிலையில் இப்படத்தில் முழு நேர கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார். இது தொடர்பான தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • செலினா கோமஸின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
    • செலினா கோம்ஸ்-யை இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

    பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ் பாடலாசிரியர் பென்னி ப்ளான்கோவை காதலித்து வந்தார்.

    இருவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் திருமணம் செய்துள்ளார். செலினா கோமஸின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    சில மாதங்களுக்கு முன்னர் தனது திருமணம் குறித்து பேசிய செலினா கோம்ஸ், "தனக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகவும், அதனால் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தற்போது வாடகைத் தாய் மற்றும் குழந்தை தத்தெடுப்பு போன்றவை இருப்பதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    33 வயதான செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் 400 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்ட முதல் பெண் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போதுவரை அவரை இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

    • இட்லி கடை படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.

    தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இட்லி கடை படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'இட்லி கடை' திரைப்படம் வெளியாக 2 நாட்கள் உள்ள நிலையில், படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

    • அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
    • அஜித்குமார் ரேஸிங் அணி பல கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    நடிகர் அஜித்குமார் ரேஸிங் அணி ஸ்பெயினில் நடைபெற்ற க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் கலந்து கொண்டது.

    இந்நிலையில், க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி 3ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

    • திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தை தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 17 ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது.

    அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.

    பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தில் டிரெயிலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ராஜாசாப் படத்தின் டிரெயிலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

     

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
    • நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பலரும் இரங்கலையும், தத்தமது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கரூர் கொடுந்துயரம், மிகப்பெரும் மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    என்னதான் ஆறுதல் படுத்தப்பார்த்தாலும் மனம் தவிப்பதை, என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கே இந்த நிலையென்றால், நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.

    இறைவா அந்தக் குடும்பங்களை ஆறுதல் படுத்து... இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய்உயிரை விடாமல், நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு" என்று தெரிவித்துள்ளார். 

    • 'யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார்.
    • சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது.

    இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற 'யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார்.

    இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் கூறுகையில்," நடிகர் சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்" என்கிறார்.

    படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

    சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடிகர் சசிகுமாருக்கும் படக்குழு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

    ×