என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் சங்கத்தின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு நடிகை ராதிகா பதிலளித்தார்.
- பெரிய நடிகர்கள் எங்களுக்கு ஆதரவாக கருத்து கூறினால் நன்றாக இருக்கும்.
தமிழ் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று வடபழனியில் நடைப்பெற்றது. அதில் நடிகர் சங்கத்தின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு நடிகை ராதிகா பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது " தயாரிப்பாளர்கள் ஹீரோக்களுக்கு நிறைய சம்பளத்தை கொடுக்கின்றனர். ஆங்கில திரையுலகில் பிளான் செய்கிற விஷயங்களில் 10 பர்சண்ட் இங்கு செய்தால் நம்மளால் பல பணங்களை நாம் சேமிக்க முடியும்.
பெரிய நடிகர்கள் எங்களுக்கு ஆதரவாக கருத்து கூறினால் நன்றாக இருக்கும். கேரவன் விவகாரம் குறித்து விளக்கம் தான் கூறினேன், புகார் ஏதும் அளிக்கவில்லை. நான் புகார் அளித்திருந்தால் தான், என்னிடம் விசாரணை நடத்துவார்கள்.
இதுபோன்ற ஒரு சமயத்தில் பெரிய பிரச்சினை வந்தபோது நடிகை ஒருவரை காப்பாற்றினேன். 4 நாட்களுக்கு முன்பு எனக்கு எஸ்.ஐ.டியில் இருந்து தொடர்பு கொண்டார்கள்.
படித்த இளைஞர்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள், அதனால் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது.
என்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சினைகள் வந்தாலும் நான் தனியாகதான் எதிர்கொண்டுள்ளேன். இப்போது வரை பெண்கள் போராடிதான் வருகிறேன்.
80களில் இருந்து நான் பார்க்கிறேன், எனக்கு தெரியும் தமிழ் திரையுலகிலும் இருக்கிறது. ஆனால், யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பெரிய ஆட்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்கத்தில் ஒரு வலிமையான சங்கம் அமைக்க நான் வலியுறுத்தி உள்ளேன். முன்னணி நடிகர்களின் மவுனம் தவறாக தான் தெரியும்" என்றார்.
- ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.
முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.
கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர். மேலும் படத்தில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா நடிக்கவுள்ளதை படக்குழு அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி கையில் 1421 என்ற எண் உடைய கூலி பேட்சை கையில் வைத்துள்ளார். இப்போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீனுராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார்
- திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் இதற்கு முன் இயக்கிய நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்ற திரைப்படங்களாகும்.
மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை ஜோ திரைப்படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
தங்கையை வளர்க்க அண்ணன் கஷ்டப்படுகிறார், கிடைக்கும் எல்லா வேலைகளை செய்கிறார் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது . திரைப்படம் மிகவும் எமோஷனலாக இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முன்பதிவுகள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டு ரசிகரகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். அசூர வேகத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவு நடந்து வருகிறது.
படத்தின் நான்காவது பாடலான `மட்ட' நேற்று யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர். மட்ட பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 70 லட்ச பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனர் வெங்கட் பிரபு சுவாரசிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். அதில் கோட் படத்தில் இடம் பெற்றுள்ள விசில் போடு பாடல் தான் படத்தின் ஓப்பனிக் பாடல், ஆனால் நீங்கள் கேட்ட வெர்ஷன் படத்தில் இருக்காது. அந்த பாடலின் திருவிழாக்கோலமான மற்றொரு வெர்ஷன் தான் தியேட்டரில் நீங்க பார்க்கப் போறீங்க" என்று கூறியுள்ளார்.
படத்தில் ஏகப்பட்ட சர்பிரைஸ் விஷயங்கள் இருக்கிறது என கூறி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள தி ரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.
- வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.
ஐசி 814 - The Kandahar Hijack' வெப் தொடருக்கு எதிர்ப்புக்குரல் எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் உள்ளடக்க தலைவருக்கு (CONTENT HEAD) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.
அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்.
இப்படத்தில் பயங்கரவாதிகளுக்கு 'சங்கர்' மற்றும் 'போலா' என்ற இந்து பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி நெட்ப்ளிக்ஸை தடை செய்யுங்கள் என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'.
- படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 ஆம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டனர்.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 ஆம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டனர்.
இதுக்குறித்து நெல்சன் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜெயிலர் 2 - க்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் அதற்கான அதிகார்ப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமே அதை வெளியிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
சென்ற முறை ஜெயிலர் திரைப்பட வெற்றிக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் நெல்சனுக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதேப்போல் இந்த முறை படம் வெற்றிக்கு என்ன வேண்டும் என சில கார்கள் மற்றும் பிரைவேட் ஜெட்டுகளின் புகைப்படங்கள் நிகழ்சசியின் தொகுப்பாளர்கள் காட்டியபோது . நெல்சன் `ஜெட் தான் எனக்கு வேண்டு. இலவசமாக கொடுக்கப்போறாங்க பெருசா வாங்கிட்டு அதை செகண்ட் ஹாண்ட் ல வித்துடுவேன்' என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அலெகா அத்வானி மங்களகரமான மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தார்.
- நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
நடிகர் ஆதார் ஜெயின் மற்றும் அலெகா அத்வானி தம்பதிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. கடற்கரையில் வைத்து பிரமாண்டமாக நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தனது முதல் கிரஷ் மற்றும் உயிர் தோழியை தன் வாழ்நாள் முழுக்க வாழ்க்கை துணையாக பயணிக்க கேட்ட ஆதார் ஜெயின், அலெகா கை விரலில் மோதிரம் அணிவித்தார். இதே போன்று அத்வானியும் ஆதார் கை விரலில் மோதிரம் அணிவித்தார். நிச்சயதார்த்த விழாவில் ஆதார் ஜெயின் அழகிய வெள்ளை மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்தார். அலெகா அத்வானி மங்களகரமான மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தார்.
திருமண நிச்சயத்தின் போது அழகிய மேடையில் ஜொலித்த தம்பதி, மோதிரம் மாற்றிக் கொண்டதும் முத்த மழையில் நனைந்தனர். இருவரின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன்.
- காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி உள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜூக்கு அன்பின் வாழ்த்துகள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
- விக்ரம் கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
- மணி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் உள்ளிட்டோர் நடித்த பாம்பே படம் கடந்த 1995-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் தேர்வானாவர் நடிகர் விக்ரம்தான். படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் அவர் நடித்து வந்த விக்ரமனின் புதிய மன்னர்கள் படத்திற்காக தாடி வளர்த்திருந்திருக்கிறார் விக்ரம். மணிரத்னமோ தாடியையும், மீசையையும் ஷேவ் செய்யச் சொன்னாராம். அது மட்டும் முடியாது சார் என்று கூறி படத்தில் இருந்து விலகிவிட்டாராம் விக்ரம்.
இறுதியில் அந்த கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மணி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. அந்த படத்தை இழந்த பிறகு 2 மாதங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் படத்தை இழந்ததை நினைத்து அழுவேன். அதன்பிறகு மணிரத்தினம் சார் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று சபதம் போட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

முதலில் பம்பாய் படத்தில் நடிக்க முடியாமல் போனாலும், மணிரத்னத்துடன் பணிபுரியும் விக்ரமின் கனவு இறுதியில் நனவாகியது. அவர் மணிரத்னம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் திரைப்படத்தில் ராவணனாக நடித்தார். பொன்னியின் செல்வன்: I மற்றும் II-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி.
- படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் செல்வேன். நாடு தற்போது உள்ள சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கங்கனா தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடமானது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி. இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அதை நீக்கும்படியும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக இந்திரா காந்தியின் படுகொலை, பஞ்சாப் கலவரங்கள் உள்ளிட்டவற்றை படத்தில் காட்டக்கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் செல்வேன். நாடு தற்போது உள்ள சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கங்கனா தெரிவித்திருந்தார்.
சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் எமர்ஜென்சி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
- கார்டியன் மற்றும் 105 மினிட்ஸ் என்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா. கடந்த 2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
சமீபத்தில், மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை - 2 படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். இந்தாண்டு கார்டியன் மற்றும் 105 மினிட்ஸ் என்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோவிலுக்கு தனது தாயுடன் வந்த ஹன்சிகா மோத்வானி வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
இந்நிலையில் மெய்யழகன் படத்தில் பாடல்கள் பாடிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து யாரோ இவன் யாரோ என்ற பாடல் உருவான விதமும், கமல்ஹாசன் பாடியதும் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர்.
இப்பாடல் மிகவும் எமோஷனலாக அமைந்து இருக்கிறது. கமல்ஹாசனின் குரல் இப்பாடலிற்கு உயிரோட்டத்தை தந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






