என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப்.
    • புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது பகீரா திரைப்படம்.

    இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

    புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டிசீரிஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும், படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் பாடல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்துள்ளார்.

    சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 29 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் உலகளவில் வசூலில் 52 கோடி ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் இன்று பெரும்பான்மையான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முன்பதிவுகள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டு ரசிகரகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    படத்தின் நான்காவது பாடலான `மட்ட' நேற்று யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர். மட்ட பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 70 லட்ச பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது.

    இப்பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்பாடலைக் குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை திரிஷா நடனமாடியுள்ளார் எனவும்.

    பாடலில் சிவகார்த்திகேயன் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. லிரிக் வீடியோவில் ஒரு கருப்பு நிற ஆடையில் ஒருவர் தோன்றுகிறார் அது சிவகார்த்திகேயன் என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சத்யராஜ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.
    • உபேந்திரா கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராவார்.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

    கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.

    தற்பொழுது படத்தில் உபேந்திரா நடிக்கவுள்ளதை படக்குழு அதிகார்ப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தில் அவர் கலீஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். உபேந்திரா கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராவார். இவர் சத்யா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஜீவா வருகை தந்தார்.
    • பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஜீவா வருகை தந்தார். அப்போது ஜீவா செய்தியாளர்களை சந்தித்தார்

    அப்பொழுது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "இது உண்மையில் மிகவும் தவறானதுதான். எல்லா துறைகளிலும் இதுபோல் நடக்கிறது. முன்பு 'மீ டூ' (Me Too) மூலம் பலர் தங்களுக்கு நடந்த பிரச்சினைகளை சொன்னார்கள். தற்போது மீண்டும் அதே போல் ஒரு விஷயம் நடக்கிறது. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். " என்றார்.

    மீண்டும் அதைப்பற்றியே கேட்டதால் ஜீவா கோபமாகி கேள்வி கேட்ட செய்தியாளரிடம் நான் அதற்கு ஏற்கனவே பதிலளித்து விட்டேன். இந்த விஷயம் கேரள சினிமாவில்தான் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுப்போல் பிரச்சனை கிடையாது" என தெரிவித்தார்.

    இவர் இப்படி கூறியது இப்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரபல பாடகியான சின்மயி ஜீவாவிடம் அவரது எக்ஸ் தளத்தில் " எப்படி நீங்கள் தமிழ் திரையுலகத்துறையில் பாலியல் சீண்டல்கள் இல்லை என்று கூற முடியும்" என கேல்வி எழுப்பியுள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனுராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் இதற்கு முன் இயக்கிய நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்ற திரைப்படங்களாகும்.

    தர்மதுரை திரைப்படம் விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

    மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனுராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்ல துரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரிகிடா சகா இதற்கு முன் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் ரியோராஜ் நடிப்பில் வெளிவந்த ஜோ படத்தில் ஏகன் நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரைப்படம் 22 ஆம் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் செப்டம்பர் 18 ஆம் தேதி திரையிடவுள்ளனர். ஆக்லெண்ட் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் என பெருமையை பெறுகிறது கோழிப்பண்ணை செல்லதுரை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    • மலையாள சினிமாவை தற்பொழுது இந்த ஹேமா அறிக்கை புரட்டிப் போட்டுள்ளது
    • இந்த பிரச்சனையை குறித்து தமிழ் திரைப்பட நடிகர்களிடம் கேள்வி கேட்டால். யாரும் தங்களுக்கு தெரியாது என மௌனம் காக்கின்றனர்.

    மலையாள சினிமாவை தற்பொழுது இந்த ஹேமா அறிக்கை புரட்டிப் போட்டுள்ளது. மலையாள சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

    இதுக்குறித்து நடிகர் மோகன்லால் நடிகர் சங்கம் சார்பாக அறிக்கையை வெளியிட்டார் அதில். நடிகர் சங்கம் இந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணைக்கு முழு ஒத்துளைப்பு தரும் என கூறியிருந்தார். தினமும் ஒவ்வொரு செய்திகளாக வெளிவந்துக் கொண்டே இருக்கிறது.

    இந்த பிரச்சனையை குறித்து தமிழ் திரைப்பட நடிகர்களிடம் கேள்வி கேட்டால். யாரும் தங்களுக்கு தெரியாது என மௌனம் காக்கின்றனர். நடிகர் ஜீவா, கார்த்தி, ரஜினி உள்பட அனைவரும் இதற்கு பதிலளிக்க மறுக்கின்றனர்.

    இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் மலையாள சினிமா ஹேமா அறிக்கையைப் பற்றி கேட்டனர் .ஆனால் ரஜினிகாந்த அதை பற்றி தனக்கு தெரியாது என கூறிவிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
    • இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியா, நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

    இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெய்யழகன் படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
    • இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

    இந்நிலையில் மெய்யழகன் படத்தில் பாடல்கள் பாடிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், "மெய்யழகன் படத்தில் பாடல்களை பாடிய உலகநாயகன் கமல்ஹாசன் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பிலும் ஆதரவில் நான் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என யார் கியாரண்டி கொடுப்பார்.
    • சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் வாழ்கிறோம்.

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை தரக்கோரியும் நடிகை சனம் ஷெட்டி தனியார் அமைப்புடன் இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார்.

    போராட்டத்தில் பேசிய அவர், "நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட சொல்கிறார்கள். இந்த சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன். நாளைக்கு என் வீட்டில் கூட இது போன்ற விஷயங்கள் நடந்தால் அப்போதும் எப்படி பொழுது போக்கிற்கான பதிவுகளை பகிர முடியும். இதனால் சினிமா வாய்ப்பு கூட போனால் போகட்டும். பரவாயில்லை. எது போனாலும் நான் பேசுவேன்.

    மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என யார் கியாரண்டி கொடுப்பார். ஹேமா அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் வாழ்கிறோம். இதில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. அதனால் இப்போது இருக்கும் தண்டனை போதாது. பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும். அதை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது.

    ஆணுறுப்பை வெட்டி வீசினால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும். நாட்டில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இருக்காது என்பதை உறுதி செய்ய முடியுமா? நீதிமன்றம், காவல்துறை, சட்டங்கள் எல்லாம் எதற்கு?"

    தமிழ்நாட்டில் 6 வயது 10 வயது குழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை நடக்குது. ஒருத்தனுக்கு நாம கொடுக்குற தண்டனையை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது" என்று ஆவேசமாக பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
    • தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை யடுத்து, மலையாள திரையுலகில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல நடிகைகள் கூறி வருகின்றனர்.

    அவர்கள் பல பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அந்த குழு நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் பல போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேலும் சிலர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    35-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சார்மிளா, தாயாரிப்பாளர் மோகனன், இயக்குனர் ஹரிகரன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கருத்து தெரிவித்துள்ளார்.

    1997-ம் ஆண்டு அர்ஜூனன் பிள்ளையும் அஞ்சு மக்களும் என்ற படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் எம்.பி.மோகனன், தயாரிப்பு மேலாளர் சண்முகன் மற்றும் அவர்களது நண்பர்கள் என்னை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால் ஓட்டல் அறையை விட்டு வெளியே வந்து நான் தப்பி விட்டேன்.

    அவர்கள், ஓட்டலில் இருந்த ஆண் உதவியாளர் ஒருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். இதனால் நான் பயந்துபோன நிலையில், குடும்ப உறுப்பினர்களின் சரியான நேர தலையீடு காரணமாக பயம் தவிர்க்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்

    இதேபோல பிரபல டைரக்டர் ஹரிகரனை நானும் என் நண்பரும் நடிகருமான விஷ்ணுவுடன் சந்தித்த போது, அட்ஜஸ்ட் பண்ண தயாரா? என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னதால் தனது பரிணயம் படத்தில் இருந்து எங்களை துண்டித்து விட்டார்.

    அட்ஜஸ்ட் செய்ய தயாராக இல்லாததால் நான் பல படங்களை இழந்துள்ளேன். 4 மொழிப் படங்களில் நான் நடித்திருந்தாலும், இது போன்ற பிரச்சனைகள் முக்கியமாக மலையாளத்துறையில் உள்ளன. இதுபற்றி புகார் கொடுக்க விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


    பிரபல பின்னணி குரல் கலைஞர் பாக்கியலட்சுமியும் தன்னிடம் சிலர் தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மலையாள சினிமாவில் நடிகர்களின் மாபியா என்பது மிகவும் வலுவானது.

    அவர்களின் கட்டுப்பாட்டில் தான் மலையாள திரை உலகம் உள்ளது. அவர்களால் நான் சில காலம் புறக்கணிக்கப்பட்டேன். என்னிடம் தவறாக நடக்க முயன்ற இயக்குநரை நான் கன்னத்தில் அறைந்தேன் என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நந்தமுரி பாலகிருஷ்ணா சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.
    • இதுவரை 100 படங்களுக்கு மேல் பாலய்யா நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பாலய்யா என அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார். தெலுங்கு திரையுலகில் இதுவரை 100 படங்களுக்கு மேல் பாலய்யா நடித்துள்ளார்.

    சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்த பாலய்யாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், ஆக்ஷன் கிங்! கலெக்ஷன் கிங்! டயலாக் டெலிவரி கிங்! என்னுடைய அன்புச் சகோதரர் பாலய்யா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×