என் மலர்
சினிமா செய்திகள்
- உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன்.
- நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
புதுடெல்லி:
மலையாள திரையுலகில் எழுந்துள்ள நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா மற்றும் தயாரிப்பாளர் ரஞ்சித், பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் நடிகர் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயசூர்யா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குகிறார்.
தமிழ் சினிமாவில் என் மன வானில், மனதோடு மழைக்காலம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சக்கரவியூகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் மீது நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2013-ம் ஆண்டு தொடுபுழாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது தன்னிடம் நடிகர் ஜெயசூர்யா அத்துமீறயதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை அளித்த புகார் மீது ஜெயசூர்யா மீது 2-வது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன் மீதான பாலியல் புகார்களை நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெயசூர்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒரு பொய் எப்போதும் உண்மையைவிட வேகமாக பயணிக்கும். ஆனால் உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்.
என் மீதான புகார்களை சட்ட ரீதியாக தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பான மீதமுள்ள நடவடிக்கைகளை எனது வக்கீல்கள் குழு கவனித்து கொள்ளும்.
மனசாட்சி இல்லாத எவரும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது. துன்புறுத்தலை போல, துன்புறுத்தப்படுதலும் வேதனையானது.
நமது நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பிறந்தநாளை மிகவும் வேதனையான பிறந்தநாளாக மாற்ற பங்களித்தவர்களுக்கு நன்றி.
இவ்வாறு ஜெயசூர்யா தனது பதிவில் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
- கொல்கத்தாவில் இம்மாதம் 14-ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன்.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சமீபத்தில் கொல்கத்தாவில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படியான சம்பவம் என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொல்கத்தாவில் இம்மாதம் 14-ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளி வைக்கிறேன். இந்த நிகழ்ச்சி பலராலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கங்குவா படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
- அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, "கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. அதனால் சூப்பர் ஸ்டார் படம் வர்றதுதான் சரியாக இருக்கும்.
கங்குவா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ, அப்போதுதான் அதன் பிறந்த நாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீங்கனு நம்புறேன்" என்று பேசினார்.
கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 வெளியாகவில்லை எனவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
- தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர்கள் அனிருத் , ஏ.ஆர். ரகுமான் வாழ்த்து.
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதிக்கு சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் நெல்சன் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை கொண்டுவந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலிக்கு வாழ்த்துக்கள். ஃபார்முலா 4 விளையாட்டு துறையின் மிகப்பெரிய முன்முயற்சியாக இருக்கும்" என்று வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நம்ம சென்னைக்கு கொண்டு வந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இது ஒரு த்ரில்லிங் ரைடாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில், "சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் முயற்சியால், இந்தியாவில் முதல் முறையாக, இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபார்முலா 4 கார் பந்தயம், சென்னையின் புதிய வரலாறாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நம்ம சென்னைக்கு கொண்டு வந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இது ஒரு பெரிய வெற்றியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயம் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைய போகிறது. இந்த ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
- தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த 'ரோமியோ', 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியானது. இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சில மாதங்களுக்கு முன் இருவரும் நெருங்கிய உறவினர்கள் இடையே நிச்சயம் செய்துக்கொண்டனர்.
- கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துருந்தார்.
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இருவரும் நெருங்கிய உறவினர்கள் இடையே நிச்சயம் செய்துக்கொண்டனர்.
கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அதிதி ராவ் சமீபத்தில் அளித்த நேர்காணலில் நடிகர் சித்தார்த் எப்படி அதிதி-க்கு காதல் ப்ரோப்போஸ் செய்தார் என கூறினார்.
அதில் அவர் கூறியதாவது " நான் என் பாட்டியுடம் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவரை எனக்கு சிறுவயதில் இருந்து மிகவும் பிடிக்கும். என்னுடைய பாட்டி ஐதரபாத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். ஒரு நாள் சித்தார்த் என்னிடம் வந்து அந்த பள்ளிக்கூடத்தை பார்க்க வேண்டும் என்றார். நானும் அழைத்துச் சென்றேன். அங்கு சென்றவுடன் இந்த பள்ளிக்கூடத்தில் எங்கு அதிகமாக நீ உன் சிறுவயதை செலவிட்டார் என கேட்டார். நான் அந்த இடத்தை காண்பித்தேன். திடீர் என்று கீழே முட்டிப் போட்டு எதையோ எடுத்தார். நான் அவர் ஷூலேஸ் கட்டுகிறாரோ என நினைத்தேன். ஆனால் அவர் முட்டிப்போட்டு எனக்கு ப்ரோப்போஸ் செய்தார். என்னுடைய பிடித்தமான இடத்திற்கு என்னை அழைத்து வந்து பாட்டியின் ஆசிர்வாதத்துடன் ப்ரோபோஸ் செய்வது அவருடைய பிளான்" என்று கூறினார்.
மேலும் அவரது திருமணம் வனப்பார்த்தியில் உள்ள 400 வருடங்கள் பழமையான கோவிலில் திருமணம் நடக்கப்போவதாக கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- கங்குவா படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியது.
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.
இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது .
கங்குவா படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்து இருந்தது. படத்தின் டிரைலர் மற்றும் ஃபயர் சாங் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் அண்மையில் பகிரங்கமான ஒரு தகவல் வெளியாகியது. கங்குவா திரைப்படம் சொன்ன தேதியான அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகாது. இதர்கு காரணம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளா? இல்லை ரஜினிகாந்த நடித்துள்ள வேட்டையன் திரைப்படமா? என்று.
இதுக்குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா செய்தியாளர் சந்திப்பில் " சூர்யா சார் திரைத்துரையில் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். இந்திய திரைத்துறைக்கு கங்குவா திரைப்படம் ஒரு பெருமையாக அமையும். படத்தின் ரிலீஸ் தேதிக் குறித்து விரைவில் அப்டேட் தருகிறோம்" என கூறியுள்ளார்.
இதனால் திரைப்படம் அக்டோபர் 10 வெளியாகவில்லை எனவும், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகிய படம் சர்தார்.
- இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகிய படம் சர்தார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.
கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சர்தார் 2 திரைப்பத்தின் பூஜையுடன் சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
சமீபத்தில் படக்குழு கொடுத்த தகவல்படி இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். அடுத்ததாக நடிகை ஆஷிகா ரங்கநாத் படக்குழு இணைந்தார்.
இப்பொழுது படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். ரஜிஷா இதற்கு முன் சர்தார் முதல் பாகத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்று வருகிறது
- கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார்.
அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார்.'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்று வருகிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இடம் பெற்றுள்ள் பாடல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்
வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.
முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.
கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.
தற்பொழுது படத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளதை படக்குழு அதிகார்ப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தில் அவர் ராஜசேகர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் 38 வருடங்களுக்கு பின் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோட் திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- கோட் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கியது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் 4-வது பாடல் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு ஓன்றை விடுத்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் கோட் திரைப்பட டிக்கெட்டை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
கோட் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கிய நிலையில் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் நான்காவது பாடலான மட்ட தற்பொழுது வெளியாகியுள்ளது.
மங்காத்தா படம் வெளியான அதே தேதியில் கோட் படத்தின் மட்ட பாடல் மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளனர்.
இப்பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






