இப்படிதான் சித்தார்த் எனக்கு ப்ரோபோஸ் செய்தார் - அதிதி சொன்ன சுவாரசிய கதை

சில மாதங்களுக்கு முன் இருவரும் நெருங்கிய உறவினர்கள் இடையே நிச்சயம் செய்துக்கொண்டனர்.கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துருந்தார்.
இப்படிதான் சித்தார்த் எனக்கு ப்ரோபோஸ் செய்தார் -  அதிதி சொன்ன சுவாரசிய கதை
Published on

 நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இருவரும் நெருங்கிய உறவினர்கள் இடையே நிச்சயம் செய்துக்கொண்டனர்.

கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அதிதி ராவ் சமீபத்தில் அளித்த நேர்காணலில் நடிகர் சித்தார்த் எப்படி அதிதி-க்கு காதல் ப்ரோப்போஸ் செய்தார் என கூறினார்.

அதில் அவர் கூறியதாவது " நான் என் பாட்டியுடம் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவரை எனக்கு சிறுவயதில் இருந்து மிகவும் பிடிக்கும். என்னுடைய பாட்டி ஐதரபாத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். ஒரு நாள் சித்தார்த் என்னிடம் வந்து அந்த பள்ளிக்கூடத்தை பார்க்க வேண்டும் என்றார். நானும் அழைத்துச் சென்றேன். அங்கு சென்றவுடன் இந்த பள்ளிக்கூடத்தில் எங்கு அதிகமாக நீ உன் சிறுவயதை செலவிட்டார் என கேட்டார். நான் அந்த இடத்தை காண்பித்தேன். திடீர் என்று கீழே முட்டிப் போட்டு எதையோ எடுத்தார். நான் அவர் ஷூலேஸ் கட்டுகிறாரோ என நினைத்தேன். ஆனால் அவர் முட்டிப்போட்டு எனக்கு ப்ரோப்போஸ் செய்தார். என்னுடைய பிடித்தமான இடத்திற்கு என்னை அழைத்து வந்து பாட்டியின் ஆசிர்வாதத்துடன் ப்ரோபோஸ் செய்வது அவருடைய பிளான்" என்று கூறினார்.

மேலும் அவரது திருமணம் வனப்பார்த்தியில் உள்ள 400 வருடங்கள் பழமையான கோவிலில் திருமணம் நடக்கப்போவதாக கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com