என் மலர்
சினிமா செய்திகள்
- சில நேரங்களில் சில மனிதர்கள். படத்தை அறிமுக இயக்குனரான விஷால் வெங்கட் இயக்கினார்.
- படத்திற்கு பாம்ப் என பெயர் வைத்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், அஞ்சு குரியன், ரித்விகா மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இப்படத்தை அறிமுக இயக்குனரான விஷால் வெங்கட் இயக்கினார். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து இயக்குனர் விஷால் வெங்கட் அடுத்ததாக அர்ஜூன் தாஸ் நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். படத்திற்கு பாம்ப் என பெயர் வைத்துள்ளனர்.
இப்படத்தில் அர்ஜூன் தாஸுடன் காளி வெங்கட், ஷிவாத்மிகா, நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து ஜெம்பிரியோ பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். பாம்ப் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பி.எம் ஒளிப்பதிவு மேற்கொள்ள , பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலியல் புகார் குறித்து விசாரிக்க போலீஸ் உள்ளது. அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
- மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறேன்.
திருவனந்தபுரத்தில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் லோகோவை வெளியிட்ட நடிகர் மோகன்லால், கேரள திரையுலகை உலுக்கிய பாலியல் புகார்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, இங்கே தான் இருக்கிறேன்.
* மலையாள திரையுலகினரின் அம்மா சங்கத்தில் நான் 2 முறை பொறுப்பில் இருந்துள்ளேன்.
* பாலியல் புகார் குறித்து விசாரிக்க போலீஸ் உள்ளது. அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
* பாலியல் புகார்களால் பெருமை மிகுந்த கேரள சினிமா சிதைந்து போயுள்ளது.
* மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறேன்.
* குழு கலைக்கப்பட்டாலும் சங்கத்தின் செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை, பணிகள் தொடர்கிறது.
* ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியது ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் தான்.
* பாலியல் குற்றச்சாட்டுகளால் கேரள நடிகர் சங்கம் சிதறி விடக்கூடாது.
* மலையாள நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டது. அதன் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.
* பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
* சங்கத்தில் இருந்து விலகினாலும் இந்த பிரச்சனைகளை கூர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருந்தேன்.
* கேரள சினிமாவை தகர்த்து விட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது.
- இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
இப்படத்தில் நடித்த நடிகர்களில் சிலர் டப்பிங் பேசுவதாக படக்குழு சார்பில் அப்டேட் கொடுக்கப்பட்டது. இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கேரவன் செல்ல அச்சப்பட்டு ஓட்டல் அறைக்கு சென்று உடை மாற்றினேன்.
- ஆண்கள் யாரும் நடிகைகளுக்கு ஆதரவாக பேசவில்லை.
பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்பட உலகம் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு, இயக்குனர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது:
* மலையாள திரையுலகில் நடிகைகளின் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
* கேரவனில் கேமரா பொருத்தி நடிகைகள் உடை மாற்றும் வீடியோவை ஆண்கள் ரசித்ததை பார்த்தேன்.
* கேரவன் செல்ல அச்சப்பட்டு ஓட்டல் அறைக்கு சென்று உடை மாற்றினேன்.
* திரையுலக சிஸ்டமே சரியாக இல்லை.
*ஆண்கள் யாரும் நடிகைகளுக்கு ஆதரவாக பேசவில்லை
* நடிகைகளின் அறை கதவை தட்டும் நிலை பல திரையுலகிலும் உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கையை சமந்தா பாராட்டினார்.
- இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்.
மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.
நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையை சமந்தா பாராட்டினார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் ஸ்டோரி வைத்துள்ளார். அதில், "தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் வுமன் இன் கலக்ட்டிவ் சினிமா அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம். இதே போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது.
கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.
- வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி எமெர்ஜென்சி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடமானது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி.
இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தில் சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை ரத்து செய்து படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் பரம்ஜித் சிங் சர்னா, மத்திய சென்சார் போர்டு தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
மேலும் எமர்ஜென்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கங்கனா, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்று முன்பு விமர்சித்திருந்தார்.
அண்மையில், நாளிதழுக்குபேட்டி அளித்த கங்கனா ரனாவத், விவசாயிகள் போராட்டம் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அதில், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும் என தெரிவித்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த துறையில் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர்.
- சின்மயி, ஸ்ரீரெட்டி போன்றோருக்கு தடை விதித்து விட்டனர்.
மலையாளத் திரைத்துறையில் புயலை கிளப்பி உள்ள ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகை குட்டி பத்மினி கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது:-
''மலையாள பட உலகில் நடந்துள்ள விஷயங்கள் குறித்து நான் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பே பேசி இருக்கிறேன். அது உண்மைதான். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
அதேபோல் தொலைக்காட்சி தொடர்களில நடிக்கும் நடிகைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். டி.வி. நடிகைகளை ஒப்பந்தம் செய்யும்போது நீங்கள் யாருக்கும் கீழ்பணிய வேண்டாம். ஏதேனும் பிரச்சனை வந்தால் எனக்கு போன் செய்யுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறேன்.
இந்த துறையில் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர். ஆண்கள் மீது குற்றம் சொல்லும் அதே வேளையில் பெண்களையும் குற்றம் சொல்லுவேன்.
நீங்கள் எதற்காக அதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். முடியாது என்று சொல்ல வேண்டும். சில நேரம் மறுக்கும் நடிகைகளை ஒதுக்கி விடும் நிலைமையும் இருக்கிறது.

சின்மயி, ஸ்ரீரெட்டி போன்றோருக்கு தடை விதித்து விட்டனர்.
பாலியல் சீண்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர்- நடிகைகள் காதல் வயப்படுவது அவர்கள் முடிவு. ஆனால் நடிக்கும் இடத்தில் நீ ஒப்புக்கொண்டால்தான் வேலை கொடுப்பேன் என்று சொல்வது தவறு.
தயாரிப்பு மானேஜர் உள்ளிட்ட சிலரும் பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். போக்சோ சட்டம் மாதிரி வரவேண்டும்.
நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன். அது வெளியாகும்போது பல பெரிய நடிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். 95 சதவீதம் பெண்களை பயன்படுத்தி விட்டு வேலை கொடுப்பது இல்லை. எனக்கும் நடந்து இருக்கிறது.
எனக்கு 10 வயதாகும்போது பெரிய நிறுவனத்தில் ஒருவர் தவறாக நடந்தார். என் அம்மா தட்டி கேட்டதும் வெளியேற்றி விட்டனர்.
சினிமாவில் மட்டுமன்றி சின்னத்திரையிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும்
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். தற்பொழுது அவர் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விமலுக்கு கேக் வெட்டி படக்குழு கொண்டாடினர். இதையொட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது.
- ஜமா படம் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. ஜமா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
படம் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகியுள்ளது. ஜமா திரைப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் இப்படத்தை காண தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல்.
- மங்காத்தா படம் வெளியான தேதியில் கோட் படத்தின் 4வது பாடல் வெளியீடு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாளை படத்தின் 4- வது பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தனர். இப்பாடல் ஒரு ஸ்பெஷல் சாங் எனவும். இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மேலும், மங்காத்தா படம் வெளியான தேதியில் கோட் படத்தின் 4வது பாடல் வெளியாகவுள்ளதாகவும், இதற்கு மேல் என்ன வேண்டும் எனவும் இயக்குனர் வெட்கெட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிலையில், கோட் படத்தின் 4வது பாடலான "மட்ட" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, அச்சனா கல்பாதி தனது எக்ஸ் பக்கத்தில், " பல்வேறு காரணங்களுக்காக இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல்" என்றும் மட்ட பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பாடலாசிரியர் விவேக்," இது இளையதளபதியின் ப்ளாஸ்ட்.. ஆட்டநாயகன் நடனத்திற்காக காத்திருங்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
- கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ. 92 லட்சம் கொடுத்து புதிய லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ளார்.
- நிறுவனம் சார்பில் முறையான தீர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
பிரபல நடிகை ரிமி சென் தான் வாங்கிய ஆடம்பர லேண்ட் ரோவர் காரில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் சட்டப் போராட்டத்தையும் துவங்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தனக்கு ரூ. 50 கோடி நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தனது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை ரிமி ரூ. 92 லட்சம் கொடுத்து புதிய லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ளார். புதிய கார் வாங்கியதில் இருந்தே, அதில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டதாக ரிமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காரில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நிறுவனம் சார்பில் முறையான தீர்வு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
காரின் சன்ரூஃப், சவுண்ட் சிஸ்டம் மற்றும் ரியர்-என்ட் கேமரா உள்ளிட்டவை சரியாக செயல்படவில்லை என ரிமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான புகார்களுக்கு நிறுவனம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான ரிமி நீதிமன்ற படிகளை ஏறியுள்ளார்.
இது தொடர்பான மனுவில் கார் விவகாரத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் தனக்கு ரூ. 50 கோடி நஷ்ட ஈடு, வழக்கை நடத்துவதற்கு ரூ. 10 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பாழாகி இருக்கும் காரை மாற்றிக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.
- படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்
கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். பாடல் புது வைப் செய்யும் விதமாக அமைந்துள்ளது. பாடலின் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






