என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

    கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

    நடிகை ஸ்ருதிஹாசன் கூலி படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகரப்பூரவமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ப்ரீத்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கையில் ஒரு கோடாரியுடன் ஸ்ருதிஹாசன் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.
    • திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

    'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

    கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகி மக்கள் பலரால் பார்க்கப்பட்டது. திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும்.

    திரைப்படம் எடுக்க காலவகாசம் 3 ஆண்டுகள் ஆகும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனால் அடுத்த பாகம் 2028 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார்.
    • நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.

    அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார்.'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெறவுள்ளது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இதனால் இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரை உலகில் பாலியல் பலாத்கார அத்து மீறல்கள் அதிகளவு நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை நடத்த கேரள அரசு உத்தர விட்டது. அதன்படி நீதிபதி ஹேமா மலையாள திரையுலகில் நடக்கும் அத்துமீறல்களை ஆய்வு செய்து கண்டுபிடித்து பெரிய அறிக்கையாக தயாரித்தார். கடந்த 2019-ம் ஆண்டு அந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.

    கடந்த சில ஆண்டுகளாக அந்த அறிக்கை வெளி யிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டும் வெளி யானது. அதில் வெளியான தகவல்கள் மலையாள பட உலகை சுனாமியாக சுருட்டி வீசும் வகையில் புயலை கிளப்பி உள்ளது.

    நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் மினு குரியன், ஸ்ரீலேகா மித்ரா உள்பட பல நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறினார்கள். நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடைவேள பாபு, சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்பட பலர் மீது பாலியல் பலாத்கார புகார்கள் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மட்டும் 376, 354, 509 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன.

    நடிகர் முகேஷ் மீது பதிவாகி இருக்கும் 376-வது பிரிவு கற்பழிப்புக்கான தண்டனை பெற்று தரும் சட்டப்பிரிவாகும். இந்த பிரிவில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளியில் வர இயலாது. இதை அறிந்த நடிகர் முகேஷ் அவசரம் அவசரமாக எர்ணாகுளம் செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதன் பேரில் செப்டம்பர் 3-ந்தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று எர்ணாகுளம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் நடிகர் முகேஷ் சற்று நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறார்.

    என்றாலும் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரளாவில் எதிர்ப்பு வலுக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மகளிர் அமைப்புகள் முகேசை கைது செய்யக்கோரி தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் நடிகர் முகேசை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

    நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ், பா.ஜ.க. போர்க்கொடி தூக்கி உள்ளது.

    இதற்கிடையே கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடிகர் முகேசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனிராஜா கூறுகையில், "நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க தார்மீக தகுதியை இழந்துவிட்டார். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் மாநில அரசின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

    தோழமை கட்சிகள் முகேசை எதிர்ப்பதால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. என்றாலும் நடிகர் முகேசை ராஜினாமா செய்ய வைத்தால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறார்கள்.

    எனவே கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பதிலடி நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளனர்.

    கேரள கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி அமைப்பாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்தியில், "காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளது. அவர்கள் இதுவரை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தால் முகேசிடமும் அந்த கோரிக்கையை வைக்கலாம்" என்று கூறியுள்ளார்.

    இந்தநிலையில் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் அனைவரும் நடிகர் முகேசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நடிகர் முகேஷ் விலக மாட்டார் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மலையாள நடிகைகள் பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அவர்கள் நடிகைகளை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதைத்தொடர்ந்து ஆதாரங்களை திரட்டத் தொடங்கி உள்ளனர்.

    நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் திருவனந்தபுரத்தில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை சந்தித்து விளக்கங்களை கொடுத்தனர். நடிகர் சித்திக்குக்கு எதிராக நடிகை தெரிவித்த பாலியல் பலாத்கார புகார் வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதன் காரணமாக பாலியல் பலாத்கார விவகாரத்தில் நடிகர்கள் மீது கைது நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    நடிகர் முகேஷ் போல நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் ஆகியோர் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளன. நடிகர் ஜெயசூர்யா மீது 376, 509 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நடிகர் ஜெயசூர்யா மீது இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதனால் நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கேரளாவில் புகழ் பெற்ற எழுத்தாளர் பத்மநாபன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீதிபதி ஹேமா ஆணையம் கொடுத்த அறிக்கையின் அனைத்து பகுதிகளும் வெளியிடப்படவில்லை. இதனால் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

    கேரளாவில் நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்த சின்ன மீன்கள் தான் சிக்கி உள்ளன. பெரிய திமிங்கலங்கள் தப்பி உள்ளன. அறிக்கையின் முழு விவரம் வெளியானால் பல கசப்பான கதைகள் வெளிச்சத்துக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான படம் தங்கலான்.
    • தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

    இதோடு இந்த படம் இன்று (ஆக்ஸ்ட் 30) முதல் இந்தி மொழியிலும் தங்கலான் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ.
    • சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் நடிகைக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ ஒன்று வெளியாகி வைராகி வருகிறது.

    இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை பீனா ஆன்டனி , `இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் சித்திக்கின் மகன் ஷாபி மரணம் அடைந்த போது என்னால் செல்ல முடியவில்லை. அதன்பின் இதனால் ஒரு நிகழ்வின் போது அவரை சந்திக்க நேர்ந்தது.

    அப்போது அவரை ஆறுதல் படுத்துவதற்காக கட்டித்தழுவியதாகவும் சித்திக்கின் மகன் ஷாபி என்மீது அன்பாக இருந்ததால் அவனது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

    ஆனால் இப்போது அந்த வீடியோவை தவறான கருத்துக்களுடன் நெட்டிசன்கள் பகிர்ந்து தன்னையும், தன்னுடைய குடும்பத்தினரையும் வேதனைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றும் கூறி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • அவர் நள்ளிரவில் குடிபோதையில் திரும்பியபோது, ஏன் தாமதமாக வந்தீர்கள் என்று நான் கேட்டேன்.

    பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்பட உலகம் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு, இயக்குனர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பாலியல் புகார் குறித்து நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வுமான நடிகர் முகேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்நிலையில் நடிகர் முகேஷ் பற்றி முன்னாள் மனைவி நடிகை சரிதா பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

    நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

    முகேசுடன் சேர்ந்து வாழ்ந்தபோது அனுபவித்த கொடுமைகளை நடிகை சரிதா பகிர்ந்துள்ளார்.

    நான் கர்ப்பிணியாக இருந்தபோது சண்டை போட்டு என்னை வயிற்றில் அவர் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அப்போது ஒரு நல்ல நடிகை என்று அவர் கூறினார்.

    9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஒன்றாக இரவு உணவிற்கு சென்றோம். திரும்பி வரும்போது, நான் காரில் ஏற முயன்றபோது, அவர் என்னை ஏமாற்றிக்கொண்டே காரை முன்னும் பின்னுமாக எடுத்துச் சென்றார்.

    காரின் பின்னால் ஓடும்போது நான் விழுந்தேன். கீழே உட்கார்ந்து அழுது விட்டேன்.

    ஒருமுறை, அவர் நள்ளிரவில் குடிபோதையில் திரும்பியபோது, ஏன் தாமதமாக வந்தீர்கள் என்று நான் கேட்டேன்.

    அவர் என்னை முடியை பிடித்து இழுத்து, தரையில் இழுத்து சென்று அடித்தார்," என்று அவர் கூறினார்.

    அதன்பின்னர் அவர் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.

    பின்னர் ஒரு நாள் முகேஷின் தந்தை என்னை பார்க்க வீட்டுக்கு வந்தார். அவர் என் கையை பிடித்து முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை என கூறி அழுததோடு, அவரைப்பற்றி யாரிடமும் வெளியே சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கினார். இதனால் அவர் உயிருடன் இருந்தவரை அதை வெளியில் சொல்லவில்லை" என சரிதா கூறி இருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
    • சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

    நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான "மன்னர் வகையறா" திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார்.

    படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால், கோபி கடந்த 2020ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

    இதனை மழுங்கடிப்பதற்காகவும், பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகாரை நடிகர் விமல் அளித்தார்.

    இந்நிலையில் விமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விசாரணயின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரசம் ஒப்பந்தம் ஏற்பட்டு, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 3 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

    ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ரூ.3 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

    • உங்களுக்குப் பிடிக்காத பீல்டில் இறங்கி அதைப் பற்றி கவலைப்படாமல், நீங்கள் விரும்பும் வேலையைச் செய்யுங்கள்.
    • வாயில்லா பிராணிகளால் நமக்குள் இருக்கும் ஸ்ட்ரெஸ், சோர்வு போய்விடும்.

    சென்னை:

    தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில யோசனைகள் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது:-

    சந்தோஷமாக வாழ நான் சில டெக்னிக்குகளை கடைப்பிடிக்கிறேன். என்னை மாதிரி அழகாக ஆரோக்கியமாக வாழ இதை செய்யுங்கள்.

    நல்ல உணவை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழ தரமான தூய்மையான உணவு முக்கியம். இனிப்பு சாப்பிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் வரும். காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லதல்ல என்று சிலர் சொல்வார்கள். ஆனால் கொஞ்சமாக காபி அருந்தலாம். அது உற்சாகம் தரும்.

    பயணம் செய்வதற்கு வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்கள் படிப்பது நல்ல பழக்கம். உடலுக்கு தேவையான தூக்கம் அவசியம். இஷ்டமில்லாத பீல்டில் இறங்கி அதற்காக தினமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட மனதுக்கு பிடித்த பணியை செய்யுங்கள்.

    மனதார சிரியுங்கள். சிலர் வாழ்க்கையில் சிரிப்பது என்பதையே மறந்து விட்டு எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி செய்யாதீர்கள். வாயில்லா பிராணிகளால் நமக்குள் இருக்கும் ஸ்ட்ரெஸ், சோர்வு போய்விடும். எனக்கு எனது அவுரா நாய் குட்டியுடன் விளையாடுவது சந்தோஷத்தை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்.
    • ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாது, அவங்க செஞ்ச சேட்டைகள் தான் எனக்கு தெரியும்.

    ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார்.

    அப்போது உங்கள் மீதே ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்தாரே என்கிற கேள்வி கேட்டதும், சிரித்துக்கொண்டே பதிலளித்த விஷால், ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாது, அவங்க செஞ்ச சேட்டைகள் தான் எனக்கு தெரியும் என கூறினார்.

    விஷாலின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ரீரெட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் உமனைசரான நீ பேசலாமா? ஒரு பெண்ணை பற்றி பேசும் போது உன்னுடைய நாக்கு ரொம்பவே கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். உலகத்துக்கே தெரியும் நீ எவ்ளோ பெரிய ஃபிராடு என்று ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் போது உன் உடல் ஏன் நடுங்குது, நீயெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போறியா, அதெல்லாம் சரி உன்னுடன் இருந்த பெண்கள் எல்லாம் உன்னை ஏன் விட்டுச் சென்றனர்.

    உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் நின்றுப் போனது, இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறை பதில் சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் எனக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. மேலும், என் வீட்டில் நிறைய வித விதமான செருப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
    • விடுதலை 2 ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் விடுதலை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன்.

    இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, சூரி, எஸ்.ஜே சூர்யா மற்றும் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் விடுதலை பாகம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில் ஒரு போஸ்டரில் விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் அன்பாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படமும் மற்றொரு போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக கையில் கத்தியுடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது. மேலும் போஸ்டரில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் .
    • இதில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

    கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த 'மாயா, 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டானாக்காரன்', 'இறுகப்பற்று' படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்.

    மீண்டும், வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு "பிளாக்" என்று பெயர் வைத்துள்ளார்கள் .

    ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம்.

    நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படி பட்ட கதை தான் #பிளாக்.

    நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிகொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும்..

    என்கிறார் டைரக்டர் கே.ஜி.பாலசுப்ரமணி

    சென்னையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியீட்டு வேலைகள் நடை பெற்று வருகிறது. திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×