உலகளவில் ரூ. 100 கோடி வசூலை கடந்த தங்கலான்

விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான படம் தங்கலான்.தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Thangalaan
Published on

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

இதோடு இந்த படம் இன்று (ஆக்ஸ்ட் 30) முதல் இந்தி மொழியிலும் தங்கலான் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னதாக இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com