மீண்டும் இணையும் லோக்கி - ஸ்ருதி கூட்டணி - போஸ்டர் வெளியானது

வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
மீண்டும் இணையும் லோக்கி - ஸ்ருதி கூட்டணி - போஸ்டர் வெளியானது
Published on

வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் கூலி படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகரப்பூரவமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ப்ரீத்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கையில் ஒரு கோடாரியுடன் ஸ்ருதிஹாசன் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com