நடிகர் சித்திக்கை பிரபல நடிகை கட்டித்தழுவும் வீடியோ வைரல்- நடிகையின் ஆதங்கம்!

நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ.சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சித்திக்கை பிரபல நடிகை கட்டித்தழுவும் வீடியோ வைரல்- நடிகையின் ஆதங்கம்!
Published on

கேரளாவில் நடிகைக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ ஒன்று வெளியாகி வைராகி வருகிறது.

இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை பீனா ஆன்டனி , `இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் சித்திக்கின் மகன் ஷாபி மரணம் அடைந்த போது என்னால் செல்ல முடியவில்லை. அதன்பின் இதனால் ஒரு நிகழ்வின் போது அவரை சந்திக்க நேர்ந்தது.

அப்போது அவரை ஆறுதல் படுத்துவதற்காக கட்டித்தழுவியதாகவும் சித்திக்கின் மகன் ஷாபி என்மீது அன்பாக இருந்ததால் அவனது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இப்போது அந்த வீடியோவை தவறான கருத்துக்களுடன் நெட்டிசன்கள் பகிர்ந்து தன்னையும், தன்னுடைய குடும்பத்தினரையும் வேதனைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றும் கூறி உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com